$
Thalapathy Vijay: நாளைய தீர்ப்பில் தொடங்கி நாளைய தீர்ப்பை நிர்ணயிக்கக் கூடிய இடத்தை நோக்கி பயணம் செய்துக் கொண்டிருக்கிறவர் தளபதி விஜய். 1992ல் நாளைய தீர்ப்பு படத்தில் எப்படி அறிமுகமானாரோ அப்படியே இன்றளவும் இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அப்போது பார்த்ததை விட இப்போது இன்னும் மிக அழகாக இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இளமை ரகசியம்
நடிகர் விஜய் தனது ஒழுக்கமான வாழ்க்கை முறையே இதற்கும் ஒரு காரணம். விஜய்யை திரையிலும் வெளியேயும் வயதாகாமல் வைத்திருக்க ஆரோக்கியமான உணவு முறை மற்றஉம் உடற்பயிற்சி முறையே இதற்கு காரணமாகும். நடிகர் விஜய் வாழ்க்கை முறை குறித்து வெளியான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஏறத்தாழ 50 வயது கொண்டவர் விஜய் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இன்றளவும் தான் நடிக்கும் படங்களின் சண்டை காட்சிகளில் டூப் போடுவதை விஜய் தவிர்த்து தானே செயல்படத் தொடங்குவாராம். இதற்கு ஏற்ற உடற்பயிற்சியையும் விஜய் தவராமல் செய்வாராம்.

தளபதி விஜய் டயட் சீக்ரெட்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சராசரியாக மூன்று வேளை கட்டுப்பாடின்றி உணவை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக அவ்வப்போது அதாவது 6 வேளையாக பிரித்து உணவை உட்கொள்வாராம். இது எடையை கூடாமல் தடுத்து உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்க உதவுகிறது. விஜய் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க இந்த வகை உணவு முறைக்கு தயாராகுங்கள்.
தினசரி கார்டியோ பயிற்சி
தளபதி விஜய் தினசரி தவறாமல் 30-40 நிமிடம் கார்டியோ உடற்பயிற்சி செய்வாராம். இது கலோரிகளை எரிப்பது மட்டுமல்ல, இந்த நடைமுறை அவரது நாளை உற்சாகத்தோடு தொடங்கவும் இளமையாக செயல்படவும் வழிவகுக்கிறது. உங்கள் தினத்தையும் இப்படி தொடங்குவது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.
காலை உணவில் கவனம்
விஜய் தனது காலை உணவை 9 மணிக்கு முன்பே எடுத்துக் கொள்வாராம். புரோட்டீன் நிறைந்த இட்லிகள், முட்டைகள், வேர்க்கடலை சட்னி, புத்துணர்ச்சியூட்டும் பழங்கள் மற்றும் இளநீர் போன்றவற்றை தவறாமல் சேர்த்துக் கொள்வாராம். இது ஆற்றல்மிகுந்த செயல்பட பேருதவியாக இருக்கும்.
வீட்டில் சமைத்த மதிய உணவு
விஜய் எப்போதும் மதிய உணவு என்பதை வீட்டில் சமைத்த உணவுக்கே முக்கியத்துவம் கொடுப்பாராம். எந்த வகையான சுவையான உணவாக இருந்தாலும் அது வீட்டில் சமைத்த உணவாகதான் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பாராம். இது அவரது அழகு மற்றும் உடல் எடை பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும்.
இரவு உணவு மிக முக்கியம்
எந்த சூழ்நிலையிலும் கனமான இரவு உணவை எடுத்துக் கொள்ளமாட்டாரம். அதேபோல் அவர் தனது இரவு உணவை 7 முதல் 7:30 மணிக்குள் எடுத்துக் கொள்வாராம். விஜய் தனது இரவு உணவை இலகுவாக இருப்பதில் கவனம் செலுத்துவார். இது மெலிந்த உடலமைப்பைப் பராமரிக்க உதவுகிறது மற்றும் ஒரு நல்ல இரவு தூக்கத்தை உறுதி செய்கிறது. தூக்கம் என்பது முகம் பொலிவு, உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்.
ஸ்மார்ட் ஸ்நாக்ஸ்
உணவுக்கு இடையில் பசி அல்லது ஏதாவது சாப்பிட வேண்டும் என தோன்றினாலும் நொறுக்கு தீனிகளை எடுத்துக் கொள்ளமாட்டாராம். மாறாக அதற்கு பதிலாக சாலட், பழங்கள் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவாராம். இதுவும் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போல் நீங்களும் என்றென்றும் இளமையாக இருக்க வேண்டும் என்றால் இந்த வழிகளை எந்த சூழ்நிலையிலும் பின்பற்ற வேண்டியது அவசியம். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற நிலையில் இருக்கும் அவரே இப்படி கட்டுப்பாடோடு இருக்கும்போது நாமும் அதை செய்ய முயற்சிப்பது நல்லதுதானே.