டை அடித்த பிறகு ஸ்கின் அலர்ஜியா.? வீட்டிலேயே குணமாக்கலாம்..!

  • SHARE
  • FOLLOW
டை அடித்த பிறகு ஸ்கின் அலர்ஜியா.? வீட்டிலேயே குணமாக்கலாம்..!


முடி கொஞ்சம் நரைக்க ஆரம்பித்தாலும், உடனே டை அடிக்க ஆரம்பிச்சிறுவோம். ஆனால் இதில் உள்ள பக்க விளைவுகள் பற்றி யோசிப்பதே இல்லை. டை அடிப்பதால் ஏற்படும் அலர்ஜியை எப்படி தடுப்பது? இதற்கு வீட்டு வைத்தியம் இருக்கிறதா? என்று கேட்டால், ஆம்.. இதற்கு தீர்வு இருக்கிறது என்றே சொல்லலாம். இது குறித்து இங்கே விரிவாக காண்போம். 

டை அடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்..

டையில் இருக்கக்கூடிய இரசாயனங்கள் உங்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். ஒருவர் டை அடித்த 48 மணி நேரத்திற்குள் இதற்கான அறிகுறிகள் வெளிப்படலாம். இதனால் பெரிதளவு பாதிப்புகள் இல்லை என்றாலும், இது சில ஒவ்வாமைகளை ஏற்படுத்தும். 

அதாவது, உடலில் சிவப்பு தடுப்புகள், கழுத்து பகுதி மற்றும் உச்சந்தலையில் நமைச்சல், முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கொப்பளம், வீக்கம், கட்டி போன்றவை ஏற்படும்.

இது தவிர கை இமைகள் மற்றும் உதடுகளில் அலர்ஜி மற்றும் வீக்கம் ஏற்படலாம். மேலும் கை மற்றும் கால்களில் வீக்கங்கள் ஏற்படலாம். இது பல அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். 

அலர்ஜியை விரட்டும் வீட்டு வைத்தியம்..

முடிக்கு டை அடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை தடுக்க வீட்டு வைத்தியமும் உதவலாம். பொதுவாக டை அடித்த பின் தலையை ஷாம்பூ கொண்டு அலசும் போதே சின்ன அலர்ஜிகள் தீரும். மேலும் மாய்ஸ்சரைசர் மற்றும் கிரீம் தடவுவதன் மூலம் சரும அலர்ஜிகள் நீங்கலாம். 

ஆனால், தொண்டை அலர்ஜி, மூச்சு திணறல், சோர்வு போன்ற கடுமையான விளைவுகளும் ஏற்படலாம். இதிலிருந்து விடுபட நாங்கள் சில வீட்டு வைத்தியத்தை இங்கே பகிர்கிறோம். அதை ஃபாளோ செய்து பயன் பெறவும். 

இதையும் படிங்க: Hibiscus For Hair Growth: முடி கொட்டாம அடர்த்தியா வளர செம்பருத்தியை இப்படி பயன்படுத்துங்க போதும்

தேங்காய் எண்ணெய்

இரவு படுக்கைக்கு செல்லும் முன் தலையில் தேங்காய் எண்ணெய் தடவவும். அதை எல்லா பக்கமும் பரவும் வகையில் மசாஜ் செய்யவும். பின் அதை அப்படியே விடவும். இதனை மறுநாள் காலையில் மென்மையான ஷாம்பூ கொண்டு அலசவும். இதனை வாரம் இரு முறை செய்தாலே போதும். தோல் சார்ந்த பிரச்னைகளே வராது. முடிக்கு டை அடித்த பின் தோலில் ஏற்படும் சிவப்பு தடிப்புகள், வீக்கம், கொப்பளம் போன்றவற்றை நீக்க, தேங்காய் எண்ணெய் தடவலாம். 

தேயிலை மர எண்ணெய் 

தேயிலை மர எண்ணெயை 3 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். இதில் 1 தேக்கரண்டி ஆலிவ் ஆயிலை கலந்துகொள்ளவும். இதனை சிறிது சூடாக்கி, உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். இதனை இரவு தடவி, காலையில் கழுவவும். இது டை அடித்தபின் ஏற்படும் அலர்ஜியில் இருந்து உங்களை காக்கும். இதற்கு காரணம் தேயிலை மர எண்ணெயில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் தான் காரணம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை  சிறிது சூடாக்கி, உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். இதனை இரவு முழுவதும் அப்படியே விடவும். பின் காலையில் இதனை மென்மையான ஷாம்பூ கொண்டு அலசவும். இதனால் டை அடிப்பதால் ஏற்படும் அலர்ஜிகள் நீங்கும். இது தவிர பிற தோல் சார்ந்த பிரச்னைகளை நீக்க இதனை பயன்படுத்தலாம். 

நல்லெண்ணெய்

இரவு தூங்கும் முன் நல்லெண்ணெயை சூடாக்கி, உச்சந்தலையில் தடவி, அது எல்லா பக்கமும் பரவும் அளவுக்கு மசாஜ் செய்யவும். காலை இதனை மென்மையான ஷாம்பூ கொண்டு அலசவும். இவ்வாறு செய்தால், டை அடிப்பதால் ஏற்படும் அலர்ஜிகள் நீங்கும். 

புதினா நீர்

ஒரு கைப்பிடி புதினா இலைகளை ஒரு கப் தண்ணீரில் நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் வற்றி வரும் போது அடுப்பை அணைக்கவும். இது வெதுப்பான நிலையில் இருக்கும் போது, பருத்தி கொண்டு அலர்ஜி உள்ள இடங்களில் தடவும். இவ்வாறு செய்தால் அலர்ஜிகள் நீங்கும். 

டை அடித்தபின் ஏற்படும் பக்கவிளைவுகளை போக்க, இந்த பதிவில் கூறப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணாலே போதும். எல்லா அலர்ஜிகளையும் இவை நீக்கும். எந்த அளவுக்கு அழகு முக்கியமோ, அதே அளவுக்கு நமது பாதுகாப்பும் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

Image Source: Freepik

Read Next

முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர இந்த 3 பொருட்கள் போதும்.!

Disclaimer

குறிச்சொற்கள்