Winter Face Serum: குளிர்காலத்தில் வறண்டு போகும் சருமத்திற்கு வீட்டிலேயே இந்த ஃபேஸ் சீரம் செய்யலாம்

  • SHARE
  • FOLLOW
Winter Face Serum: குளிர்காலத்தில் வறண்டு போகும் சருமத்திற்கு வீட்டிலேயே இந்த ஃபேஸ் சீரம் செய்யலாம்

இதற்கு ஈரப்பதமாக வைத்திருக்க உதவும் ஃபேஸ் சீரம்களைப் பயன்படுத்தலாம். ஆனால், சில ஃபேஸ் சீரம்களில் உள்ள இரசாயனங்கள் சருமத்தை சேதப்படுத்தலாம். இதற்கு மாற்றாக, இயற்கையான பொருள்களைக் கொண்டு வீட்டிலேயே கெமிக்கள் இல்லாத ஃபேஸ் சீரம்களைத் தயாரிக்கலாம். இவை சரும மேம்பாட்டிற்கும், பளபளப்பையும் தருகிறது. இதில் வைட்டமின் ஈ, ஆலிவ் ஆயில், பாதாம் எண்ணெய், ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் கொண்டு ஃபேஸ் சீரம் தயாரிக்கும் முறை குறித்துக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Avocado Oil For Skin: சருமத்தை வெண்மையாக்க உதவும் வெண்ணெய் எண்ணெய். எப்படி பயன்படுத்தலாம்?

குளிர்காலத்திற்கான முக சீரம் தயாரிப்பது எப்படி?

குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதுடன், சருமத்தில் உள்ள செல்கள் உயிரற்றதாக மாறிவிடும். இந்த காலகட்டத்தில் சருமத்தை புத்துயிர் பெறவைக்க வீட்டிலேயே செய்யப்படும் இந்த ஃபேஸ் சீரத்தைப் பயன்படுத்தலாம். இந்த முக சீரத்தை இரவில் பயன்படுத்தலாம். இதில் ஃபேஸ் தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வோமா?

முக சீரம் செய்யத் தேவையானவை

  • கிளிசரின் - 2 டீஸ்பூன்
  • பாதாம் ஆயில் - 1 டீஸ்பூன்
  • வைட்டமின் ஈ காப்ஸ்யூல்கள் - 4
  • ரோஸ் வாட்டர் - 7 டேபிள்ஸ்பூன்
  • ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்

இந்த பதிவும் உதவலாம்: Dark Elbows Remedies: இந்த பொருள் போதும். இரண்டே வாரத்தில் முழங்கை கருமையை போக்கலாம்

ஃபேஸ் சீரம் தயாரிக்கும் முறை

  • முதலில் கிண்ணம் ஒன்றை எடுத்து, அதில் வைட்டமின் ஈ காப்ஸ்யூல்களை உடைத்துக் கொள்ள வேண்டும்.
  • இதில் மீதமுள்ள சீரம் தயாரிக்கத் தேவையான பொருள்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.
  • இவ்வாறு கலக்கும் போது பாட்டில் ஒன்றில் சீரத்தை நிரப்பி தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • இந்த சீரத்தை இரவில் முகத்தில் பயன்படுத்தவும். ஒவ்வொரு முறை சீரத்தை முகத்திற்கு பயன்படுத்தும் முன், பாட்டிலை நன்றாக அசைக்க வேண்டும்.
  • இதனால் சீரத்தில் உள்ள பொருள்கள் நன்கு கலந்து ஒன்றாக பயன் தரும்.
  • மேலும், இரவில் சீரத்தை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன்னதாக, முகத்த நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும், இதற்கு பச்சை பால் பயன்படுத்தலாம்.
  • இது முகத்தை ஆழமாக சுத்தம் செய்வதுடன், சருமம் வறண்டு போவதிலிருந்து தடுக்கிறது.
  • இவ்வாறு ஆழமாக சுத்தம் செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள தூசி, அழுக்கு போன்றவற்றை நீக்க முடியும். இதற்கு பிறகு முகத்தில் சீரம் தடவலாம்.

குளிர்காலத்தில் முக சீரம் பயன்படுத்துவதன் நன்மைகள்

  • முக சீரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஏ, கே மற்றூம் ஈ நிறைந்துள்ளது. மேல்ம் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்தை உள்ளிருந்து ஆழமாக ஊட்டமளிப்பதுடன், சரும சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
  • இந்த சீரத்தில் அதிகளவு ரோஸ் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. இவை டோனராக செயல்பட்டு, சீரம் நீர்த்துப்போகச் செய்து, முகத்தில் தடவுவதை எளிதாக்குகிறது.

குளிர்காலத்தில் இந்த சீரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படும்.

இந்த பதிவும் உதவலாம்: Homemade Lip Oil: இந்த குளிருல வறண்டு போன உதட்டுக்கு லிப் ஆயில் தயாரிப்பது எப்படி?

Image Source: Freepik

Read Next

Honey on Face: குளிர்காலத்தில் முகத்திற்கு தேன் தடவுவது எவ்வளவு நல்லது தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்