How To Reduce Stress: இன்றைய நவீன உலகில் யாருக்கு தான் மன அழுத்தம் இல்லை? வாழ்க்கை முறை, பணி சூழல், உணவு வழக்கம் போன்ற பல காரணங்கள் மன அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. மன அழுத்தம், உங்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். குறிப்பாக மன அழுத்தம், உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இதனால் இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை ஏற்படும். இதனால் மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கவும். இதற்காக சில எளிய வழிகள் உள்ளன.
தியானம் செய்யவும்

நிலையான தியானம், உங்களை மன அழுத்தத்தில் இருந்து காக்கும். இது உங்கள் உடல் மற்றும் மனதை ஒன்றிணைக்கச் செய்யும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த, தியானம் சிறந்து திகழ்வதாக, ஆய்வுகள் கூறுகின்றன. இதனை காலை எழுந்த உடனும், இரவு படுக்கைக்கு செல்லும் முன்னும் செய்ய வேண்டும்.
முக்கிய கட்டுரைகள்
சுவாசப் பயிற்சி
மன அழுத்தம், உடலில் பதட்டத்தையும், இரத்த அழுத்தத்தையும் கணிசமாக அதிகரிக்கும். இதனால் சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம். இதனை தடுக்க ஆழமான சுவாச பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இது இதய துடிப்பை சீராக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும். மேலும் இவை மனச்சோர்வு, மன கவலை போன்ற மனம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கும்.
இதையும் படிங்க: Reduce Stress: இதை செய்தால் மன அழுத்தம் காணாமல் போகும்!
திட்டமிடல் அவசியம்
நீங்கள் ஒரு வேலை செய்வதற்கு முன், அதனை எப்படி செய்யனும், எந்த நேரத்தில் செய்யனும் என்றவற்றை திட்டமிடுங்கள். இல்லையெனில் பதட்டம் ஏற்படும். இதனால் உயர் இரத்த அழுத்தம், நரம்பு மண்டலங்களில் பிரச்சனை, மனச் சோர்வு, மனக்கவலை போன்றவை ஏற்படும். நீங்கள் திட்டமிட்டு ஒரு வேலையை செய்தால், அது உங்களை நிதானமாக்கும். மேலும் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கும்.
உடற்பயிற்சி

உங்கள் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சியை இணைத்துக்கொள்வது, உங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்க உதவும். நடைபயிற்சி, ஜாக்கிங் போன்ற மிதமான பயிற்சிகளில் ஈடுபடுவது, மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
சிறிது ஓய்வு
நீங்கள் அதிகம் வேலை செய்கிறீர்களா? அப்போ சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். இது உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவும். ஓய்வு என்பது படுத்து உறங்குவது மட்டுமல்ல. புத்தகம் படிப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது, பாடல்கள் கேட்பது போன்றவை இதில் அடங்கும். இது உங்கள் மனம் மற்றும் உடலை, ஆரோக்கியமாக வைக்க உதவும்.
மன அழுதத்தில் இருந்து விடுபட மேற்கூறிய வழிகள் உங்களுக்கு உதவலாம். இருப்பினும், தீவிர விளைவுகளை சந்திக்கும் போது உடனே மருத்துவரை அணுகவது சிறந்தது.
Image Source: Freepik