Virat Kohli: எவ்வளவு சாப்பிட்டாலும் விராட் கோலி போல் எப்போதும் ஒல்லியாக இருக்க இதை செய்யுங்க!

கட்டுமஸ்தான உடல் கொண்டவர்கள் தான் வலுவாக இருப்பார்கள் என்று அர்த்தமில்லை. எப்போதும் மெலிந்த நிலையில் விராட் கோலி போல் ஆரோக்கியமாக இருக்க சில எளிய வழிகள் பெரிதும் உதவியாக இருக்கும்.
  • SHARE
  • FOLLOW
Virat Kohli: எவ்வளவு சாப்பிட்டாலும் விராட் கோலி போல் எப்போதும் ஒல்லியாக இருக்க இதை செய்யுங்க!

Virat Kohli: கட்டுமஸ்தான உடல், படர்ந்து விரிந்த மார்பகம் என பல்க் ஆக இருந்தால் தான் ஒரு நபர் வலுவாக இருக்கிறார் என்று அர்த்தம் இல்லை. மெலிந்த நிலையில் இருந்தாலும் வலுவாக இருக்க அதிகம் வாய்ப்பிருக்கிறது. அதேபோல் எவ்வளவு சாப்பிட்டாலும் எப்போதும் ஒல்லியாகவே இருக்கவும் சில வழிகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

மெலிந்த நிலையில் ஒல்லியாக இருந்தால் எப்படி வலுவாக இருக்க முடியும் என்ற கேள்வி வரலாம். இதற்கு பலர் எடுத்துக்காட்டாக உள்ளனர், இன்றைய நிலை எடுத்துக்காட்டாக பார்த்தால் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கூறலாம். ஆள் பார்க்க அவ்வளவு பெரிதாக பயமுறுத்தும் அளவில் எல்லாம் இருக்கமாட்டார். ஆனால் அவர் அடிக்கும் அடி இடி மாதிரி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

பயனுள்ள மற்றொரு தகவல்: Brisk Walk Benefits: தினமும் எவ்வளவு நேரம் விறுவிறுப்பான வாக்கிங் சென்றால் உடலுக்கு நல்லது?

விராட் கோலி போல் மெலிந்த நிலையிலும் வலுவாக இருக்க சில வழிகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல் எவ்வளவு சாப்பிட்டாலும் சில முறைகள் நம்மை மெலிந்த நிலையிலேயே வைக்க உதவும். அதற்கான வழிகள் என்னவென்று பார்க்கலாம்.

விராட் கோலி போல் எப்போதும் மெலிந்த நிலையில் வலுவாக இருக்க எளிய வழிகள்

  • நீராகாரம் நிரம்பிய பழங்கள் சாப்பிடுங்கள்
  • நீர்ச்சத்து நிறைந்த ஜூசி பழங்கள் எடை இழப்புக்கும் எடை மேலாண்மைக்கும் மிகவும் நன்மை பயக்கும்.
  • ஏனெனில் இதில் உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உள்ளன.
  • இவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகின்றன.
  • நமது குடலின் செயல்பாட்டை மேம்படுத்தி கொழுப்பை எரிக்க பெருமளவு உதவும்.
  • தர்பூசணி, ஆரஞ்சு, அன்னாசி பப்பாளி மற்றும் பெர்ரி போன்ற ஜூசி பழங்களை சாப்பிட வேண்டும்.
lean and healthy body

இதில் அதிக நீர்ச்சத்து இருப்பதால், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். இவற்றைச் சாப்பிடுவதன் மூலம், உங்களுக்கு மீண்டும் மீண்டும் பசியின்மை ஏற்படாது. எனவே எப்போதும் ஒல்லியாக இருக்கலாம். இந்த பழங்களை சாப்பிடுவதன் மற்றொரு நன்மை, இது கெட்ட கொழுப்பைக் குறைக்க பெருமளவு உதவும்.

புரதம் நிறைந்த காய்கறிகள்

  • புரதம் நிறைந்த காய்கறிகள் சாப்பிடுவதன் மூலம் உங்கள் பசி ஹார்மோன்களை குறைக்கலாம்.
  • மேலும் புரதம் நிறைந்த காய்கறிகள் உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளிக்கும்.
  • புரதம் எடையை அதிகரிக்க விடாமல் நிலையாக எப்போதும் வைத்திருக்க உதவும்.
  • காய்கறிகளில் நார்ச்சத்து தவிர, இரும்புச்சத்து மற்றும் பல வைட்டமின்களும் உள்ளன.

ஓட்ஸ் சாப்பிடுவது நல்லது

  • எடை இழப்புக்கும், எடை மேலாண்மைக்கும் ஓட்ஸ் மிகவும் முக்கியமாகும்.
  • நார்ச்சத்து, தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒன்பது அத்தியாவசிய அமினோ அமிலங்கள் ஓட்ஸில் இருக்கிறது.
  • இது உடலில் உள்ள மற்ற உறுப்புகளின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.
  • மேலும் ஓட்ஸ் உடலை எளிதில் நச்சு நீக்க உதவியாக இருக்கும்.
  • சியைக் கட்டுப்படுத்தவும் உடல் பருமனைத் தடுக்கவும் இது உதவியாக இருக்கும்.

முழு தானியங்கள்

  • முழு தானியங்கள் எப்போதும் எடை இழப்பு உதவியாக இருக்கும்.
  • எடை குறைக்கவோ, அதிகரிக்கவோ அல்ல சீரான எடையை பராமரிக்க இது பெரிதும் உதவியாக இருக்கும்.
  • இவற்றை குறைவாக சாப்பிடுவதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறலாம்.
  • எடையை சமநிலையில் வைத்திருப்பதோடு, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இது உதவுகிறது.

குறைந்த கொழுப்புள்ள உணவுகள்

  • எடை இழக்க விரும்புவோருக்கு குறைந்த கொழுப்புள்ள உணவுகள் பெரும் உதவியாக இருக்கும்.
  • குறைந்த கொழுப்பை உட்கொள்வது உடலில் கொழுப்பை அதிகரிக்காமல் பராமரிக்க உதவும்.
  • வறுத்த மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது என்பது இதய நோய் பாதிப்பை தடுக்கவும் உதவும்.
how to be alway lean body

சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது நல்லது

  • எடை அதிகரிப்பதில் சர்க்கரை பெரும் பங்கு வகிக்கிறது.
  • அதிக சர்க்கரை உட்கொள்வது கட்டுப்பாடற்ற பசியை ஊக்குவிக்கிறது. இதனால் எடை வேகமாக அதிகரிக்கிறது.
  • வளர்சிதை மாற்றத்தையும் மெதுவாக்கி, கொழுப்பை ஜீரணிக்கும் செயல்முறையையும் மெதுவாக்குகிறது.
  • இது உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
  • சரியான உடல் வடிவத்தை விரும்பினால் சர்க்கரையை பெருமளவு குறைப்பது மிக நல்லது.

மேலும் படிக்க: idly vs dosa: இட்லியா? தோசையா? ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல! ஆனா இதை சாப்பிட்டா தப்பிச்சீங்க!

மெலிந்த உடலுடன் எப்போதும் இருக்க என்ன செய்ய வேண்டும்?

  1. நீங்கள் உடற்தகுதி மற்றும் வலுவான தசைகளை அடைய விரும்பினால், முதலில் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும்.
  2. உங்கள் வயிற்று தசைகளை வலுப்படுத்துங்கள், உங்கள் வயிறு வீங்க விடாதீர்கள். இன்றிலிருந்து உடல் பருமனைக் கட்டுப்படுத்தத் தொடங்குங்கள்.
  3. தசைகளை வலுப்படுத்த, புரதம் தவிர, தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளும் தேவை.
  4. தொடர்ந்து உடற்பயிற்சி செய்து, புரதம் மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் கொண்ட உணவு உங்களுக்கு நல்லது.
  5. தசைகளை உருவாக்க, ஊட்டச்சத்துக்களுடன் கூடிய சீரான உணவு தேவை. ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது கொழுப்பை அதிகரிக்கும்.
  6. காலை உணவு 8 மணிக்கும், சிற்றுண்டி 11 மணிக்கும், மதிய உணவு 1 மணிக்கு சாப்பிட வேண்டும்.
  7. தேநீர் மற்றும் பிஸ்கட் மாலை 4 மணிக்கும், இரவு உணவு 7 மணிக்கும், லேசான சிற்றுண்டி இரவு 9 மணிக்கும் சாப்பிட வேண்டும்.
  8. சைக்கிள் ஓட்டுதல், ரன்னிங், நீச்சல் அல்லது நடனம் கூட செய்யலாம். இது உடல் தகுதிக்கு மிகுவம் பயனுள்ளதாக இருக்கும்.
  9. கொழுப்பை இழந்த பிறகு, தசைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
  10. தசைகளை வலுவாக்க சரியான உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிக முக்கியம்.
  11. இவை அனைத்தும் உடல் தகுதியை கட்டுப்படுத்த பெருமளவு உதவியாக இருக்கும்.

image source: Meta AI

Read Next

Thuvaiyal Omelette: வெறும் 2 முட்டை இருந்தா போதும் சுவையான துவையல் ஆம்லேட் செய்யலாம்!

Disclaimer