Fri Sep 11, 2026 | 11:10 PM IST

Chia Seeds for weight Loss: தொப்பை கொழுப்பை கரைச்சி எடுக்க இந்த 3 பொருட்கள் மட்டும் போதும்!

தொப்பையை குறைக்க உதவும் சில சிறப்பு வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இவற்றில் வேகமாகவும், நல்ல பலனையும் தரக்கூடிய முக்கியமான விதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்…

வயிற்றின் அளவு எவ்வளவு வேகமாக கூடுகிறதோ, அவ்வளவும் உடல் நலத்திற்கு கேடு. நீண்டுகொண்டிருக்கும் தொப்பை அதிக எடை இல்லாதவர்களுக்கும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது ஒரு அழகுப் பிரச்சனை மட்டுமல்ல, கடுமையான உடல்நலப் பிரச்சனையும் கூட.

வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க உடற்பயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் முக்கியம். இதனுடன், சில சிறப்பு வீட்டு வைத்தியங்களும் நன்மை பயக்கும். இந்த வீட்டு வைத்தியங்களில் சில பானங்களும் அடங்கும். இவற்றில் ஒன்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்…

எலுமிச்சை:

செரிமானத்தை மேம்படுத்தி, உடல் கொழுப்பை எரிப்பதன் மூலம் கொழுப்பு இழப்புக்கு எலுமிச்சை நல்லது.எலுமிச்சை சாறு தண்ணீரில் கலந்து குடிப்பது செரிமானத்திற்கு நல்லது மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.

செரிமானத்தை மேம்படுத்தவும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் எலுமிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, இது உடலின் வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்த உதவுகிறது.

தேன்:

தேன் இனிப்பாக இருந்தாலும், தூய்மையாகவும், மிதமாகவும் இருந்தால் உடலுக்கு நல்லது. இது கொழுப்பை குறைக்கவும் பயன்படுகிறது. இது உடல் கொழுப்பை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். பல ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய தேன், உடலுக்கு ஆற்றலை வழங்குவதும் நல்லது.

சிக்கனமாகப் பயன்படுத்துவதும் முக்கியம். தேனை அதிகமாக பயன்படுத்தினால் உடல் பருமனை அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சியா விதைகள்:

ஒரு டீஸ்பூன் சியா விதைகளை அரை கிளாஸ் தண்ணீரில் ஊற வைக்கவும். முந்தின இரவே போடலாம். அது ஊறி மறுநாள் பெரிதாக வளரும். அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்க்கவும்.

இனிப்பை விரும்பாதவர்கள் தேனைப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. இல்லையெனில், நீங்கள் சிறிது இலவங்கப்பட்டை சேர்க்கலாம். இதுவும் நல்லதுதான். சிறிது சூடு செய்து குடிப்பது மிகவும் நல்லது.

Read Next

Weight Loss Drinks: உடல் எடை பிரச்சனை காணாமல் போக இதை மட்டும் குடித்து பாருங்கள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content