Fri Sep 11, 2026 | 10:21 PM IST

Doctor Verified

இருமல் குணமாக துளசி இலைகளை பயன்படுத்துவது எப்படி? இந்த 5 வழிகளைப் பின்பற்றுங்க..

துளசி இலைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் கிருமி நாசினிகள் பண்புகளும் நிறைந்து காணப்படுகின்றன. இது சளி மற்றும் இருமலைக் குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். இதில் இருமல் குணமாக துளசி இலைகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து காணலாம்.

மழைக்காலம் தொடங்கிய காலநிலையில், காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்றவை ஒரு பொதுவான பிரச்சனையாகக் கருதப்படுகிறது. இதில் சளி அனைவருக்கும் ஏற்படக்கூடிய பொதுவான நோயாக இருப்பதால், இவற்றை நீண்ட நேரம் புறக்கணிப்பது உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கக்கூடும். இது தவிர, சளி மிகவும் சங்கடமான உணர்வை ஏற்படக்கூடும். எனினும், சில வீட்டு வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் சளியிலிருந்து விடுபடலாம். அவ்வாறே, சளியின் போது துளசியை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

எனினும், பலர் சளியைக் குணப்படுத்த துளசியை முறையாகப் பயன்படுத்துவதில்லை. இருப்பினும், இதை முறையாக உட்கொண்டால், துளசி வேரிலிருந்தே சளியைக் குணப்படுத்த உதவுகிறது. பொதுவாக, துளசியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. இவை சளியைக் குறைப்பதில் உதவியாக இருக்கும். இது குறித்து சிர்சாவில் உள்ள ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ஷ்ரே சர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: மழைக்காலத்தில் காய்ச்சல், சளி, இருமலால் அவதிப்படுகிறீர்களா? - இந்த 4 மூலிகை தேநீர்களை குடிங்க!

சளி மற்றும் இருமலைப் போக்க துளசி இலைகளை எப்படி உட்கொள்வது?

துளசி சாறு

சளி மற்றும் இருமலால் அவதிப்படுபவர்களுக்கு, துளசி சாறு மிகுந்த நன்மை பயக்கும். துளசி சாறு குடிப்பது உடலுக்கு ஆன்டிவைரல் பண்புகளை வழங்குகிறது. இவை வைரஸ்கள் மற்றும் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே, இது சளி மற்றும் காய்ச்சலில் இருந்து குறிப்பிடத்தக்க நிவாரணம் அளிக்கிறது. இதற்கு, சிறிது தேனுடன் கலந்து துளசி சாற்றை குடிக்கலாம். இது இருமலில் இருந்து குறிப்பிடத்தக்க நிவாரணத்தைத் தருகிறது.

துளசி நீர்

பொதுவாக, மக்களுக்கு சளி பிடிக்கும் போது, துளசி இலை தேநீரை பெரும்பாலான மக்கள் குடிக்க விரும்புகின்றனர். எனினும், துளசி இலைகள் கலந்த தண்ணீரைக் குடிக்கலாம். துளசி நீரைக் குடிப்பது சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்துவதில் மிகவும் நன்மை பயக்கும். இதற்கு, துளசி இலைகளை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் இந்த தண்ணீரைக் குடிக்க வேண்டும். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தொண்டை வலியைத் தணிப்பது மட்டுமல்லாமல், தொண்டையில் குவிந்துள்ள சளியை அகற்றவும் உதவுகிறது.

துளசி இலைகளை மென்று சாப்பிடுவது

பொதுவாக, துளசி இலைகளை மென்று சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். சளி மற்றும் இருமல் பிரச்சனையைக் கொண்டிருப்பவர்களுக்கு, துளசி இலைகளை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு, காலையில் வெறும் வயிற்றில் 4 முதல் 5 துளசி இலைகளை மென்று சாப்பிட வேண்டும். துளசி இலைகளில் உள்ள பண்புகள் சளி நிவாரணம் பெறுவதற்கு மட்டுமல்லாமல், ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சியைப் போக்குவதிலும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மழைக்காலத்தில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க.. இந்த டீ குடிங்க..

துளசி தேநீர்

துளசி தேநீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். துளசி தேநீரில் அழற்சி எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் இருமல் எதிர்ப்பு பண்புகள் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை இயற்கையாகவே இருமலைக் குறைக்க உதவுகிறது. இந்த தேநீர் குடிப்பது நன்கு ஓய்வெடுக்க உதவுகிறது. இவை இருமல் மற்றும் சளியைக் குறைக்கவும் மற்றும் உடலுக்கு வெப்பத்தைத் தரவும் உதவுகிறது. இந்த தேநீர் குடிப்பது காய்ச்சல் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

துளசி கஷாயம்

துளசி கஷாயம் குடிப்பது பல வழிகளில் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். துளசி கஷாயம் குடிப்பது இருமல் மற்றும் சளியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. கஷாயம் தயார் செய்வதற்கு, துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின், அதில் எலுமிச்சை மற்றும் சிறிது தேன் சேர்க்கலாம். இது சளியைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மழைக்காலத்தில் பால் குடிப்பது நல்லதா கெட்டதா? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

Image Source: Freepik

Read Next

மழைக்காலத்தில் பால் குடிப்பது நல்லதா கெட்டதா? நிபுணர்கள் சொல்வது இதுதான்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 22, 2025 20:27 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content