Vijay Sethupathi Body Shaming Impact: சிக்ஸ் பேக், கட்டுமஸ்தான உடல், நல்ல உயரம், வெள்ளை நிறம் இதெல்லாம் தான் நடிகராவதற்கு தகுதி என்ற நிலையை மாற்றி அமைத்தவர்களில் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய்சேதுபதி உள்ளிட்டோருக்கு பிரதான பங்கு உண்டு. இதுபோல் திறமைக்கு உடல் உருவம் முக்கியமல்ல என்பதை நிரூபித்த பிரபலங்கள் பலர் உள்ளனர்.
விஜய்சேதுபதி தமிழில் மட்டுமல்ல இந்தியிலும் மிகவும் பிரபலமடைந்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த ஜவான் திரைப்படம், ஃபார்ஜி வெப் சீரிஸ் மிகப் பெரிய வெற்றி பெற்றது. கதாநாயகன் தான் என்று இல்லாமல் நல்ல கதாபாத்திரத்திரம் எது கிடைத்தாலும் அதில் தன் திறமையை நிரூபித்து வெளுத்து வாங்குவார். அந்தவகையில் இவர் இந்தி ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமடைந்துள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
விஜய் சேதுபதி நடிக்கும் கிறிஸ்துமஸ்
இது ஜனவரி மாதமாக இருக்கலாம், ஆனால் நடிகர் விஜய் சேதுபதிக்கு இது மிகவும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மாதமாகும். ஆம், ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் உள்ளிட்டோர் நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.

பொதுவாக பாலிவுட் நடிகர்கள் சிக்ஸ் பேக் போன்ற கட்டுமஸ்தான உடலுடன் காட்சியளிப்பார்கள். இப்படி இருந்தால் தான் பாலிவுட்டில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உடைத்துக் காட்டியவர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இதற்கிடையில் கிறிஸ்துமஸ் திரைப்பட செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து பேசிய விஜய்சேதுபதி, தானும் பாடி ஷேமிங்கிற்கு உள்ளானதாக ஒப்புக் கொண்டார். ஆனால் தனக்கே உரிய பாணியில் மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
விஜய் சேதுபதி கூறிய கருத்து
இதுகுறித்து சிரித்துக்கொண்டே பேசிய அவர், எனது தோற்றத்திற்காக ஆரம்பத்தில் நானும் நிறைய பாடி ஷேமிங்கை எதிர்கொண்டேன். உருவத் தோற்றத்தால் கேலிக்கு உள்ளானேன். ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் யார் என்பதை மக்கள் விரைவில் ஏற்றுக்கொள்கிறார்கள்.
இப்போது நான் எங்கு சென்றாலும், நான் ஏற்றுக்கொள்ளப்படுகிறேன், அது ஒரு வரம். நான் நானாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், எனது பார்வையாளர்களுக்கு நன்றி. நான் இதை எதிர்பார்க்கவில்லை என கூறினார்.
தொடர் முன்னேற்றத்தை நோக்கி விஜய்சேதுபதி
மேலும், தொடர்ந்து அடுத்தடுத்து கிடைக்கும் வாய்ப்பின் மூலம் பாலிவுட் ரசிகர்களும் தன்னை ஏற்றுக் கொண்டனர் என நம்புகிறேன். ரசிகர்களின் அன்பைப் பெறுவது ஒரு எனர்ஜி ட்ரிங்க் போன்றது.
மக்கள் உங்களை நேசிக்கும்போது, உங்கள் பணி மக்களைச் சென்றடைகிறது. மும்பைகர் படத்திற்காக நான் மும்பை வந்த போது வெகுசிலரே என்னை அறிந்திருந்தனர். இப்போது நிறைய பேருக்கு என்னை தெரியும். ரசிகர்கள் அணுகல் தனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.
எளிமையான சாதாரண உடைகளால் கிண்டல்
விஜய் சேதுபதி தனது நடிப்புத் திறமைக்காகப் பாராட்டப்பட்டாலும், நிகழ்வுகள் மற்றும் உயர்நிலை பாலிவுட் விழாக்களில் அவர் எளிமையான சாதாரண உடைகள் மற்றும் செப்பல் அணிந்து வருவதும் நிறைய கேலிச் சொல்லுக்கு உள்ளாக்கப்பட்டன.
அவரது உடை தோற்றத்தாலும் அவர் பலிச்சொல்லுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இது தனக்கு நேர்ந்தது உண்மை தான் என நடிகர் விஜய்சேதுபதியும் ஒப்புக் கொண்டார். மேலும், நான் இதுபோன்ற உடைகளை அணியும் போது சௌகரியமாக உணருகிறேன் என்றும் கூறினார்.
மிகப்பெரிய நடிகரான விஜய்சேதுபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரன மனிதர்கள் இதுபோல் உடல் கேலிக்கு உள்ளாகும் போது என்னென்ன பிரச்சனைகளை சந்திப்பார்கள் தெரியுமா?
உருவக் கேலியால் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்
பாடி ஷேமிங் என்பது ஒருவரின் உடலின் தோற்றத்தின் அடிப்படையில் கேலி செய்வது. இது உச்சக்கட்ட அவமானப்படுத்துதல் ஆகும். இந்த வகை அப்படியே செல்லாத நபராக உங்களை உணரவைத்து நம்பிக்கையை உருக்குலைத்த அதே இடத்தில் தேங்க வைக்கும். உருவ கேலி, உடல் கேலி, உடை, நிற கேலிகள் என்பது ஒருவரின் தன்னம்பிக்கையை உடைக்கும் விஷயமாகும்.
ல காலங்களுக்கு முன்பு பாடி ஷேமிங் குறித்து நிறைய சலசலப்புகள் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். சமூக ஊடகங்கள் உட்பட பல இடங்களில் இதற்கு எதிராக இயக்கங்களும் பிரச்சாரங்களும் தொடங்கப்பட்டன. இந்த பிரச்சாரத்தில் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
பாடி ஷேமிங் என்றால் என்ன?
பாடி ஷேமிங் என்பது ஒருவரின் உடலைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைச் சொல்வது. இது ஒருவரின் உயரம், உடல் பருமன், முடி, வயது, உடைகள், உணவுப் பழக்கம், அழகு மற்றும் கவர்ச்சியைப் பற்றியதாக இருக்கலாம். இதனால் பல பிரச்சனைகளும் ஏற்படலாம். பல சமயங்களில் பாடி ஷேமிங் மனதளவில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
பல சமயங்களில் பாடி ஷேமிங் சுய வெறுப்புக்கு வழிவகுக்கும். இது மனச்சோர்வு, பதட்டம் அல்லது குறைந்த சுயமரியாதைக்கு வழிவகுக்கும். இது இதயம் மற்றும் மனதை எதிர்மறையாக பாதிக்கிறது. இதனால் பல வகையான பிரச்சனைகளும் ஏற்பட ஆரம்பிக்கின்றன.
உடல் வெட்கப்படுவதைத் தவிர்ப்பது எப்படி?
உங்களை நேசிக்கவும், உங்களை ஏற்றுக்கொள்ளவும்
உங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். உயரம், நிறம், உருவம், தோலின் நிறம் இவைகளை அப்படியே ஏற்று நேசிக்க வேண்டும். தவறுதலாகக் கூட யாருடனும் தன்னை ஒப்பிடக் கூடாது.
Image Source: FreePik