Sat Sep 12, 2026 | 12:59 AM IST

Ragi Face Pack: உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல. சருமத்தையும் பொலிவாக்கும் ராகி. இப்படி பயன்படுத்துங்க.

Ragi Face Pack For Skin Whitening: பழங்கால உணவு வகைகளில் ஒன்றாக விளங்கும் ராகி, விரல் தினை (Finger Millet) என்றும் அழைக்கப்படுகிறது. இதில் உள்ள பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகின்றன.

உடல் பராமரிப்பிலும் மட்டுமல்லாமல், சரும பராமரிப்பிலும் ராகி முக்கிய பங்கு வகிக்கிறது. ராகியை பல்வேறு வழிகளில் சருமத்திற்குப் பயன்படுத்தலாம். சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவும் ஃபேஸ் பேக்குகளில் ராகி ஃபேஸ் பேக் வகையும் ஒன்றாகும். இதில் ராகி ஃபேஸ் பேக் செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் தயாரிக்கும் முறை குறித்துக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Honey on Face: குளிர்காலத்தில் முகத்திற்கு தேன் தடவுவது எவ்வளவு நல்லது தெரியுமா?

ராகி ஃபேஸ்பேக் செய்வது எப்படி?

சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க உதவும் ராகி ஃபேஸ் பேக் செய்யும் முறை குறித்துக் காணலாம்.

தேவையான பொருள்கள்

  • ராகி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 1 டீஸ்பூன்
  • தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்

செய்முறை

  • முதலில் கிண்ணம் ஒன்றில் 2 டேபிள் ஸ்பூன் ராகி மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் 1 டேபிள் ஸ்பூன் வெற்று தயிர் சேர்த்துக் கலக்கவும்.
  • இந்த கலவையில் தேன் சேர்த்து பின் எலுமிச்சைச் சாறு சேர்க்க வேண்டும். (இதில் எலுமிச்சைச் சாற்றை பிழிந்து 1 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தைப் பிரகாசமாக்க வைக்கிறது).
  • இவ்வாறு அனைத்துப் பொருள்களையும் நன்கு கலந்து, சரியான நிலைத்தன்மையை அடையும் வரை தயிரின் அளவை சரி செய்ய வேண்டும்.

பேக் பயன்படுத்தும் முன்

  • ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தும் முன்பாக, முகம் சுத்தமாகவும், மேக்கப் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு சுத்தமான விரல்கள் அல்லது தூரிகையைப் பயன்படுத்தி கண் பகுதியைத் தவிர்த்து முகம் மற்றும் கழுத்தில் ராகி ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Skin Care Routine: குளிர்காலத்தில் சருமத்தை இப்படி பாராமரிக்கவும்!

எவ்வளவு நேரம் வைக்கலாம்?

  • ஃபேஸ் பேக்கை முகத்தில் பயன்படுத்திய பிறகு சுமார் 15-20 நிமிடங்கள் வரை உலர வைக்க வேண்டும். இவை காய்ந்த பிறகு சற்று இறுக்கமான உணர்வை உணரலாம்.
  • ஃபேஸ் பேக் உலர்ந்த பிறகு, முகத்தை தண்ணீரில் நனைத்து வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதை வெதுவெதுப்பான நீரில் நன்றாகக் கழுவலாம்.
  • மேலும் முகத்தை உலர வைக்க சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும். வழக்கமான மாய்ஸ்சரைசரைப் பயன்பாட்டைப் பின்பற்றலாம்.

ராகி ஃபேஸ்பேக் நன்மைகள்

சருமத்திற்கு ராகி ஃபேஸ்பேக்கைப் பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

நீரேற்றம்

இந்த ஃபேஸ் பேக்கைத் தயார் செய்ய உதவும் தயிர் மற்றும் தேன் சருமத்திற்கு நீரேற்றத்தைத் தருகிறது. இவை சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Avocado Oil For Skin: சருமத்தை வெண்மையாக்க உதவும் வெண்ணெய் எண்ணெய். எப்படி பயன்படுத்தலாம்?

உரித்தல் பண்புகள்

ராகி சிறந்த எக்ஸ்ஃபோலியண்டாக செயல்படுகிறது. இவை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், சருமத்துளைகளை அவிழ்க்கவும் உதவுகிறது.

பளபளப்பாக வைக்க

இதில் சேர்க்கப்படும் எலுமிச்சைச் சாறு சருமத்தை பிரகாசமாக்க வைக்க உதவுகிறது. இவை முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை மறைக்க உதவுகிறது.

குறிப்புகள்

ஒவ்வொருவரின் சருமமும் உணர்திறன் மிக்கதாக இருப்பதால் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்யலாம்.

சிறந்த முடிவுகளைப் பெற ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Winter Face Serum: குளிர்காலத்தில் வறண்டு போகும் சருமத்திற்கு வீட்டிலேயே இந்த ஃபேஸ் சீரம் செய்யலாம்

Image Source: Freepik

Read Next

Skin Care Routine: குளிர்காலத்தில் சருமத்தை இப்படி பாராமரிக்கவும்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content