How to consume ghee according to Ayurveda: ஆயுர்வேதத்தில் சிறந்து விளங்கும் பல்வேறு மூலிகைகள் மற்றும் இயற்கை பொருள்கள் மருத்துவ குணங்கள் பெற்று விளங்குகிறது. இந்த பொருள்களின் உதவியுடன், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு காண முடியும். அவ்வாறே, பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட உணவுப்பொருளான நெய் ஆயுர்வேதத்தில் மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த நெய்யில் உடலில் ஆற்றலை பராமரிக்க தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது.
மேலும், இது ஆக்ஸிஜனேற்றத்துடன் பல்வேறு அத்தியாவசிய தாதுக்களையும் கொண்டு விளங்குகிறது. இந்த தாதுக்கள் உடல் மற்றும் மனம் இரண்டையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. எனினும், நெய்யை சரியான முறையில் உட்கொள்ளா விட்டால், அது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். பல நேரங்களில் நாம் சில தவறான வழியில் நெய்யை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இது குறித்து ஆயுர்வேத மருத்துவர் வரலக்ஷ்மி யனமந்த்ரா அவர்கள் இன்ஸ்டாகிராமில் தனது பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: இந்த குளிருல தாங்க முடியாத மூட்டு வலியா? இந்த ஒரு ஆயுர்வேத வைத்தியம் போதும்.
நெய்யை உட்கொள்ளும் போது செய்யக் கூடாத தவறுகள்
தேனுடன் நெய் உட்கொள்வது
இது பலரும் செய்யக் கூடிய தவறாகும். தேன் மற்றும் நெய் சேர்த்து பல்வேறு இனிப்பு உணவுகளைத் தயாரிப்பர். ஆனால், இந்தக் கலவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கலாம். ஏனெனில், தேன் மற்றும் நெய் இரண்டு பொருள்களுமே செரிமானம் அடைய நேரம் எடுக்கும். மேலும், இவை இரண்டையும் ஒன்றாக உட்கொள்ளும் போது அது பித்த-தோஷ சமநிலையின்மையை ஏற்படுத்தக் கூடியதாக அமையலாம்.
குளிர்ந்த பொருள்களுடன் நெய் உட்கொள்வது
மக்கள் பலரும் குளிர்ந்த பொருள்களுடன் நெய் உட்கொள்வதை விரும்புவர். இதில் சமையலுடன், தேசி நெய்யையும் எடுத்துக் கொள்வர். இது குளிர்ந்த உணவில் நெய் சேர்த்து சாப்பிடுவது போல. ஆனால், எந்தவொரு குளிர்ந்த பொருள்களுடன் நெய் சேர்த்து சாப்பிடுவது அது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கலாம். மேலும், நெய் கனமானதுடன், ஒட்டும் தன்மை கொண்டதாக அமைகிறது. இதனை குளிர்ந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது உடலை உறைய வைக்கலாம். மேலும், இது எடை அதிகரிப்பு மற்றும் பித்த தோஷத்தின் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். கூடுதலாக, இவை செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உண்டாகலாம். எனவே நெய் உட்கொள்ளும் போது, எப்போதும் சூடான உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் தேனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிடுங்க!
உடலில் நச்சுக்கள் இருக்கும் போது நெய் உட்கொள்வது
உடல் அல்லது குடலில் ஏதேனும் நச்சுக்கள் இருப்பின், நெய் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், உடலில் நச்சுக்கள் இருக்கும் போது நாக்கு வெண்மையாக இருக்கும். மேலும், இந்த நேரத்தில் ஆற்றல் பற்றாக்குறை ஏற்படலாம். இது தவிர, சோர்வாக உணரும் நிலை உண்டாகும். இதில் நச்சுகள் கனமானவை மற்றும் ஒட்டும் தன்மையுடையதாக இருக்கும். இந்நிலையில், நெய் செரிமானம் அடைய கடினமாக இருப்பதுடன், ஒட்டும் தன்மை கொண்டதாகவும் மாறலாம். இந்த சூழ்நிலையில், நெய் சாப்பிடுவது செரிமானத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இந்த வழிகளில் நெய்யை உட்கொள்வது உடலுக்கு செரிமான பிரச்சனைகள், ஆற்றல் குறைபாடு உள்ளிட்ட பலதரப்பட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
நெய் உட்கொள்ளும் சரியான முறை
- அன்றாட உணவில் நெய் சேர்க்க விரும்புபவர்கள், சமையலுக்கு நெய்யைப் பயன்படுத்தலாம். இது அவர்களின் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
- இவ்வாறு சமையலில் சேர்க்கும் போது, நெய்யிலிருந்து அனைத்து கூறுகளும் உணவில் சேர்க்கப்படுவதுடன், எளிதில் செரிமானம் அடைகிறது.
- மேலும், கிச்சடி அல்லது பருப்புடன் நெய் கலந்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
- ஏனெனில், புரதத்துடன் நெய் உட்கொள்வது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
- இவ்வாறு சரியான வழிகளில் நெய்யை உட்கொள்வதன் மூலம், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ghee With Warm Water: வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
Image Source: Freepik