Uric Acid Control Foods: எந்த உணவுகள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும்?

  • SHARE
  • FOLLOW
Uric Acid Control Foods: எந்த உணவுகள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும்?


உங்கள் மூட்டுகளில் அடிக்கடி வலி ஏற்படுகிறதா? இது உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கிறது என்பதை உணர்த்துகிறது. உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் போது, மூட்டு வலிகள் ஏற்படும். இது கீல்வாத பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் கழிவாகும். இதில் பெரும்பாலானவை சிறுநீர் வழியே வெளியேறிவிடும். யூரிக் அமிலத்தை உணவு மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், அதற்கென சில உணவுகள் உள்ளன. அவற்றை உங்கள் தினசரி உணவில் இணைப்பது நல்லது. அந்த உணவுகள் பின்வருமாறு. 

இதையும் படிங்க: Tomato Benefits: கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க தக்காளி உதவுமா?

எலுமிச்சை

தினமும் எலுமிச்சை ஜூஸுடன் தேனை கலந்து குடிப்பது யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இவை உடலுக்கு நம்ப முடியாத பல ஆரோகிய நன்மைகளை வழங்குகிறது. 

செர்ரி

புரோந்தோசயனின்கள், ஆந்தோசயினன்கள் மற்றும் பயோஃப்ளவனாய்டுகள் போன்ற சேர்மங்களை செர்ரி கொண்டுள்ளது. இது யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது. யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த செர்ரி சிறந்த தேர்வாக இருக்கும். குறிப்பாக இது மூட்டுகளில் யூரிக் அமிலத்தை படியாமல் தடுக்கிறது. 

​டார்க் சாக்லேட்

​டார்க் சாக்லேட்டில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் உள்ள கோகோபீன்ஸ் தசைகளை நிதானமாக வைக்க உதவும். இது பழத்தை விட பயனுள்ளதாக இருக்கும். இது யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது. 

ஆப்பிள்

இதில் மாலிக் அமிலம் உள்ளது. இது யூரிக் அமிலத்தை நடுநிலையாக்க உதவுகிறது. மேலும் இது வீக்கம் மற்றும் எரிச்சலை குறைக்க உதவும். தினசரி உணவில் ஒரு ஆப்பிள் சேர்ப்பது பல ஆரோக்கிய நன்மைகளை ஏற்படுத்துகிறது. 

வாழைப்பழம்

மூட்டு வலியை குறைக்க வாழைப்பழத்தை தினசரி உணவில் இணைப்பது நல்லது. இது உடலில் யூரிக் அமில அளவை குறைக்க உதவுகிறது. 

உருளைக்கிழங்கு

பச்சையாக உருளைக்கிழங்கை சாப்பிடுவது, உங்கள் உடலில் இருக்கும் யூரிக் அமிலத்தை குறைக்க உதவும். 

முட்டை 

முட்டையில் ப்யூரின் குறைவாகவும், புரதம் அதிகமாகவும் உள்ளது. இது கீழ்வாதம் ஏற்படாமல் தடுக்கும். மேலும் யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். 

இதையும் படிங்க: Hemoglobin Rich Food: ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளதா? கவலை வேண்டாம் இதை சாப்பிடுங்கள்!

கேரட்

கேரட்டில் ப்யூரின்கள் குறைவாக உள்ளன. இது உடலில் இருந்து அதிகபடியான நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இது யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைக்க உதவும். இதனை அன்றாட உணவில் இணைத்துக்கொள்ள வேண்டும். 

​வெங்காயம்

யூரிக் அமிலத்தை குறப்பதில், வெங்காயம் சிறந்து திகழ்கிறது. மேலும் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும், இதய நோய் வராமல் தடுக்கவும் இது உதவுகிறது. குறிப்பாக சின்ன வெங்காயத்தை தினசரி உணவில் இணைப்பது நல்ல பலனை தரும்.  

Image Source: Freepik

Read Next

Frequent Cold and Cough: தொடர் இருமல், சளி என்பது சாதாரண விஷயமல்ல!

Disclaimer

குறிச்சொற்கள்