Benefits of Having Cardamom Honey on Empty Stomach: உடல் ஆரோக்கியத்திற்கு ஒவ்வொரு நாள் காலையும் சீராகத் தொடங்குவது அவசியமாகும். அவர்கள் நாளைச் சீக்கிரமாகத் தொடங்கி, சரியான நேரத்தில் தூங்க வேண்டும். இதனுடன், உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்கக் கூடிய செயல்களுடன் நாளைத் தொடங்குவது புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது. ஆயுர்வேதத்தில் ஒரு நபரின் இயல்புக்கு ஏற்றாற்போல, பல்வேறு வகையான மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் கொண்ட தண்ணீரைக் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், உடலை நச்சுத்தன்மையாக்கி, சருமத்தை பளபளப்பாக மாற்றவும் உதவுகிறது. அந்த வகையில் வெறும் வயிற்றில் தேன் மற்றும் ஏலக்காயை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இதன் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்தை மேம்படுத்தவும், உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் பெரிதும் உதவுகிறது. இதில் ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் வெறும் வயிற்றில் தேன் மற்றும் ஏலக்காயை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Amla For Immunity Boosting: டபுள் பவர் எனர்ஜி தரும் ஆம்லா! அதுக்கு இப்படி சாப்பிடுங்க
வெறும் வயிற்றில் தேன் மற்றும் ஏலக்காய் சாப்பிடுவதன் நன்மைகள்
நச்சுத்தன்மை நீக்கியாக
காலையில் வெறும் வயிற்றில் தேன் மற்றும் ஏலக்காயை உட்கொள்வதன் மூலம் அவற்றின் ஊட்டச்சத்துக்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. மேலும், இவை இரண்டுமே உடலின் செரிமான அமைப்பை மேம்படுத்தவும், கல்லீரலை நச்சுத்தன்மையற்றதாகவும் மாற்ற உதவுகிறது.
உடல் எடையிழப்புக்கு ஏற்ற பானம்
இந்த தேன் மற்றும் ஏலக்காய் கலவையானது உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. ஏனெனில், ஏலக்காய் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உடலில் கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் வைகலாம். மேலும், தேனின் இயற்கையான இனிப்பு சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்தி, மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்க்கிறது. எனினும், இதனுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நல்ல உணவுப் பழக்கங்களைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடை இழப்பை ஆதரிக்கலாம்.
செரிமான ஆரோக்கியத்திற்கு
வெறும் வயிற்றில் ஏலக்காய் மற்றும் தேன் உட்கொள்வது வயிறு தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். தேன் மற்றும் ஏலக்காயை வெறும் வயிற்றில் உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது. மேலும், ஏலக்காயில் உள்ள இயற்கையான கூறுகள், உடலில் ஆரோக்கியமான என்சைம்களை அதிகரிக்கிறது. இது தவிர, தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் வயிற்று பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஹெபடைடிஸில் சாப்பிடக்கூடிய, சாப்பிடகூடாத உணவுகள்! ஆயுர்வேதம் கூறுவது என்ன?
சரும ஆரோக்கியத்திற்கு
வெறும் வயிற்றில் ஏலக்காய் மற்றும் தேனை உட்கொள்வது சருமத்தைத் தெளிவாக மற்றும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. மேலும், ஏலக்காயில் உள்ள பல வகையான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவை சருமத்தில் ஏற்படும் வீக்கங்களைக் குறைத்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் தேனில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமத்தை நீரேற்றமாக வைப்பதுடன் சருமத்தை மென்மையாக மற்றும் பளபளப்பாக வைக்கிறது.
வாய் துர்நாற்றம் நீங்க
காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காய் மற்றும் தேன் உட்கொள்ளல் வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கும் மிகுந்த நன்மை பயக்கும். இவர்கள் ஏலக்காய் மற்றும் தேன் சாப்பிட்டு வருவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை நீக்கலாம். மேலும், தேன் உட்கொள்வது வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஏலக்காய் மற்றும் தேன் உட்கொள்வது இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரு எளிய மற்றும் பயனுள்ள ஆயுர்வேத தீர்வாக அமைகிறது. இந்த இயற்கையான தீர்வைப் பின்பற்றுவதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நலன்களைப் பெறலாம். எனினும், புதிய முறைகளைக் கையாள்வதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Tulsi Leaves for Acidity: நெஞ்செரிச்சலைத் தடுக்க துளசி இலைகளை இப்படி எடுத்துக்கோங்க
Image Source: Freepik