$
சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பெண்கள் மாதவிடாயைத் தள்ளிப் போட நினைப்பார்கள். இதற்காக மாத்திரைகளை நாடுகிறார்கள். இதனால் சில பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இது அபாயமான நோய்களையும் ஏற்படுத்தும். இத்தகைய சூழலில் இயற்க்கை முறையில் மாதவிடாய் தள்ளிப் போட முயற்ச்சிப்பார்கள். மாதவிடாய் தள்ளி போக வீட்டு வைத்தியம் உதவும். இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. இயற்கையான முறையில் மாதவிடாயைத் தள்ளிப்போக சில வழிகள் இங்கே.
வெந்தயம்

இது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இது மாதவிடாய் தள்ளிப்போக முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கும். உங்கள் சுழர்ச்சி தேதிகளுக்கும் ஐந்து நாள்களுக்கு முன்னிருந்து, இதனை சாப்பிடவும். இதனை இரவு முழுவது தண்ணீரில் ஊற வைத்து, காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீருடன் சேர்த்து இதனை சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் ஐந்து முதல் பத்து நாள்கள் வரை மாதவிடாய் தள்ளிப்போகும்.
பொட்டுக்கடலை
மாதவிடாய் சுழற்சியின் 10 நாடள்களுக்கு முன்பிருந்து, தினமும் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலையை சாப்பிட வேண்டும். இது ஐந்து முதல் பத்து நாள்கள் வரை மாதவிடாயை தள்ளிப்போகச் செய்யும்.
இதையும் படிங்க: Food For Early Periods: மாதவிடாய் சீக்கிரம் வர சாப்பிட வேண்டிய உணவுகள்!
இலவங்கப்பட்டை
மாதவிடாயை தாமதப்படுத்த இலவங்கப்பட்டை சிறந்த தேர்வாக உள்ளது. இதனை டீயில் கலந்தோ, தண்ணீரில் கொதிக்க வைத்தோ எடுத்துக்கொள்ளலாம். இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. மேலும் இது பல ஆரோக்கிய நன்மைகளுக்கு வழிவகுக்கும்.
சீரகம்

மாதவிடாய் சுழற்சியின் 7 நாள்களுக்கு முன்பிருந்து, தினமும் சீரகத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால், ஐந்து முதல் பத்து நாள்கள் வரை மாதவிடாய் தள்ளிப்போகும்.
தர்பூசணி
மாதவிடாய் வரப்போகும் சில நாட்கள் முன்பிருந்தே தர்பூசணியை சாப்பிட வேண்டும். இது உடல் சூட்டை குறைத்து, உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. இதனால் மாதவிடாய் தள்ளிப்போகும். இது ஒரு இயற்க்கையான சிறந்த தேர்வாகும்.
Image Source: Freepik