What Herbal Drink Is Good For Weight Loss: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதில் ஒன்றாக உடல் பருமனும் அடங்கும். இதனால், எடையிழப்புக்கு பலரும் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர். எனினும், இந்த எடையிழப்பு பயிற்சி மிகவும் கடினமானதாகும். உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் குறிப்பாக தங்கள் உணவைக் கண்காணிப்பது அவசியமாகும். இதனுடன், சீரான தூக்கமுறை, மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்றவற்றின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.
இவ்வாறு உடல் எடையைக் குறைக்கவும், கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவ ஆயுர்வேத முறைகளைப் பயன்படுத்தலாம். நம்மில் பெரும்பாலானோர் உடல் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இதில் எளிதான முறையில் உடல் எடையைக் குறைக்கும் விதமாக வீட்டிலேயே தயார் செய்யப்படும் ஆயுர்வேத பானங்களை உட்கொள்ளலாம். இவை உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: நெய்யை இப்படி சாப்பிட்டா கண்டிப்பா பிரச்சனை தான்! நீங்க மறந்தும் இப்படி சாப்பிடாதீங்க!
இரவு நேர உணவு
உடல் எடைக் கட்டுப்பாட்டில் இரவு நேர உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. இரவு நேர பசியை கட்டுப்படுத்தும் போது உடல் எடையை குறைப்பது எளிதானது அல்ல. ஏனெனில், இரவு அதிகளவு உணவு உட்கொண்ட பிறகு எந்த உடல் செயல்பாடும் இல்லாதது உடல் எடையிழப்புப் பயணத்தை கடினமாக்கலாம். பல உணவு முறைகள், உடற்பயிற்சிகளை முயற்சித்த பிறகும் பலரும் உடல் எடை குறைப்பதில் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் இரவு உணவுக்குப் பிறகு ஒரு தனித்துவமான அணுகுமுறையை வழங்கும் விதமாக, ஆயுர்வேத பானங்களை உட்கொள்ளலாம். இதில் உடல் எடை குறைய உதவும் ஆயுர்வேத பானங்கள் சிலவற்றைக் காணலாம்.
உடல் எடையைக் குறைக்க உதவும் ஆயுர்வேத பானங்கள்
தொப்பை கொழுப்பைக் குறைக்க இரவு உணவுக்குப் பின்னர் இந்த ஆரோக்கியமான ஆயுர்வேத பானங்களை உட்கொள்ளலாம்.
இஞ்சி டீ
இஞ்சி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த மூலிகையாகும். இஞ்சியில் தெர்மோஜெனிக் பண்புகள் நிறைந்துள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கொழுப்பை எரிக்கும் உடலின் திறனை அதிகரிக்கிறது. இவை வீக்கம் மற்றும் அசௌகரியத்தைக் குறைக்கிறது. இவை உடல் எடையைக் குறைக்க உதவும் சிறந்த தீர்வாகும். இந்த டீ தயார் செய்ய, புதிய இஞ்சித் துண்டுகளை தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். இந்த இஞ்சி டீ அருந்துவது செரிமானம் மற்றும் எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இதன் சுவைக்காக மற்றும் கூடுதல் நன்மைகளைப் பெற ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கலாம்.
திரிபலா தேநீர்
திரிபலா என்பது மூன்று பழங்கள் கொண்ட ஒரு பாரம்பரிய ஆயுர்வேதக் கலவையாகக் கருதப்படுகிறது. இதில் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் போன்ற மூன்றின் கலவையாகும். திரிபலா தேநீர் நச்சுத்தன்மையை நீக்க மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானமாக அமைகிறது. திரிபலா உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தி, உடலிலிருந்து நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுகிறது. இவை செரிமான அமைப்பை மேம்படுத்தி, ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது. இது தவிர, குடல் இயக்கத்தை ஆதரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஒரு டீஸ்பூன் திரிபலா பொடியை வெந்நீரில் ஊறவைத்து இந்த டீ தயார் செய்யப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஈவ்னிங் டைம் சாலட் சாப்பிடுபவர்களா நீங்க? முதலில் இத தெரிஞ்சிக்கோங்க
மஞ்சள் பால்
பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். மஞ்சளைக் கொண்டு தயார் செய்யப்படும் மஞ்சள் பால் உடலில் கல்லீரலில் பித்த உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் கொழுப்புகளின் செரிமானத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது இன்சுலின் எதிர்ப்பைத் தடுக்கிறது. இவை செரிமானத்தை ஆதரிப்பதுடன், உடலில் கொழுப்பு திரட்சியையும் குறைக்கிறது. மஞ்சள் பால் தயார் செய்ய, ஒரு கப் சூடான பாலில் ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். இவை உடல் எடையைக் குறைக்க உதவும் சிறந்த தேர்வாகும்.
சீரகத் தண்ணீர்
இந்திய சமையலறைகளில் ஒரு முக்கிய மசாலாவாகக் கருதப்படும் சீரகம், அதன் மான நன்மைகளுக்காக அறியப்படுகிறது. சீரகத் தண்ணீர் அருந்துவது உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே இரவு உணவுக்குப் பிறகு, ஒரு கிளாஸ் சீரகத் தண்ணீர் அருந்துவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை அகற்ற இது ஒர் சிறந்த தேர்வாகும். இதற்கு ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.
வெதுவெதுப்பான எலுமிச்சை நீர்
எலுமிச்சையில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது ஒரு சிறந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு, உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. எனவே இரவு உணவுக்குப் பின்னதாக வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை அருந்துவது உடலில் பித்த உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது உணவை மிகவும் திறமையாக உடைப்பதுடன், வீக்கத்தைத் தடுத்து, வயிற்றை லேசாக உணரவைக்கிறது. இதற்கு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து அருந்தலாம்.
இந்த வகை ஆயுர்வேத பானங்களை உட்கொள்வது உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுப் பொருள்களை வெளியேற்றுவதுடன், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Homemade Herbal Tea: இந்த 10 வியாதிகளை இருந்த இடமே தெரியாம போக வைக்கும் சூப்பர் ஹெர்பல் டீ
Image Source: Freepik