Diet Plan For Weight Loss: ஒரே மாதத்தில் 5 கிலோ வரை எடை குறைய சூப்பர் டயட் பிளான்!

  • SHARE
  • FOLLOW
Diet Plan For Weight Loss: ஒரே மாதத்தில் 5 கிலோ வரை எடை குறைய சூப்பர் டயட் பிளான்!

சமநிலையற்ற வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை என உடல் எடை அதிகரிக்க பல காரணங்கள் உள்ளது. மக்கள் உடல் எடையை வேகமாக குறைக்க பல விஷயங்களை செய்கிறார்கள். குறிப்பாக, பலர் தங்களின் உடல் எடையை குறைக்க ஜிம்மிற்கு சென்று மாங்கு மாங்கு என மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்வார்கள். இன்னும் சிலர் எதுவும் சாப்பிடாமல், நீண்ட நேரம் பட்டினியாக இருந்து உடல் எடையை குறைக்க முயற்சி செய்வார்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Green Gram For Weight Loss: உடல் எடையைச் சட்டுனு குறைக்க உதவும் பச்சைப்பயறு. எப்படி சாப்பிடலாம்?

உடல் எடையை குறைக்க, பசியுடன் இருப்பதற்கு பதிலாக, சரியான நேரத்தில் மற்றும் சரியான அளவில் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் உடல் எடை குறைவது மட்டுமின்றி ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். சில விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் நீங்கள், 1 மாதத்தில் 5 கிலோ வரை எடையை எளிதில் குறைக்கலாம். அந்த உதவிக்குறிப்புகளை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒரே மாதத்தில் 5 கிலோ எடையை குறைக்க டயட் பிளான்

காலையில் எழுந்ததும் 1-2 ஸ்பூன் கற்றாழை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கவும். கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

மேலும், இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது, உடலில் சேரும் கொழுப்பைக் குறைக்கிறது, கலோரிகளை விரைவாக எரிக்கிறது மற்றும் எடையைக் குறைக்க உதவுகிறது.

அதன் பிறகு பப்பாளி சாப்பிடுங்கள். பப்பாளியில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Pori For Weight Loss: பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?

காலை உணவாக, நீங்கள் வெஜ் ஓட்ஸ் உப்மா அல்லது போஹா அல்லது ஒரு கிண்ண முளைகட்டிய பயிர் சாப்பிடலாம். இந்த மூன்று பொருட்களும் உடலுக்கு ஆற்றலைத் தருவதுடன், சத்துக்களும் நிறைந்துள்ளன.

இதற்குப் பிறகு, பழங்கள், 5 ஊறவைத்த பாதாம், 2 அக்ரூட் பருப்புகள் மற்றும் 1 தேக்கரண்டி விதைகள் ஆகியவற்றின் கலவையை சாப்பிடுங்கள். பழங்கள் மற்றும் விதைகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. கூடுதலாக, இது கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.

மதிய உணவுக்கு 20 நிமிடங்களுக்கு முன் சியா விதைகளுடன் எலுமிச்சை நீரைக் குடிக்கவும். இது செரிமானம் மற்றும் கொழுப்பு எரிக்க நல்லது. இதற்குப் பிறகு, மதிய உணவிற்கு 1 கிண்ணம் சாலட், 1 ரொட்டி, கலந்த பருப்பு மற்றும் காய்கறிகள். இது தவிர கஞ்சியுடன் தயிர் சேர்த்தும் சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம் : இந்த நீரை குடியுங்கள்.. எடை சட்டுன்னு குறையும்.!

மாலையில், ஒரு கப் டீ அல்லது காபி அல்லது மூலிகை டீயுடன் வறுத்த பருப்பு, மக்கானா அல்லது பனீர் சாப்பிடவும். இரவு உணவிற்கு முன் வெஜ் சூப் சாப்பிட்டு, இரவு உணவில் கொத்தமல்லி சட்னியுடன் மூங் டால் சீலாவை சாப்பிடுங்கள். தூங்கும் முன் சீரகம் அல்லது இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கவும்.

Pic Courtesy: Freepik

Read Next

Weight Loss Drinks: உடல் எடை குறைய ஆப்பிள் சீடர் வினிகர் பயனற்றதாம்.. உண்மை இங்கே!

Disclaimer