Period Rashes Remedies: மாதவிடாயின் போது பெண்ணுறுப்பில் ஏற்படும் அலர்ஜியை சரி செய்வது எப்படி?

  • SHARE
  • FOLLOW
Period Rashes Remedies: மாதவிடாயின் போது பெண்ணுறுப்பில் ஏற்படும் அலர்ஜியை சரி செய்வது எப்படி?


மாதவிடாயில் ஏற்படும் இந்த தடிப்புகள் மாதவிடாயின் போதும், மாதவிடாய் நின்ற பிறகும் எரிப்பு, அரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. இதற்கு சிலர் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், இது சில சமயங்களில் பக்க விளைவை ஏற்படுத்தலாம் அல்லது புண்கள் ஆறாமல் போகலாம். இந்த மாதவிடாய் தடிப்புகளைத் தணிக்க வீட்டிலேயே இயற்கையான முறைகளைக் கையாளலாம். இதில் மாதவிடாய் தடிப்பு குணமாக உதவும் வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: PMS Home Remedies : மாதவிடாய் வழியில் இருந்து நிவாரணம் பெற வீட்டு வைத்தியம்!

மாதவிடாய் தடிப்புகள்

மாதவிடாய் சுழற்சியின் போது சில பெண்களுக்கு பிட்டம் அல்லது உள் தொடைகள் போன்றவற்றில் ஏற்படும் சரும எரிச்சல் மற்றும் வீக்கம் போன்றவை மாதவிடாய் ரேஷஸ் எனப்படுகிறது. இது அசௌகரியத்தை ஏற்படுத்துவதுடன், அரிப்பு, சிவத்தல், வீக்கம் மற்றும் சில சமயங்களில் புண்கள் அல்லது கொப்புளங்கள் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இது பொதுவாக மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுகாதார தயாரிப்புகளின் பயன்பாடு போன்ற காரணிகளால் ஏற்படுகிறது.

மாதவிடாய் தடிப்புக்கான காரணங்கள்

மாதவிடாய் தடிப்புகள் ஏற்படுவதற்கான சில பொதுவான காரணங்கள் குறித்து காணலாம்.

ஈரப்பதம்

மாதவிடாய் இரத்தம் மற்றும் வியர்வை போன்றவை பிறப்புறுப்பு பகுதியில் ஒரு ஈரப்பதமான சூழலை உருவாக்குகிறது. இந்த ஈரப்பதம் காரணமாக பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர்ச்சியடைவதுடன், சருமத்திற்கு எரிச்சலூட்டுகிறது. இதனால் நோய்த்தொற்றுக்கள் ஏற்படலாம்.

மோசமான சுகாதாரம்

உராய்வு மற்றும் தொற்றுநோய்களைத் தவிர்ப்பதற்கு, மாதவிடாய் பயன்பாட்டை மாற்றுவது அவசியமாகும். எனவே ஒவ்வொரு சில மணி நேரமும் சுத்தம் செய்வது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Postpone Periods Naturally: மாதவிடாய் தள்ளி போக இனி மாத்திரை தேவையில்லை!

உராய்வு

சானிட்டரி பேட், துணி போன்றவற்றைப் பயன்படுத்துவது தோலுக்கு இடையே நிலையான உராய்வை ஏற்படுத்தலாம். குறிப்பாக, உடல் செயல்பாடுகளின் போது அல்லது இந்த தயாரிப்புகளை நீண்ட நேரம் பயன்படுத்துவது எரிச்சல் மற்றும் அரிப்பை ஏற்படுத்தலாம்.

ஒவ்வாமை

சாயங்கள், வாசனை திரவியங்கள் அல்லது சில வகையான இழைகள் போன்ற மாதவிடாய் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் இரசானயங்கள் அல்லது பொருள்கள் போன்றவற்றால் சில பெண்களுக்கு உணர்திறன் அல்லது ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

இவை அனைத்தும் மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய பொதுவான காரணங்களாகும்.

மாதவிடாய் சொறியிலிருந்து விடுபட உதவும் வீட்டு வைத்தியம்

இந்த அசௌகரியமான தோல் ஒவ்வாமை, அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனையிலிருந்து விடுபட உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இது வெடிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு ஒரு சிறந்த தீர்வாகும். இது சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. இதற்கு படுக்கைக்குச் செல்வதற்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட பகுதியை குளிர்ந்த நீரில் சுத்தம் செய்து அதன் பின் பருத்தி துணி ஒன்றைப் பயன்படுத்தி தேங்காய் எண்ணெயைப் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். இதை ஓரிரவு முழுவதும் வைக்கலாம் அல்லது காலையில் குளித்த பிறகு தடவலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர்

அரிப்பைக் குறைக்கும் ஆரோக்கிய பண்புகள் ஆப்பிள் சைடர் வினிகரில் நிறைந்துள்ளது. இந்த ஆப்பிள் சைடர் வினிகரை சிறிதளவு எடுத்துக் கொண்டு, அதை தண்ணீரில் நனைத்து, பிறகு பருத்தித் துணி ஒன்றின் உதவியுடன் சொறி உள்ள இடத்தில் தடவலாம். பின் இதை உலர விட வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Turmeric Milk: மாதவிடாய் வலியை குறைக்கும் சூப்பர் வீட்டு வைத்தியம்!!

பேக்கிங் பவுடர்

அரிப்பு மற்றும் சிவத்தல் போன்றவற்றைக் குறைக்க பேக்கிங் சோடா உதவுகிறது. இதில் இரண்டு தேக்கரண்டி அளவிலான பேக்கிங் பவுடரை ஒரு கப் அளவு தண்ணீரில் சேர்த்து கலக்க வேண்டும். பின், இந்தக் கலவையை சொறி மீது தடவி, உலர வைக்க வேண்டும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். பிறகு, சுத்தமான துண்டு அல்லது மென்மையான துணியைப் பயன்படுத்தி கழுவி பாதிக்கப்பட்ட பகுதியை உலர வைக்க வேண்டும்.

வேப்ப இலை

வேப்ப இலை கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெய் முடி மற்றும் தோல் பராமரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த வேப்ப இலை எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை உள்ளது. எனவே இதை அரிப்பு, எரிச்சலிலிருந்து நிவாரணம் பெற முடியும். இதற்கு பாத்திரம் ஒன்றில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, சுமார் 20 வேப்பம்பூ இலைகளை தண்ணீரில் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து தண்ணீரை இறக்கி விட வேண்டும். இதை அறைவெப்பநிலையில் வைத்து, பாதிக்கப்பட்ட பகுதியைக் கழுவ பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஐஸ்கட்டி

குளிர்ச்சியான பண்புகள் நிறைந்த ஐஸ்கட்டிகள் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. எனவே ஒன்றிரண்டு ஐஸ் கட்டிகளை எடுத்துக் கொண்டு, அதை சுத்தமான துணியில் போர்த்தி, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவிக் கொள்ளலாம். பின் இவ்வாறு செய்த பிறகு நரம்பு முனைகள் மரத்துப் போகும்.

இவ்வாறு வீட்டிலேயே உள்ள சில எளிமையான வீட்டு வைத்திய முறைகளைக் கையாள்வதன் மூலம் மாதவிடாய் அரிப்பைத் தவிர்க்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Delay Periods Remedies: லேட் பீரியட்ஸ் பிரச்சனையா? இதெல்லாம் டிரை பண்ணுங்க.

Image Source: Freepik

Read Next

Tea for Headache: தலைவலிக்கு மாத்திரை எல்லாம் வேணாம்! இந்த ஒரு டீ குடிங்க போதும்

Disclaimer