Thu Oct 29, 2026 | 01:44 PM IST

Korean Women Slim Secrets: கொரிய பெண்களைப் போல உடுக்கை இடை வேண்டுமா?… இந்த பானங்களை குடிங்க!

Korean Women Slim Secrets: கொரிய பெண்களைப் போல உடுக்கை இடை வேண்டுமா?… இந்த பானங்களை குடிங்க!Korean Women Slim Secrets: கொரிய பெண்களைப் போல உடுக்கை இடை வேண்டுமா?… இந்த பானங்களை குடிங்க!

இந்தியர்களிடையே கொரிய படங்கள், வெப் சீரிஸ் பிரபலமாக இருக்க கொரிய ஆண்களாக இருந்தாலும் சரி, கொரிய பெண்களாக இருந்தாலும் சரி அவர்களது முகத்தில் இருக்கும் பிரகாசம் காரணமாகிறது. குறிப்பாக கொரிய பெண்கள் முக வசீகரம் மட்டுமல்ல, உடற்கட்டும் கவர்ந்திழுக்கக்கூடிய வகையில் கட்டுக்கோப்பாக இருக்கும்.

அதனால்தான் நம் நாட்டு மக்கள் கொரிய சீரியல், பாப் நட்சத்திரங்கள் மற்றும் மாடல்களை விரும்புகிறார்கள். கொரியர்களுக்கு எப்படி இவ்வளவு அழகு வரப்பிரசாதமாக கிடைத்தது? அவர்கள் ஏன் மிகவும் ஒல்லியாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறார்கள்? அவர்களின் உடல் எடை குறைப்பின் ரகசியம் என்னவென அறிந்து கொள்ளுங்கள்…

கிரீன் டீ:

கிரீன் டீ பொதுவாக எடை இழப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. பச்சை தேயிலை பொதுவாக ஆரோக்கியத்திற்கு நல்லது. கிரீன் டீயில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது நல்லது. இது உடலின் வளர்சிதை மாற்ற ஊக்கிகளில் ஒன்றாகும். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

புதினா:

வெள்ளரி, புதினா அல்லது புதினா கலந்த தண்ணீர் உடல் எடையைக் குறைக்க நல்லது. புதினா இலைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனால் செரிமானம் எளிதாகும். வெள்ளரி மிகவும் நீர்ச்சத்து கொண்டது. உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்கவும் இது நல்லது. இந்த இரண்டு கலவையும் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. எடை குறைக்க உதவுகிறது.

இஞ்சி, எலுமிச்சை சாறு:

இஞ்சி மற்றும் எலுமிச்சை கொண்டு தயாரிக்கப்படும் தண்ணீரும் எடை இழப்புக்கு மிகவும் நல்லது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. வீக்கத்தைத் தடுக்கிறது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்த உதவுகிறது. கொழுப்பைக் குறைக்க இஞ்சி நல்லது. எலுமிச்சை உடலின் வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்த உதவுகிறது.

பார்லி டீ:

பொரிச்சா என்றும் அழைக்கப்படும் பார்லி டீ கொரியர்களால் உடல் எடையை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் காஃபின் மிகவும் குறைவு. கலோரிகள் குறைவு. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது மற்ற டீ மற்றும் காபிகளுக்கு மாற்றாகும். இது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.

Read Next

→ Peanut For Weight Loss: உடல் எடையை கிடுகிடுவென குறைக்க… வேர்க்கடலையை இப்படி பயன்படுத்திப் பாருங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.