Benefits of eating basil leaves everyday: பழங்காலத்தில் நம் முன்னோர்கள் வீடுகளின் முற்றத்தில் துளசி செடி வைப்பதை வழக்கமாகவே வைத்திருந்தனர். இது ஆன்மீக காரணங்களைத் தாண்டி, இதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக நன்கு அறியப்பட்டது. இந்த சிறந்த மூலிகையானது உடல் ஆரோக்கியத்திற்குப் பலவகையான நன்மைகளை வழங்குகிறது. எனவே தான் இன்றுவரை ஆயுர்வேதத்தில் துளசி ஒரு சிறந்த மூலிகையாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், தற்போதைய காலத்தில் சில வீடுகளிலேயே துளசி செடி இருப்பதைக் காண முடிகிறது. எனினும், துளசி செடியின் மருத்துவ குணங்களையும், அதை தினமும் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆம். உண்மையில் துளசி செடிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த துளசி இலைகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது. அதிசய நன்மைகளை அளிக்கும் இந்த துளசி இலைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பெரிதும் பங்களிக்கிறது. அதன் படி, தினந்தோறும் 4 முதல் 5 துளசி இலைகளைச் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Tulsi Benefits: துளசி இலைகள் எந்த நோய்களை தீர்க்க உதவும்?
தினமும் 4 முதல் 5 துளசி இலைகளைச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
நீரிழிவு நோய்க்கு
ஆய்வு ஒன்றில், துளசி ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் துளசி இலைகளை மென்று சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். சுமார் மூன்று மாதங்களுக்கு, காலை உணவுக்கு முன்பு துளசி இலையை மென்று சாப்பிட்டவர்களுக்கு, இரத்த சர்க்கரை அளவு 18 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இவை நீரிழிவு நோயை நிர்வகிக்கவும், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
முக்கிய கட்டுரைகள்
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த
துளசி இலைகளில் யூஜெனால் உள்ளது. இவை வயிற்றில் அமிலத்தை சமநிலைப்படுத்தவும், செரிமான செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. மேம்பட்ட செரிமானத்தின் மூலம் வீக்கம், அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகளைத் தடுக்கலாம். மேலும் இது குடல் ஆரோக்கியம் மற்றும் சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு வழிவகுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
துளசியில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது. அதே சமயம், துளசியானது பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைரஸ் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இது சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவற்றை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு
உடலில் கொழுப்பு அதிகரிப்பு மற்றும் இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கட்டுப்படுத்துவதில் துளசி முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் கூறப்படுகிறது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. இதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Tulsi for weight loss: வயிற்றில் தொங்கிய தொப்பைக் கொழுப்பைக் குறைக்க துளசி இலை ஒன்னு போதும்!
நுரையீரல் ஆரோக்கியத்திற்கு
சுவாசப் பிரச்சனைகளைப் போக்குதற்கு துளசி உதவுகிறது. ஏனெனில் துளசியானது இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் ஒரு மருத்துவக் குணம் கொண்ட தாவரமாகும். மேலும் இதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதாகக் கூறப்படுகிறது.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்த
துளசி ஒரு தகவமைப்புத் திறன் கொண்ட மூலிகையாகும். இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை நிர்வகிக்க உதவுகிறது. துளசியின் வழக்கமான நுகர்வு மனநிலையை மேம்படுத்துகிறது. மேலும் இது மன அழுத்த அளவைக் குறைக்கிறது. இது தவிர, மன தெளிவு மற்றும் கவனத்தை மேம்படுத்துவதன் மூலம் சிறந்த மன ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது.
சரும ஆரோக்கியத்திற்கு
துளசி அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் கொண்டதாகும். எனவே இது சருமத்தில் ஏற்படும் தொற்றுகளை அழிக்கவும், முகப்பருவைக் குறைக்கவும் உதவுகின்றன. துளசியை உட்கொள்வதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இவை சரும பிரச்சினைகள் ஏற்படுவதைக் குறைப்பதுடன் தெளிவான மற்றும் அதிக பொலிவான சருமத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் முன்கூட்டிய வயதானதைத் தடுப்பதிலும் துளசி முக்கியப் பங்கு ஆற்றுவதாக ஆய்வில் கூறப்படுகிறது.
துளசி உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு இது போன்ற ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், இதை போதுமான அளவு எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் சில உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் துளசியை எடுத்துக் கொள்ளும் முன்பாக, மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பு முதல்.. மனநிலை மேம்பாடு வரை.. அதிகாலை துளசி நீர் குடிப்பதன் நன்மைகள் இங்கே..
Image Source: Freepik