Tea for Headache: தலைவலிக்கு மாத்திரை எல்லாம் வேணாம்! இந்த ஒரு டீ குடிங்க போதும்

  • SHARE
  • FOLLOW
Tea for Headache: தலைவலிக்கு மாத்திரை எல்லாம் வேணாம்! இந்த ஒரு டீ குடிங்க போதும்


இதில் மில்லியன் கணக்கான பெண்கள் ஒற்றைத் தலைவலியால் பாதிப்படைகின்றனர். இவை இரண்டும் வெவ்வேறு விஷயங்களாக இருப்பினும், இதனைப் போக்க சில பொதுவான தீர்வுகள் உள்ளன. அவற்றில் ஒன்றாக மூலிகை டீ அமைகிறது. இந்த மூலிகை டீக்களை வழக்கமாக நாம் உட்கொள்வதன் மூலம் இந்த தலைவலி பிரச்சனைகளிலிருந்து நாம் விடுபட முடியும். அந்த வகையில், என்னென்ன வகையான டீக்கள் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சனைக்குத் தீர்வு தருகிறது என்பதைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Sore Throat Tea Recipes: தொண்டை வலியைக் குறைக்க இந்த டீ எல்லாம் குடிங்க.

தலைவலியைப் போக்க குடிக்க வேண்டிய தேநீர்

இஞ்சி டீ

இஞ்சி ஒரு அற்புதமான ஆயுர்வேத மூலிகையாகக் கருதப்படுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே இதனை உட்கொள்வதன் மூலம் ஒற்றைத் தலைவலி பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற முடியும். மேலும் இஞ்சி டீ ஆனது வயிற்று வலி மற்றும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் தருகிறது. எனவே ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் எளிய இஞ்சி தேநீர் தயாரித்து குடிக்கலாம். எனினும், அதில் பால், சர்க்கரை போன்றவற்றைச் சேர்க்க வேண்டாம். விரும்பினால், இனிப்புக்காக ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

கிரீன் டீ

ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற உதவும் எளிய மற்றும் சிறந்த வழிகளில் ஒன்றாக கிரீன் டீ அமைகிறது. ஏனெனில் கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகளவு நிறைந்துள்ளதால், இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். மேலும் கிரீன் டீ அருந்துவது தசைகள் மற்றும் நரம்புகளைத் தளர்த்தவும், மன அழுத்தத்தைப் போக்கவும் உதவும் சிறந்த பானமாகக் கருதப்படுகிறது. இது தவிர, கிரீன் டீ அருந்துவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கலோரிகளைக் கட்டுப்படுத்துகிறது. ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளில் 2 முதல் 3 கப் அளவு கிரீன் டீகுடிக்கலாம். இது தலைவலியை நீக்குவது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

லாவண்டர் டீ

இந்த டீயானது தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைப் போக்குவதில் மிகுந்த நன்மை பயப்பதாகக் கூறப்படுகிறது. கெமோமில் டீயைப் போன்று, லாவண்டர் டீ அருந்துவதும் மன அழுத்தத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், நல்ல சீரான உறக்கத்தைப் பெற உதவுகிறது. எனவே வீட்டிலேயே புதிதாகத் தயாரிக்கப்பட்ட லாவண்டர் தேநீரை உட்கொள்வதன் மூலம் ஒற்றைத் தலைவலி பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற முடியும்.

கெமோமில் டீ

கெமோமில் தேநீர் அருந்துவது ஒற்றைத் தலைவலி நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், இது நரம்புகளைத் தளர்த்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் சில சமயங்களில் ஒற்றைத் தலைவலிக்கான காரணமாக மன அழுத்தம், பதட்டம் போன்றவை ஏற்படுகிறது. இதனால், நரம்புகள் சுருங்குவதற்கு வழிவகுக்கும். இந்த சூழ்நிலையில் கெமோமில் டீ அருந்துவது நரம்புகளைத் தளர்ச்சியடையச் செய்து ஒற்றைத் தலைவலியைப் போக்க உதவுகிறது. எனவே பதட்டம், மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற இந்த கெமோமில் தேநீரைப் பருகலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Constipation Remedies: மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க இந்த இரண்டு பொருள் போதும்

புதினா டீ

தலைவலியிலிருந்து நிவாரணம் அளிப்பதில் புதினா டீ சிறந்த தேர்வாகும். இந்த புதினா தேநீரில் உள்ள மெத்தனால் வலுவான நறுமணத்தைக் கொண்டு விளங்குகிறது. இவை தசை விறைப்புத் தன்மையைத் தளர்த்த உதவுகிறது. மேலும், புதினா டீ இயற்கையாகவே ஆண்டிஸ்பாஸ்மோடிக், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே இந்த வகை தேநீரை அருந்துவது தலைவலியிலிருந்து நிவாரணத்தைத் தருகிறது.

எலுமிச்சை டீ

சூடான எலுமிச்சை தேநீர் ஒற்றைத் தலைவலி பிரச்சனையைப் போக்க உதவும் சிறந்த தேர்வாகும். இந்த தேநீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இதன் ஆற்றல் மிக்க நறுமணமானது ஒற்றைத் தலைவலிக்கு இயற்கையான சிகிச்சையாகக் கருதப்படுகிறது. மேலும், இதில் உள்ள பாலிஃபினால்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்க உதவுகிறது. எலுமிச்சை டீ அருந்துவது தலை,முகம் மற்றும் மூக்கு அசௌகரியத்தைக் குறைப்பதுடன், ஆற்றலை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது.

கிராம்பு டீ

கிராம்புவில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் போன்றை நிறைந்து காணப்படுகிறது. இந்த கிராம்பு டீ உட்கொள்வது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதுடன், உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், கிராம்புவின் பண்புகள் ஒற்றைத் தலைவலி மற்றும் தலைவலி பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. எனவே தலைவலி பிரச்சனையால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் கிராம்பு டீயை உட்கொள்ளலாம்.

இந்த வகை தேநீர் வகைகளின் உதவியுடன் தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி பிரச்சனையிலிருந்து விரைவில் நிவாரணம் பெற முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Clove Tea Benefits: சாப்பிட்டவுடன் வயிறு உப்புசமா இருக்கா? அப்போ இந்த மூலிகை டீயை ட்ரை பண்ணுங்க!

Read Next

Blocked Nose Remedies: இரவில் மூக்கடைப்பால் அவதியா? உடனே நீங்க இத செய்யுங்க

Disclaimer