Apple cider vinegar Good for weight loss: வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் மக்களின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கிறது. குறிப்பாக எடை அதிகரிப்பு பிரச்சினையை ஏற்படுத்துகிறது. மூன்றில் இருவர் எடை அதிகரிப்பால் அவதிப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். எடை அதிகரிப்பால் பல நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது.
கட்டுக்கோப்பாக தோற்றமளிக்கவும், நோய் பாதத்தில் இருந்து தப்பிக்கவும் எடையைக் குறைக்க எளிதான வழிகளை கண்டறிந்து அதை பின்பற்றி வருகின்றனர். அந்தவகையில், நம்மில் பலர் உடல் எடையை குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் எலுமிச்சை தண்ணீர் குடித்து வருவோம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம் : ஒரே நாளில் 500 கலோரிகளை குறைக்க வேண்டுமா? இந்த 6 உணவுகளை தேர்வு செய்யுங்கள்
ஆனால், இவை உடல் எடையை குறைக்க உதவாது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், சரியாகாத்தான் படித்தீர்கள். உடல் எடையை குறைக்க உதவும் என நாம் குடிக்கும் பயனற்ற பானங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எடையைக் குறைப்பதில் பயனற்ற பானங்கள்

ஆப்பிள் சாறு வினிகர் (Apple Cider Vinegar)
ஆப்பிள் சைடர் வினிகர் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால், இது உடல் எடையை குறைக்க அந்த அளவு பயனுள்ளது அல்ல. அதிக அளவு ஆப்பிள் சைடர் வினிகரை உட்கொள்வது செரிமான பிரச்சனைகளான அஜீரணம், அமிலத்தன்மை, வயிற்றில் வாயு, எரியும் உணர்வு அல்லது வலி போன்றவற்றை ஏற்படுத்தும்.
இந்த பதிவும் உதவலாம் : உடல் எடையை குறைக்க மாம்பழம் உதவுமா?
கிரீன் டீ (Green Tea)

உடல் எடையை குறைக்க நம்மில் பலர் தினமும் காலையில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்போம். இதை டீவி விளம்பரங்களிலும் பார்த்திருப்போம். ஆனால், தினமும் காலையில் ஒரு கிளாஸ் க்ரீன் டீ குடிப்பது உடல் எடையை குறை உதவாது. கிரீன் டீ குடித்தால் கலோரி குறையும் என்றால், நீங்கள் நாள் முழுவதும் பல கிளாஸ் கிரீன் டீ குடிக்க வேண்டி இருக்கும்.
இப்படி அளவுக்கு அதிகமாக கிரீன் டீ குடித்தால் பல பக்க விளைவுகளை நாம் சந்திக்க வேண்டி இருக்கும். க்ரீன் டீ உடல் எடையை குறைக்க ஒரு ஊடகமாக மட்டுமே. அதனுடன் ஆரோக்கியமான உணவு மற்றும் தினசரி உடற்பயிற்சியும் முக்கியம். கிரீன் டீயில் மற்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியாக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : உடல் எடையை குறைக்க டீ உதவுமா? வாங்க பாக்கலாம்
இஞ்சி, தேன் மற்றும் எலுமிச்சை டீ

இஞ்சி, தேன் மற்றும் எலுமிச்சை நீர் எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்காது. இருப்பினும், இந்த நீரை தினமும் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
அதன் நுகர்வு எடை இழப்புக்கு நேரடியாக உதவாது. எலுமிச்சையில் வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகின்றன மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றன.
Pic Courtesy: Freepik