$
சம்மர் ஆரம்பித்தால் தான் நிறைய பேருக்கு சன்ஸ்கிரீன் பற்றிய நியாபகமே வருகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், சருமத்தை பராமரிக்க நினைப்பவர்கள் கோடை காலம் மட்டுமின்றி வருடம் முழுவதுமே சன்ஸ்கீரினை பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் கோடை காலமோ, குளிர் காலமோ சூரியனின் புற ஊதாக்கதிர் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் மிகவும் முக்கியமானதாக உள்ளது.

இதையும் படிங்க: Tattoo Care: டாட்டூ குத்திய பின்.. இதையெல்லாம் கண்டிப்பா மறக்காதீங்க!
மேலும் சன்ஸ்கிரீன் கிரீம் அல்லது லோஷன்களை பயன்படுத்துவது முகத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்கள், கோடுகள் போன்ற வயதான அறிகுறிகளை மட்டுமின்றி, தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கவும் உதவுகிறது.
தினமும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
- சூரியனின் புற ஊதாக்கதிர்கள், சருமத்தில் நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடிய உடனடி தோல் பிரச்சனைகளை உருவாக்கக்கூடியது. முகம், கழுத்து, கைகள் ஆகிய பகுதிகளில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது தோல் புற்றுநோயில் இருந்து பாதுகாக்க உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
- சூரிய ஒளி நேரடியாக சருமத்தின் மீது படும் போது, அது நிறத்தை பாதிக்கக்கூடும். மேலும் ஹைப்பர் பிக்மென்டேஷன் உள்ளிட்ட தோல் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும் என்பதால் சன்ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்துவது சிறந்தது.
- தீங்கு விளைவிக்கும் UV கதிர்வீச்சுக்கு ஆளாகும் சருமம், சுருக்கங்கள், கோடுகள் மற்றும் கொலாஜன் மற்றும் ஈரப்பதத்தை இழப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். எனவே சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது சருமத்தை நீண்ட காலம் இளமையாகவும், வயதான தோற்றத்தை தாமதப்படுத்தவும் உதவுகிறது.
- சன்ஸ்கிரீன் கொலாஜன், கெரட்டின் மற்றும் எலாஸ்டின் போன்ற முக்கிய தோல் புரதங்களை பாதுகாக்கிறது. ஆரோக்கியமான, மென்மையான சருமத்தை பராமரிக்க இந்த புரதங்கள் அவசியம். புற ஊதா கதிர்களை தோலில் இருந்து விலக்கி, இந்த புரதங்களின் செயல்பாட்டைப் பாதுகாக்க, உங்கள் சன்ஸ்கிரீனில் டைட்டானியம் டை ஆக்சைடு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
- வெயிலின் தாக்கம் தோல் மெல்லியதாகவும், ஒளிஊடுருவக்கூடியதாகவும் மாற்றி, சன் பார்னை அதிகரிக்கும். இதனால் தோல் உரித்தல், வீக்கம், தோல் சிவந்து போதல், படை, அரிப்பு உள்ளிட்ட சரும பிரச்சனைகள் ஏற்படுக்கூடும்.

இதையும் படிங்க: Eyebrow: கரு, கருன்னு அடர்த்தியான புருவம் வேண்டுமா?… இந்த மூணே விஷயங்கள் போதும்!
சன்ஸ்கீரினை எப்படி பயன்படுத்த வேண்டும்?
- நீங்கள் அடிக்கடி வெயிலில் செல்பவர்களாக இருந்தால் 30 அல்லது அதற்கு மேற்பட்ட SPF கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும்.
- ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை மீண்டும், மீண்டும் பயன்படுத்துவது கட்டாயமாகும்.
- கனிம அடிப்படையிலான சன்ஸ்கிரீன் நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில் இது பரந்த அளவிலான பாதுகாப்பை வழங்குகிறது.
Image Source: Freepik