வீடியோ கேம் விளையாடுவதால் குழந்தைகளுக்கு நிறைய நன்மைகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?… ஆம், வீடியோ கேம்கள் குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
தங்களைப் பார்த்து குழந்தைகள் வீடியோ கேம் விளையாடுவதாக பெற்றோர்கள் வேதனைப்படுவது உண்டு. மேலும் வீட்டிற்குள்ளேயே அடைந்து வீடியோ கேம் விளையாடுவதால் நண்பர்களுடன் பழகுவது, வைட்டமின் டி குறைபாடு, சமூக பழக்க வழக்கம், இளம் வயதிலேயே கண்ணாடி போடுவது, படிப்பில் கவனமின்மை போன்ற பிரச்சனைகளை குழந்தைகள் எதிர்கொள்கின்றனர்.
இருப்பினும் சிக்கலான, தீர்வுகளை கண்டறியக்கூடிய வீடியோ கேம்களை விளையாடுவது சிந்தனைகளை தூண்டி, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக நிபுணார்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: Sunscreen Benefits: தினமும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டுமா?
இது குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு குழந்தைகளின் மன ஆரோக்கியத்திற்கு வீடியோ கேம்கள் நல்லது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், வீடியோ கேமிங் மீது அதிக ஆர்வம் கொள்வது, அடிமையாவது போன்றவை ஆரோக்கியத்தை பாதிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ கேம்களின் நன்மைகள்:
வீடியோ கேம்களை விளையாடுவதால் மன ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். வீடியோ கேம்கள் மன அழுத்தத்தைப் போக்கவும், உங்கள் மனதை ஆக்கிரமிக்கவும் உதவுகிறது. அப்படி என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கக்கூடும் என பார்க்கலாம்...
சிந்தனையை தூண்டும்:
சில வீடியோ கேம்கள் மிகவும் கடினமானவை. அந்த விளையாட்டுகளை விளையாட அல்லது எதிராளியை வெல்ல ஒருவர் கடுமையாக சிந்திக்க வேண்டும். ஆம், இந்த எல்லா காரணங்களுக்காகவும் வீடியோ கேம்கள் உங்களை அடிக்கடி சிந்திக்க வைக்கின்றன. நீங்கள் வீடியோ கேம்களை விளையாடும்போது, உங்கள் மூளையின் ஒவ்வொரு பகுதியும் உயர் மட்ட சிந்தனையை அடைய உதவும்.
விளையாட்டின் சிக்கலைப் பொறுத்து, நீங்கள் விரைவாக சிந்திக்க வேண்டும், வியூகம் வகுத்து பகுப்பாய்வு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட வீடியோ கேம்கள் மூளையின் ஆழமான பகுதியைக் கூட செயல்படத் தூண்டுகின்றன. இது வளர்ச்சி மற்றும் விமர்சன சிந்தனை திறன்களை மேம்படுத்துவதோடு, மூளையை கூர்மையாக்குகிறது.
மகிழ்ச்சி அதிகரிக்கும்:
எளிதில் ஜெயிக்கவே முடியாத ஒரு ஆன்லைன் கேமை குழந்தைகள் தங்களது திறமையை பயன்படுத்தி வெற்றி பெறுவது அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது. அத்துடன் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையையும், கடினமான வெற்றி இலக்குகளை நோக்கி முன்னேறக்கூடிய மன உறுதியையும் தருகிறது.
குறிப்பாக கோப்பைகள் அல்லது பேட்ஜ்களை வழங்கும் கேம்களை விளையாடும்போது குழந்தைகளுக்கு மிகப்பெரிய சாதனை படைத்த உணர்வு கிடைப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் மேலும் சாதிக்க விரும்புகிறீர்கள். எப்போதும் அடுத்தடுத்த சவால் நிறைந்த வாய்ப்புகளுக்காக காத்திருக்க பழகுகிறார்கள்.
மனநலத்தை மேம்படுத்துமா?
வீடியோ கேம்கள் உங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் எனக்கூறப்படுகிறது. உதாரணமாக, மனதளவில் ஏதாவது பாதிக்கப்பட்டிருந்தால், அப்போது வீடியோ கேம் விளையாடுவது குழந்தைகளின் காயத்தை ஆற்றி, உற்சாகமூட்டும்.
வீடியோ கேம்கள் உங்களுக்கு வலி மற்றும் உணர்ச்சி அதிர்ச்சியிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன. பதட்டம், மனச்சோர்வு, கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு (ADHD) மற்றும் பிந்தைய மனஉளைச்சல் சீர்கேடு (PTSD) போன்ற மனநல கோளாறுகளைக் கையாளும் நபர்களுக்கு வீடியோ கேம்கள் மிகவும் உதவியாக உள்ளன.
சமூக ரீதியாக தொடர்பு கொள்ளுங்கள்:
தற்போதைய வீடியோ கேம்கள் சமூக தொடர்புகளை அதிகரிக்கும் வகையில் உருவாக்கப்படுகின்றன. அதாவது வீட்டில் இருந்த படியே அண்டை வீடு அல்லது அண்டை நாட்டில் இருப்பவருடன் கூட நட்பாகி விளையாடலாம். இது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தில் சாதகமான விளைவைக் கொண்டுள்ளது.
உணர்ச்சியை சரி செய்கிறது:
முன்பெல்லாம் குழந்தைகள் விளையாட்டில் தோல்வி அடைந்தால் வருத்தத்துடன் வீடு திரும்புவார்கள்.
ஆனால் இப்போது குழந்தைகளிடையே விளையாடப்படும் ஒரு சில ஆன்லைன் வீடியோ கேம்கள் தோல்வியை எப்படி சமாளிப்பது மற்றும் தொடர்ந்து முயற்சி செய்வது எப்படி என்பதை கற்றுக்கொடுக்கின்றன. இதனால் குழந்தைகளின் மன வளர்ச்சி மேம்படுவதாக கூறப்படுகிறது.
வியூக வீடியோ கேம்கள்:
பைக் ரேஸ், ரோல் பிளேயிங், புதிர் தொடர்பான விளையாட்டுகள், குழந்தைகளை புத்திசாலிகளாக மாற்றுகின்றன. இவை குழந்தைகளின் முடிவெடுக்கும் திறன், சிந்தனை, சிக்கல்களை தீர்ப்பது போன்ற பல்வேறு விஷயங்களை தூண்டுகிறது.
எனவே ஆன்லைன் வீடியோ கேமில் சிந்தனையைத் தூண்டக்கூடிய விளையாட்டுக்களை பெற்றோர்கள் பரிந்துரைப்பது குழந்தைகளுக்கு நல்லது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Image Source:Freepik