How To Keep Ears Clean And Healthy: உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு பலரும் பல முயற்சிகளைக் கையாள்கின்றனர். இதில் காதுகளை ஆரோக்கியமாக வைப்பதற்கும், சுத்தமாக வைப்பதற்கும் பலருக்கும் கடினமான ஒன்று. ஆனால், காதுகளைச் சுத்தம் செய்ய பல வழிகள் உள்ளது. ஆனால், இவற்றில் பெரும்பாலானவை தீங்கு விளைவிக்கக் கூடியதாகவே அமைகிறது. அதாவது காது மெழுகு சுத்தம் செய்வதற்கு பருத்தி துணியைப் பயன்படுத்துவது, ஹேர்பின்கள் அல்லது விரலைச் செருகுவது போன்ற மோசமான வழிகளை மேற்கொள்கின்றனர்.
இது காது மெழுகை வெளியேற்றுவதுடன், காது வலி அல்லது தொற்றுக்களை ஏற்படுத்தலாம். இதில் பலரும் நினைப்பதற்கு மாற்றாக, உண்மையில் காது மெழுகு அல்லது செருமென் என்பது உடல் உற்பத்தி செய்யும் ஒரு சுய-சுத்தப்படுத்தும் முகவராகும். எனவே இதில் காதுகளுக்குக் கூடுதல் கவனிப்பு தேவையில்லை. எனவே வெளிப்புற காது கால்வாயில் இருந்து அதிகப்படியான மெழுகுகளை மென்மையாக்குவது அல்லது மெதுவாக சுத்தம் செய்வது போன்றவற்றில் ஈடுபட வேண்டும். இதில் காதுகளை சுத்தமாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருப்பதன் வழிகளைக் காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Body Acne Remedies: உடலில் தோன்றும் கொப்புளங்களை சரி செய்ய இந்த 5 பொருள்கள் போதும்!
காது மெழுகு ஏன் உருவாகிறது?
பொதுவாக உடலில் காது மெழுகு அல்லது செருமன் ஆனது இயற்கையாகவே உற்பத்தியாகிறது. இந்த மெழுகு காது கால்வாயின் மென்மையான தோலை நீர், அழுக்கு மற்றும் வெளிநாட்டு துகள்களிலிருந்து உயவூட்டவும், பாதுகாக்கவும் உதவுகிறது. இது அழுக்கை சிக்க வைப்பதன் மூலமும், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியை குறைப்பதன் மூலமும் ஏற்படும் தொற்றுநோய்களைத் தடுக்கலாம். கூடுதலாக, காது மெழுகில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது காதுகளை சுயமாக சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும், இயற்கையாகவே காது கால்வாயில் இருந்து காது மெழுகுகளை அகற்றுகிறது. எனவே காதுகளை சேதத்திலிருந்து பாதுகாக்க காது மெழுகு மிகவும் அவசியமாகும்.
காதுகளை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது எப்படி?
காதை சுத்தமாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் குறிப்புகளைக் காணலாம்.
காதுகளை உலர வைப்பது
பொதுவாக காதில் ஈரப்பதம் இருப்பின் அது பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இது காது தொற்றுக்கு வழிவகுக்கலாம். மேலும், காதுகளை மெதுவாக உலர்த்தவும், அதிலும் குறிப்பாக மழை அல்லது நீச்சலுக்குப் பின்னதாக, காதுகளை உலர்த்த காதுகளின் வெளிப்புறத்தில் ஒரு மென்மையான துண்டு பயன்படுத்த வேண்டும். இது தவிர, தலையை இருபுறமும் சாய்த்துக் கொள்வது இயற்கையாகவே தண்ணீரை வெளியேற்ற உதவுகிறது. நீச்சல் அல்லது குளிக்கச் செல்லும் போது, காதுகளில் தண்ணீர் தேங்கினால், காதுகளைப் பாதுகாக்க இயர் பிளக்குகள், நீச்சல் தொப்பி போன்றவற்றை அணிவதைக் கருத்தில் கொள்ளலாம். மேலும், காது கால்வாயில் பருத்தி துணிகள் அல்லது பிற பொருட்களைச் செருகுவதைத் தவிர்க்க வேண்டும்.
காதில்பருத்தி துணி செருகுவதைத் தவிர்த்தல்
இன்று பலரும் காதுகளை சுத்தம் செய்வதற்கு, பருத்தி துணியைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இது காதை சுத்தமாக வைப்பதற்குப் பதிலாக, காது மெழுகலை ஆழமாக உள்ளே தள்ளி, தோலைக் கீறி விடும் நிலை ஏற்படலாம். இது சரியாக சேமிக்கப்படாவிடில் காதுக்குள் பாக்டீரியாவை ஏற்படுத்தலாம். இது காது தொற்று அபாயத்தை அதிகரிக்கும். இதற்குப் பதிலாக, காதுகளை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருப்பின், ஒரு ஈரமான துவைக்கும் துணி அல்லது மென்மையான துண்டைப் பயன்படுத்தலாம். இந்த துணி அல்லது துண்டைப் பயன்படுத்தி வெளிப்புற காது மற்றும் காதுக்கு பின்னால் மெதுவாக துடைக்க வேண்டும். அதே சமயம், காதில் ஹேர்பின்கள், சாவிகள் போன்ற கூர்மையான பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Vaginal Rash Remedies: பிறப்புறுப்பு சொறியால் அவதியா? இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க
அதிகம் சுத்தம் செய்வதைத் தவிர்ப்பது
காதுகளை சுத்தம் செய்வது அவசியமானது எனினும், அதை அதிகப்படியாக சுத்தம் செய்வது பாதிப்பை ஏற்படுத்தலாம். காது இயற்கையாகவே மெழுகை உற்பத்தி செய்வதால், தூசி, அழுக்கு மற்றும் பூச்சிகளைப் பிடிக்க உதவுகிறது. மேலும், காது கால்வாயை தொற்று, நீ மற்றும் வெளிப் பொருள்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. எனினும், அடிக்கடி அல்லது மிகவும் தீவிரமாக சுத்தம் செய்வது இந்த பாதுகாப்பு மெழுகை அகற்றலாம். இதனால் காதுகளில் அரிப்பு, வறட்சி மற்றும் தீவிர தொற்று ஏற்படலாம். எனவே காதுகள் இயற்கையாகவே சுத்தம் செய்வதாக வைக்க வேண்டும். அதிக மெழுகை உணர்ந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
உரத்த சத்தம் வெளிப்படுவதைத் தவிர்ப்பது
நீண்ட நேரம் காதுகளில் உரத்த சத்தம் வெளிப்படுவது காது கேளாமைக்கு வழிவகுக்கலாம். எனவே, காதுகளை உரத்த சத்தங்களிலிருந்து பாதுகாப்பாக வைப்பது நல்லது. மேலும், இவ்வாறு உரத்த சத்தத்தால் செவித்திறன் பாதிப்படைவதுடன், காதுகளுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, கச்சேரிகள், விளையாட்டு நிகழ்வுகள் போன்ற சத்தமான சூழலில் வெளிப்படும் போது இயர் பிளக்குகள், இயர் மஃப்கள் போன்ற காது பாதுகாப்புக் கருவிகளைப் பயன்படுத்தலாம். எனவே மிதமான அளவில் ஒலியளவு வைத்து, காதுகளுக்கு சிறிய ஓய்வு கொடுக்க இடைவெளி கொடுக்க வேண்டும். அதே சமயம், நீண்ட நேரம் ஹெட்போன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.
மருத்துவரை அணுகுதல்
அதிகப்படியாக காது மெழுகு உருவாக்கத்தின் காரணமாக காதுவலி, காது நிரம்புதல் அல்லது கேட்கும் சிரமம் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் வீட்டிலேயே காது மெழுகை அகற்ற முயற்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது போன்ற பிரச்சனைகளைச் சந்தித்தால், உடனடியான மருத்துவரை நாடுவது அவசியமாகும். மருத்துவரின் உதவியுடன் சில பாதுகாப்பான கருவிகள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்தி பிடிவாதமான காது மெழுகுகளைப் பாதுகாப்பாக அகற்றலாம்.
இது போன்ற எளிய வழிகளைக் கையாள்வதன் மூலம் காதுகளை சுத்தமாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: Ear Pain: காது வலி வரக் காரணமும், குணமாக வீட்டு வைத்தியமும்!
Image Source: Freepik