$
Benefits Of Tulsi Powder For Skin: இன்று பலரும் சரும பராமரிப்பிற்காக பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். அவ்வாறே, சந்தையில் ஏராளமான சரும பராமரிப்பு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இதில் உள்ள இரசாயனங்கள், வேதிப் பொருள்கள் போன்றவை சருமத்தை பாதிக்கும் அபாயம் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க எப்போதும் இயற்கையான வழியைக் கையாள்வது நல்லது. அந்த வகையில் சரும பராமரிப்பிற்கான இயற்கை வைத்தியத்தில் துளசி முக்கிய பங்காற்றுகிறது.
துளசியைப் பல்வேறு வழிகளில் சருமத்திற்கு பயன்படுத்தலாம். அதே சமயம், இவை எந்த வித பக்கவிளைவுகளும் தருவதில்லை. இது தோல் முன்கூட்டியே வயதாவதைத் தடுப்பது, நீரேற்றமாக வைத்திருப்பது, நச்சு நீக்கம், எரிச்சலைத் தணித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான நன்மைகளைத் தருகிறது. இதில் ஆரோக்கியமான சருமத்தைப் பெற விரும்புபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய துளசி பொடியின் நன்மைகள் மற்றும் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Dark Elbows Remedies: இந்த பொருள் போதும். இரண்டே வாரத்தில் முழங்கை கருமையை போக்கலாம்
சருமத்திற்கு துளசி பொடியின் நன்மைகள்
புனித துளசி என்றழைக்கப்படும் துளசி ஒருவகையான நறுமண மூலிகையாகும். ஆயுர்வேதத்தில் தலைசிறந்ததாகக் கருதப்படும் இதன் இலைகள் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலர்ந்த துளசி இலைகளை அரைத்து தயாரிக்கப்படும் துளசி பொடியைச் சருமத்திற்கு பயன்படுத்தலாம்.
சரும எரிச்சலைத் தணிக்க
உணர்திறன் வாய்ந்த சருமமாகவோ அல்லது சொறி அல்லது அரிப்பு போன்ற சரும எரிச்சல்களால் பாதிக்கப்பட்டலோ, துளசி பொடியைப் பயன்படுத்தலாம். இதில் உள்ள குளிரூட்டும் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சரும எரிச்சலைத் தணித்து ஆறுதல் அளிக்கிறது.

சரும ஈரப்பதத்திற்கு
வறண்ட சருமத்தை கொண்டவர்களுக்கு துளசி பொடி மிகுந்த நன்மை தரும். இதன் ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமத்திற்கு ஈரப்பதத்தைத் தருகிறது. மேலும், சருமத்தில் ஏற்படும் வறட்சி, செதில்கள் மற்றும் கடினமான திட்டுக்களைத் தடுக்க உதவுகிறது.
முதுமை எதிர்ப்புக்கு
துளசியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது முன்கூட்டியே வயதாவதற்கான அறிகுறிகளைத் தடுக்கிறது. மேலும், சருமத்தில் காணப்படும் சுருக்கங்கள், வயது புள்ளிகள் மற்றும் மெல்லிய கோடுகள் போன்றவற்றைக் குறைத்து, இளமையான மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Avocado Oil For Skin: சருமத்தை வெண்மையாக்க உதவும் வெண்ணெய் எண்ணெய். எப்படி பயன்படுத்தலாம்?
வடுக்கள், தழும்புகள் நீங்க
துளசி பொடியை அன்றாடம் பயன்படுத்தும் மூலம், படிப்படியாக சருமத்தில் காணப்படும் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை மறைக்கிறது. இது சருமத்தை ஒளிரச் செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளதால் நிறத்தை சமன் செய்து சீரான நிறத்தை அளிக்கிறது.
பருக்களை எதிர்த்துப் போராட
துளசி பொடியில் சக்தி வாய்ந்த பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இது பருக்களை எதிர்த்துப் போராட சிறந்த தேர்வாகும். சருமத்தை சுத்தப்படுத்தும் போது, அதில் காணப்படும் துளைகளை அவிழ்த்து, முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது. இது தெளிவான சருமத்தைப் பெற உதவுகிறது.

நச்சுத்தன்மை நீக்கும் பொடி
துளசி நச்சுத்தன்மை நீக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இவை சருமத்தில் உள்ள நச்சுக்களை அகற்றி ஆரோக்கியமான மற்றும் தெளிவான நிறத்தை மேம்படுத்த உதவுகிறது. அத்துடன், சருமத்தில் காணப்படும் அசுத்தங்களை அகற்றி சருமத்தை புத்துணர்ச்சியாக்குகிறது.
சரும பொலிவுக்கு
துளசியில் வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் சருமத்தை பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. இதன் வழக்கமான பயன்பாட்டின் மூலம் இயற்கை மற்றும் ஆரோக்கியமான பளபளப்பை பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Ragi Face Pack: உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல. சருமத்தையும் பொலிவாக்கும் ராகி. இப்படி பயன்படுத்துங்க.
சருமத்திற்கு துளசி பொடியை எப்படி பயன்படுத்துவது
சரும பராமரிப்பு வழக்கத்தில் துளசி பொடியை பயன்படுத்தும் சில வழிகளைக் காணலாம்.
துளசி ஃபேஸ்பேக்
- தயிர், தேன் அல்லது ரோஸ்வாட்டருடன் துளசி பொடியைக் கலந்து முகத்திற்கு ஊட்டமளிக்கும் ஃபேஸ்பேக்கை செய்யலாம்.
- இதை முகத்தில் தடவி, 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து, பின் வெதுவெதுப்பன நீரில் கழுவி வர, சருமம் புத்துணர்ச்சி அடையும்.

ஸ்கின் டோனர்
- தண்ணீரில் துளசி பொடியைக் கலந்து டோனராக தயார் செய்யலாம். இதை சருமத்தில் அப்ளை செய்வதன் மூலம் சருமத்தின் pH அளவை சமநிலையில் வைக்கும்.
- இதற்கு முகத்தை வெறும் தண்ணீரில் சுத்தப்படுத்தி, பின் காட்டன் துணியைப் பயன்படுத்தி, டோனரை சருமத்தில் தடவலாம்.
எக்ஸ் ஃபோலியேட்டிங் ஸ்க்ரப்
- துளசி பொடியுடன் கொண்டைக்கடலை மாவு அல்லது ஓட்ஸ் சேர்த்து சருமத்தில் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
- இது சருமத்தில் காணப்படும் இறந்த செல்களை அகற்றி, மென்மையான சருமத்தைப் பெற உதவுகிறது.
குளியல் நீரில்
- சில தேக்கரண்டி துளசி பொடியை குளியல் நீரில் சேர்த்து குளித்து வர சருமம் இதமான அனுபவம் பெறுவதை உணரலாம்.
- இவ்வாறு துளசி பொடியை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். எனினும் ஒவ்வொருவரின் சருமமும் உணர்திறன் மிக்கது என்பதால், சருமத்திற்கு பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Winter Face Serum: குளிர்காலத்தில் வறண்டு போகும் சருமத்திற்கு வீட்டிலேயே இந்த ஃபேஸ் சீரம் செய்யலாம்
Image Source: Freepik