Right way to consume apple cider vinegar for weight loss: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும். இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இவ்வாறு உடல் எடையைக் குறைக்கவும், கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆப்பிள் சைடர் வினிகர் உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர் என்பது வினிகரின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. இந்த ஆப்பிள் சைடர் வினிகர் ஆனது ஆப்பிள்களின் சாற்றிலிருந்து தயாரிக்கப்படும் பானமாகும். இது ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாவைக் கொண்டு புளிக்க வைக்கப்படுகிறது. நொதித்தல் செயல்முறைக்கு பின்பு, வினிகராக மாற்றுவதற்கு அசிட்டிக் அமிலம் திரவத்தில் சேர்க்கப்படுகிறது. இதில் உடல் எடையைக் குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் எவ்வாறு உதவுகிறது என்பதையும், உடல் எடை குறைய ACV-யை எப்படி உட்கொள்ளலாம் என்பது குறித்துக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Green coffee for Weight loss: கிரீன் டீ இல்ல கிரீன் காபி குடிங்க! எடை மடமடனு குறையும்
உடல் எடை குறைய ஆப்பிள் சைடர் வினிகர் எவ்வாறு உதவுகிறது?
ஆப்பிள் பழத்திலிருந்து தயார் செய்யப்படும் ஆப்பிள் சைடர் வினிகர் குறைந்த கலோரி நிறைந்த பானமாகும். இவை உடலுக்கு திருப்தி உணர்வை அளித்து, ஆரோக்கியமற்ற பசியைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இது பசியைக் கட்டுப்படுத்தும் விளைவுகளுக்காக நன்கு அறியப்படுகிறது. இதன் மூலம் கூடுதல் கலோரி உட்கொள்ளலைத் தடுக்கிறது. ஆய்வு ஒன்றில், வினிகரில் நிறைந்த அசிட்டிக் அமிலம் கொழுப்பு திரட்சியை அடக்குவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு ஆரோக்கியமற்ற பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையிழப்பை ஊக்குவிக்கிறது.
ஆப்பிள் சைடர் வினிகர் தரும் நன்மைகள்
- பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் ஆப்பிள் சைடர் வினிகரில் நிறைந்துள்ளது. மேலும் இதில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் சில வகையான செல் சேதத்தைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த உதவுகிறது.
- குறிப்பாக உணவுக்குப் பிறகு ஆப்பிள் சைடர் வினிகர் உட்கொள்வது இரத்த சர்க்கரையை குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இவை ஹெச்டிஎல் என்ற நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும், உடலில் ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது.
- இது தவிர, நெஞ்செரிச்சல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் இன்னும் பிற செரிமான பிரச்சனைகளுக்கு ஆப்பிள் சைடர் வினிகர் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தொப்பைக் கொழுப்பை எளிதில் கரைக்கும் வெண்பூசணி ஜூஸ்! எப்படி தெரியுமா?
எப்போது உட்கொள்ளலாம்?
ஆப்பிள் சைடர் வினிகர் பல்வேறு நன்மைகளைத் தந்தாலும், இதை சரியான அளவில் உட்கொள்வது அவசியமாகும். அதன் படி, ஒரு ஆரோக்கியமான நபர் ஆரோக்கிய நலன்களைப் பெற 15 மில்லிலிட்டர்கள் அல்லது 1 டேபிள் ஸ்பூன் அசிட்டிக் அமிலத்தை தினமும் குடிப்பது போதுமானதாகும். எனினும், இதை சரியான அளவில் எடுக்கப்படாவிட்டால் பற்களின் பற்சிப்பி அரிப்பு, சரும எரிச்சல் மற்றும் வேறு சில பக்கவிளைவுகளை உண்டாக்கலாம்.
மேலும் ஆரோக்கிய நன்மைகளைப் பெற ஆப்பிள் சைடர் வினிகரின் அமிலத்தன்மையை நடுநிலையாக்குவது அவசியமாகிறது. ஹெல்த்லைன் படி, 1-2 டீஸ்பூன் அளவிலான ஆப்பிள் சைடர் வினிகரை உணவுக்கு முன் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதன் நுகர்வு ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாக இருப்பினும், இதை மிதமானதாக உட்கொள்ள வேண்டும். எனினும் இது விரிவாக ஆய்வு செய்யப்படவில்லை.
இந்த பதிவும் உதவலாம்: Grapes for Weight Loss: என்ன செய்தாலும் தொப்பை குறையவில்லையா? கருப்பு திராட்சை ஜூஸ் குடிங்க!
Image Source: Freepik