Tulsi Leaves for Acidity: நெஞ்செரிச்சலைத் தடுக்க துளசி இலைகளை இப்படி எடுத்துக்கோங்க

  • SHARE
  • FOLLOW
Tulsi Leaves for Acidity: நெஞ்செரிச்சலைத் தடுக்க துளசி இலைகளை இப்படி எடுத்துக்கோங்க

இவ்வாறு ஆரோக்கியமற்ற உணவுகள் அசிடிட்டி பிரச்சனையை ஏற்படுத்தி சங்கடமான உணர்வைத் தருகிறது. இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க கடைகளில் கிடைக்கும் மருந்துகளை விட, வீட்டிலேயே உள்ள சில இயற்கையான பொருள்களைக் கொண்டு தீர்வு காணலாம். அவ்வாறு, ஆயுர்வேதத்தில் சிறந்த விளங்கும் மூலிகையான துளசி அசிடிட்டி பிரச்சனையிலிருந்து சிறந்த நிவாரணத்தை அளிக்கிறது. இதில் அமிலத்தன்மையிலிருந்து நிவாரணம் பெற துளசியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Herbs For Longevity: ஆயுளைக்காக்கும் ஆயுர்வேதம்! நீண்ட நாள் வாழ இந்த மூலிகையை எடுத்துக்கோங்க

அசிடிட்டியிலிருந்து விடுபட துளசி இலைகள் எப்படி உதவுகிறது?

ஆயுர்வேத மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் இரைப்பை பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையாக துளசி இலைகள் பரிந்துரைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில் துளசியில் உள்ள கார்மினேடிவ் பண்புகள் வாயு பிரச்சனையைத் தடுக்கவும், வயிற்றில் செரிமான சாறு உற்பத்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் இவை வயிற்றில் உள்ள அமிலங்களை சமநிலைப்படுத்தி, வயிற்று அமிலங்களின் உற்பத்தியைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது வயிற்றில் அமிலத்தன்மை மற்றும் எரியும் உணர்வைக் குறைக்கிறது.

இது தவிர, துளசி அடிப்படையிலேயே செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதன் கார்மினேடிவ் பண்புகள் புண்களின் நிகழ்வைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் வயிற்றில் ஏற்படும் வீக்கம் மற்றும் வெப்பத்தைக் குறைக்கிறது. வயிற்றின் புறணிப் பகுதியை மென்மையாக்கி எரியும் உணர்வைக் குறைக்கிறது. மேலும் இதில் உள்ள யூஜெனோலின் வயிற்று அமிலங்களை நடுநிலையாக்க உதவும் அத்தியாவசிய எண்ணெயாகக் கருதப்படுகிறது.

அசிடிட்டியைக் குணப்படுத்த துளசியை உணவில் எவ்வாறு சேர்க்கலாம்?

பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள் என கிட்டத்தட்ட பெரும்பாலான உணவு குழுக்களில் பாதுகாப்பானதாக அமைகிறது.

  • கடாய் ஒன்றில், ஒரு கப் தண்ணீருடன் 3-4 துளசி இலைகளை சேர்க்கலாம். இந்த தண்ணீரை ஒரு கொதி நிலைக்குக் கொண்டு வந்து, அதை 10-15 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி, நாள் முழுவதும் குடிக்கலாம். அடிக்கடி அசிடிட்டியால் அவதிப்படுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். சுவைக்காக இந்த தண்ணீரில் தேன் சேர்த்தும் எடுத்துக் கொள்ளலாம்.
  • துளசி டீ தயார் செய்து அருந்துவது வயிற்றுப் புறணியைப் பாதுகாப்பதுடன், இதன் யூஜெனால் உள்ளடக்கம் அமில உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Teeth Whitening Herbs: பால் போன்ற வெண்மையான பற்களைப் பெற உதவும் மூலிகைகள்!

  • எளிய வழியாக, குடிக்கும் நீரில் துளசி இலைகளைச் சேர்த்து அருந்தலாம். இவ்வாறு துளசி கலந்த நீரை அருந்துவது நாள் முழுவதும் நீரேற்றத்தைத் தருவதுடன், வயிற்று அமிலங்களை நடுநிலையாக்குகிறது. மேலும் இந்தத் தண்ணீர் குடிப்பது அமிலத்தன்மையைக் குறைத்து, எரியும் உணர்வைத் தடுக்கிறது.
  • உணவுக்குப் பிறகு துளசி இலைகளை மென்று சாப்பிடுவதன் மூலம் உமிழ்நீர் உற்பத்தியை மேம்படுத்தவும், இரைப்பை குடல் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை குளிர்விக்கவும் உதவுகிறது. மேலும் இது உணவுக்குப் பின் உண்டாகும் நெஞ்செரிச்சலைத் தடுக்க உதவுகிறது.
  • சூப்கள், வேகவைத்த காய்கறிகள், ஸ்மூத்திகள், பழச்சாறுகள் போன்றவற்றில் துளசியைச் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

இது போன்ற பல்வேறு வழிகளில் துளசி இலைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெற முடியும். எனினும், வேறு ஏதேனும் உடல் நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் அல்லது சிகிச்சை பெற்று வருபவர்கள் அல்லது அறுவை சிகிச்சைக்குப் பின் மீண்டும் வருபவர்களாக இருப்பின், துளசி இலைகளை உட்கொள்வதற்கு முன்னதாக மருத்துவரை அணுகுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் துளசி இலைகள் முற்றிலும் இயற்கையானது மற்றும் பொதுவாக பக்க விளைவுகள் ஏதும் ஏற்படுத்தாத ஒன்று. எனினும் இதை அதிகம் உட்கொள்வதால் மற்ற வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Pain Relief Kashayam: இந்த10 வியாதிகளையும் அசால்ட்டாக தட்டி தூக்கும் ஒரே கஷாயம்! இப்படி செஞ்சி பாருங்க

Image Source: Freepik

Read Next

Pain Relief Kashayam: இந்த10 வியாதிகளையும் அசால்ட்டாக தட்டி தூக்கும் ஒரே கஷாயம்! இப்படி செஞ்சி பாருங்க

Disclaimer