Is Amla Good For Immunity: மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப, உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இந்த பருவத்தில் உடலில் ஏற்படும் பலவீனமான நோயெதிர்ப்புச் சக்தி காரணமாக மக்கள் அடிக்கடி பல்வேறு நோய்களைச் சந்திக்கின்றனர். இதைத் தவிர்க்க நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும். உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் சீரான உணவுமுறையை மேற்கொள்வதும் மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில், உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, நெல்லிக்காய் சிறந்த தேர்வாக அமைகிறது. ஏனெனில், நெல்லிக்காய் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவாகும். இது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துவதுடன், உடலில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே ஷர்மா அவர்கள் நெல்லிக்காயுடன் தேன் கருமிளகு சேர்த்து தயாரிக்கும் முறை குறித்து கூறியுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Tulsi Leaves for Acidity: நெஞ்செரிச்சலைத் தடுக்க துளசி இலைகளை இப்படி எடுத்துக்கோங்க
ஆம்லாவுடன் தேன் மற்றும் கருமிளகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- ஆம்லாவில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதனுடன் நல்ல அளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இதனை உட்கொள்வதன் மூலம் பருவகாலத்தில் ஏற்படும் பல வகையான நோய்களைத் தடுக்கலாம்.
- தேன் மற்றும் கருமிளகு உட்கொள்வது உடல் எடையை எளிதாகக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனுடன், கருமிளகானது பைபரினைக் கொண்டுள்ளது. இது உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
- நெல்லிக்காயுடன் தேன் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் சோர்வு மற்றும் பலவீன உணர்வைக் குறைக்க முடியும். இது நாள் முழுவதும் உற்சாகமாக உணர வைக்க உதவுகிறது.

- நெல்லிக்காயுடன் கருமிளகு மற்றும் தேன் சேர்த்து சாப்பிடுவது வாயு மற்றும் அமிலத்தன்மையை குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
- நெல்லிக்காய் மற்றும் தேனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கூடுதலாக கருமிளகில் உள்ள மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Teeth Whitening Herbs: பால் போன்ற வெண்மையான பற்களைப் பெற உதவும் மூலிகைகள்!
நெல்லிக்காயுடன் தேன் மற்றும் கருமிளகு ரெசிபி தயாரிக்கும் முறை
தேவையானவை
- ஆம்லா - அரை கிலோ
- கருப்பு மிளகு - 3 தேக்கரண்டி (நொறுக்கப்பட்டது)
- தேன் - 100 மில்லி
செய்முறை
- இந்த ரெசிபி தயார் செய்வதற்கு முதலில் நெல்லிக்காயை கத்தி அல்லது கரண்டியால் துளைகள் போட்டு, அதை தண்ணீரில் 10 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
- அதன் பிறகு, நெல்லிக்காய் ஆறியதும், அதை ஒரு டப்பாவில் நிரப்பி தேன் மற்றும் நொறுக்கப்பட்ட கருமிளகைச் சேர்க்க வேண்டும்.
- இதை இரண்டு நாள்கள் மூடி வைத்து பிறகு சாப்பிடலாம்.
- இதில் தினமும் ஒரு நெல்லிக்காயை மட்டும் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- இவ்வாறு தேன், நெல்லிக்காய் மற்றும் கருமிளகு போன்றவற்றின் கலவையைத் தொடர்ந்து உட்கொள்வது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
- இது தவிர இதய நோய்கள் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

இவ்வாறு தேன், நெல்லிக்காய் மற்றும் கருமிளகு கலவையை உட்கொள்வது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் இரவு 1 பல் பூண்டு சாப்பிட்டு தூங்குங்க! என்ன நடக்கும்னு பாருங்க
Image Source: Freepik