Thu Oct 29, 2026 | 12:55 PM IST

Skin Care Tips: சருமம் பளபளப்பாக முகம் கழுவியதும் இந்த 5 விஷயங்களை செய்யுங்க!

Skin Care Tips: சருமம் பளபளப்பாக முகம் கழுவியதும் இந்த 5 விஷயங்களை செய்யுங்க!Skin Care Tips: சருமம் பளபளப்பாக முகம் கழுவியதும் இந்த 5 விஷயங்களை செய்யுங்க!

What Order Should I Apply Skin Care Products: சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க, சருமப் பராமரிப்பைப் பின்பற்றுவது அவசியம். சரும பராமரிப்பில் முதல் மற்றும் மிக முக்கியமான படி முகத்தை சுத்தம் செய்வது. அதற்குப் பிறகுதான் தோலில் பராமரிப்பு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், முகத்தை கழுவிய பின் முகத்தில் என்ன தடவுவது என்று பெரும்பாலான மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், நீங்கள் வீட்டில் இருக்கும் தோல் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்தலாம், இது சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும் உதவும். முகத்தை கழுவிய பின் முகத்தில் என்ன தடவ வேண்டும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : எப்போதும் இளமையுடன் ஜொலிக்க….இந்த 3 வைட்டமின்கள் மட்டும் போதும்!

முகத்தை கழுவிய பின் இந்த 5 பொருட்களை பயன்படுத்தவும்

மாய்ஸ்சரைசர்

முகத்தை கழுவிய பின் மாய்ஸ்சரைசரைப் (Moisturizer) பயன்படுத்தினால், அது உங்கள் சருமத்தை நீரேற்றமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும். எனவே, முகத்தை கழுவிய பின், உங்கள் சருமத்தின் வகைக்கு ஏற்ப மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால், ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். ஆனால், உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால், எண்ணெய் அல்லது கிரீம் அடிப்படையிலான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது நல்லது.

அலோ வேரா ஜெல்

குளித்தவுடன் கற்றாழை ஜெல்லை (Aloe Vera Gel) முகத்தில் தடவி வந்தால் சருமத்திற்கு இயற்கையான பொலிவு கிடைக்கும். அலோ வேரா ஜெல் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும் நீரேற்றமாகவும் வைக்க உதவும். ஆன்டி-ஆக்ஸிடன்ட்களுடன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகளும் இதில் காணப்படுகின்றன. இவை சருமத்தை குணப்படுத்தவும், தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.

இந்த பதிவும் உதவலாம் : முகம் சும்மா தகதகன்னு பளபளக்க…இந்த பேஸ் பேக்குகள ட்ரை பண்ணிப்பாருங்க!

கிளிசரின்

வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு கிளிசரின் (Glycerine) ஒரு நல்ல தேர்வாக இருக்கும். குளிர்காலத்தில், முகத்தை கழுவிய பின் கிளிசரின் தடவலாம். இது சருமத்தை ஈரப்பதமாக்கி, பளபளப்பாக வைத்திருக்க உதவும்.

ரோஸ் வாட்டர்

முகம் கழுவிய பின், ரோஸ் வாட்டரைப் (Rose Water) பயன்படுத்தி சருமத்தை ஹைட்ரேட் செய்யலாம். நீங்கள் அதை டோனராகப் பயன்படுத்தலாம். ரோஸ் வாட்டரில் உள்ள இயற்கை பண்புகள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.

ஹைட்ராலிக் மற்றும் லாக்டிக் அமிலம்

உங்கள் தோல் வகையைப் புரிந்துகொண்ட பிறகு, நீங்கள் ஹைட்ராலிக் மற்றும் லாக்டிக் ஆசிட் (Hydraulic and Lactic acid) பயன்படுத்தலாம். ஹைட்ராலிக் அமிலம் சருமத்தை நெகிழ்வாக மாற்ற உதவுகிறது மற்றும் அதன் பயன்பாடு சுருக்கங்களை குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Skin Whitening: நீங்க எப்பவும் வைரம் போல ஜொலிக்கணுமா? இந்த 2 பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க!

லாக்டிக் அமில சீரம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், நீரேற்றம் செய்யவும் உதவுகிறது. உணர்திறன் வாய்ந்த சருமத்திற்கு இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

→ Nallennai Benefits: பருக்கள் நீங்கி முகம் பளபளக்க.. தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.