Sat Sep 12, 2026 | 12:58 AM IST

PMS Home Remedies : மாதவிடாய் வழியில் இருந்து நிவாரணம் பெற வீட்டு வைத்தியம்!

What Herbs Are Good For PMS Bloating : மாதவிடாய்க்கு முன்னும் பின்னும் பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களின் விளைவு பல வழிகளில் தெரியும். இந்த நேரத்தில் மனநிலையில் கூட பல மாற்றங்கள் காணப்படும்.

மாதவிடாய்க்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகளை தான் PMS என கூறுகின்றனர். உடல் வலி, ஆற்றல் இல்லாமை, சோர்வு, மனநிலை மாற்றங்கள், இடுப்பு வலி, தலைவலி போன்றவை PMSன் அறிகுறிகள். சில நேரங்களில் பெண்கள் இதை PMSing என்றும் அழைக்கிறார்கள். இந்த அறிகுறிகளைக் குறைக்க சில மூலிகைகள் உங்களுக்கு உதவும். அப்படிப்பட்ட 3 மூலிகைகளைப் பற்றி இங்கே சொல்கிறோம். இது உங்கள் வழியை குறைக்க உதவும்.

இந்த பதிவும் உதவலாம் : Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!

PMS வழியை குறைக்கும் குங்குமப்பூ

குங்குமப்பூ PMS இன் அறிகுறிகளைக் குறைக்க உதவும். இது உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கிறது. இது பி.எம்.எஸ் மற்றும் மாதவிடாய் காலங்களில் வலி மற்றும் பிடிப்புகளின் அறிகுறிகளை அகற்ற உதவுகிறது. உங்களுக்கு PMS இல் பசி, எரிச்சல், வலி ​​மற்றும் பதட்டம் போன்ற பிரச்சனைகள் இருந்தால், கண்டிப்பாக அதை உட்கொள்ளுங்கள். மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு, குங்குமப்பூ மற்றும் கருப்பு திராட்சையை ஊறவைத்து அதன் தண்ணீரை குடிக்கவும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் PMS இல் இருந்து நிவாரணம் தரும்

மஞ்சள் நமது சமையலறையில் இருக்கும் ஒரு நன்மை பயக்கும் மசாலா. PMS இன் அறிகுறிகளைக் குறைக்க, நீங்கள் சிறிது மஞ்சளை தண்ணீரில் கொதிக்க வைத்து உட்கொள்ளலாம். இதில் உள்ள குர்குமின் வலியைக் குறைக்கிறது. இதனுடன், மனநிலையும் நன்றாக இருக்கிறது. பி.எம்.எஸ்-ல் மனநிலை மாற்றத்தால் சிரமப்படும் பெண்கள் கண்டிப்பாக இதை உட்கொள்ள வேண்டும். இது வீக்கம் மற்றும் வலியை குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Periods Pain Relief Tips: இயற்கையான முறையில் மாதவிடாய் வலியை எவ்வாறு குறைப்பது?

அஸ்வகந்தாவை உட்கொள்ளுங்கள்

அஸ்வகந்தா ஒரு சக்திவாய்ந்த ஆயுர்வேத மூலிகை. இது உடலில் இருந்து மன அழுத்தத்தை போக்க உதவுகிறது. இது ஹார்மோன்களையும் சமநிலைப்படுத்துகிறது. PMS இன் போது பல நேரங்களில், பெண்கள் சரியாக தூங்க மாட்டார்கள், எரிச்சல் அடைகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அஸ்வகந்தாவை உட்கொள்வது நன்மை பயக்கும்.

Image Credit: freepik

Read Next

தூங்கும் போது கால் வலி வருகிறதா? இந்த வீட்டு வைத்தியம் செய்து பாருங்கள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content