Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலர் பல வகை வழிமுறைகளை தேடித் தேடி கடைப்பிடிப்பார்கள். உடல் எடையை குறைக்க உணவு முறை என்பது மிக முக்கியம். அதோடு சிறிதளவாவது உடற்பயிற்சியும் தேவை.
பலரும் இங்கே சந்திக்கும் பொதுவான பிரச்சனை என்னவென்றால் உடல் எடையை குறைக்கும் அவர்களால் அதை கடைபிடிக்க முடியாது. அதாவது எவ்வளவு வேகமாக உடல் எடையை குறைக்கிறார்களோ அதைவிட வேகமாக அவர்கள் உடல் எடையை அதிகரிக்கவும் செய்கிறார்கள்.
உடல் எடையை குறைக்க உதவும் டயட் முறை
உடல் எடையை குறைக்கும் நபர்களால் அதை பராமரிக்க முடிவதில்லை. வேகமாக உடல் எடையை குறைத்து அதைவிட வேகமாக உடல் எடையை அதிகரிக்க வழிவகை செய்கிறார்கள். உடல் எடையை குறைக்கவும் பராமரிக்கவும் உணவு முறை என்பது மிக முக்கியம். சிறிய உடற்பயிற்சியுடன் குறிப்பிட்ட வகையிலான உணவு முறையை கடைபிடித்தாலே போதுமானதாகும்.
சரி, உடல் எடையை குறைக்க சரியான உணவு முறை எது என்ற சந்தேகம் வரலாம். வாரத்திற்கு ஏழு நாள் காலை முதல் இரவு உணவு வரை என்ன சாப்பிடலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
7 நாட்கள் உணவு திட்டம்

திங்கள் டயட் முறை
காலை உணவு: 1 கப் போஹா, 1 பழம்
மதிய உணவு: 2 சப்பாத்தி, பருப்பு, 1 கிண்ணம் சாலட்
இரவு உணவு: 1 சப்பாத்தி, 1 கிண்ணம் காய்கறிகள்
செவ்வாய் டயட் முறை
காலை உணவு: 1 முட்டை ஆம்லெட் மற்றும் 2 முழு தானிய ரொட்டி
மதிய உணவு: 2 சப்பாத்தி 1 கிண்ணம் கொழுப்பு குறைந்த முறையில் சமைத்த கோழி இறைச்சி மற்றும் சாலட்
இரவு உணவு: 1 சப்பாத்தி, 1 கிண்ணம் பருப்பு மற்றும் வேகவைத்த காய்கறிகள்
புதன் டயட் முறை
காலை உணவு: 1 கிண்ணம் கோதுமை உப்மா மற்றும் 1 கிண்ணம் பழ சாலட்
மதிய உணவு: 2 சப்பாத்தி அரை கிண்ணம் சிக்கன் மற்றும் 1 கப் சாலட்
இரவு உணவு: 1 சப்பாத்தி மற்றும் 1 கிண்ணம் காய்கறி
வியாழன் டயட் முறை
காலை உணவு: போஹா, சர்க்கரை இல்லாத மாம்பழ ஷேக்
மதிய உணவு: 2 சப்பாத்தி, பருப்பு, காய்கறி சாலட்
இரவு உணவு: 1 சப்பாத்தி, 1 கிண்ணம் காய்கறி சாலட்
வெள்ளிக்கிழமை டயட் முறை
காலை உணவு: 1 சப்பாத்தி, 1 கப் காய்கறி
மதிய உணவு: 2 சப்பாத்தி, 1 கிண்ணம் சாலட்
இரவு உணவு: 1 சப்பாத்தி, 1 கப் பருப்பு, அரை கப் காய்கறி
சனிக்கிழமை உணவு முறை
காலை உணவு: 2 கப் சாலட் மற்றும் தயிர்
மதிய உணவு: 2 சப்பாத்தி, 1 கிண்ணம் சிக்கன் மற்றும் வேகவைத்த காய்கறிகள்
இரவு உணவு: 1 சப்பாத்தி மற்றும் 1 கிண்ணம் காய்கறி
ஞாயிறு உணவு
காலை உணவு: பீனட் பட்டர் மற்றும் 1 வாழைப்பழம், 1 முழு தானிய ரொட்டி
மதிய உணவு: 2 சப்பாத்தி, சிக்கன் மற்றும் ரைதா
இரவு உணவு: 1 சப்பாத்தி மற்றும் காய்கறிகள் சாலட்
Image Source: FreePik