ஹெபடைடிஸில் சாப்பிடக்கூடிய, சாப்பிடகூடாத உணவுகள்! ஆயுர்வேதம் கூறுவது என்ன?

  • SHARE
  • FOLLOW
ஹெபடைடிஸில் சாப்பிடக்கூடிய, சாப்பிடகூடாத உணவுகள்! ஆயுர்வேதம் கூறுவது என்ன?

பொதுவாக மருத்துவர்களின் கூற்றுப்படி, வைரஸ் தொற்றுகள் மற்றும் ஆட்டோ இம்யூன் நோய்களுடன், சில மருந்துகள் மற்றும் ஆல்கஹாலின் அதிகப்படியான நுகர்வு கல்லீரல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். உடலில் உள்ள வாத, பிட்டா மற்றும் கபா போன்றவற்றின் சமநிலையின்மை காரணமாக, கல்லீரல் மற்றும் பிற நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். ஆயுர்வேதத்தின் படி, ஒவ்வொரு நோய்க்கும் சிறப்பான உணவு பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வாறே கல்லீரல் நோய்த்தொற்றான ஹெபடைடிஸ் நோய்க்கும் ஆயுர்வேதத்தின் படி சில உணவுகளை எடுத்துக் கொள்வதும், சில உணவுகளைத் தவிர்ப்பதும் அவசியமாகும். வெடிக்யூர் ஹெல்த் அண்ட் வெல்னஸ் மருத்துவ அதிகாரியும் ஆயுர்வேத மருத்துவருமான டாக்டர் பிரசாத் கவாய் அவர்கள் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் இரவு 1 பல் பூண்டு சாப்பிட்டு தூங்குங்க! என்ன நடக்கும்னு பாருங்க

உணவு மாற்றங்கள்

டாக்டர் பிரசாத் கவாய் அவர்களின் கூற்றுப்படி, அசுத்தமான தண்ணீர் மற்றும் அசுத்தமான உணவு போன்றவை உடலின் பித்த தோஷத்தை பாதிக்கிறது. மேலும், இதனால் கல்லீரலின் இயல்பான செயல்பாட்டில் அழுத்தம் ஏற்படுவதுடன், கல்லீரலில் வீக்கம் உண்டாகலாம். இதற்கு பித்த தோஷமே நேரடி காரணமாகும். ஹெபடைடிஸ் காரணமாக உடலில் வீக்கம் ஏற்படும் போது, உணவில் மாற்றங்களை செய்வது அவசியமாகும்.

ஆயுர்வேதத்தின் படி ஹெபடைடிஸில் சாப்பிட வேண்டியவை

ஹெபடைடிஸ் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய சில உணவுகளைக் காணலாம்.

  • காய்கறிகளில் பாகற்காய், பூசணி, கேரட், கீரை, கொத்தமல்லி இலைகள், உருளைக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு, காளான், ப்ரோக்கோலி, சுரைக்காய் போன்ற உணவுகளை உட்கொள்ளலாம்.
  • பழ வகைகளில் பப்பாளி, வாழைப்பழம், தர்பூசணி, ஆப்பிள் போன்ற பழங்களை உட்கொள்ள வேண்டும்.
  • மேலும் தானிய வகைகளில் சாகோ, ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
  • விதைகளில் பூசணி விதைகள் மற்றும் ஆளி விதைகளை சாப்பிடலாம்.
  • மசாலா வகைகளில் கொத்தமல்லி, உப்பு, ஆர்கனோ, கருப்பு மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம் மற்றும் மஞ்சள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
  • சாறு வகைகளில் கொழுப்பு இல்லாத வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப் வகைகள், தேங்காய் தண்ணீர், கற்றாழை சாறு, மூலிகை தேநீர், தேங்காய் தண்ணீர், மாதுளை மற்றும் பூசணி சாறு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Jamun Benefits: மழைக்காலத்தில் நாவல் பழத்தின் நன்மைகள் இங்கே..

ஹெபடைடிஸில் சாப்பிடக் கூடாத உணவுகள்

ஆயுர்வேதத்தின் படி, ஹெபடைடிஸில் சாப்பிடக் கூடாத உணவுகள் சிலவற்றைக் காணலாம்.

  • திராட்சை, முந்திரி மற்றும் பிஸ்தா
  • வெள்ளை அரிசி
  • சிவப்பு மிளகாய், மாவு, ஆல்கஹால் மற்றும் வறுத்த உணவுகள்
  • கிரீம், தயிர், சீஸ் மற்றும் பால் போன்ற பால் பொருள்கள் போன்றவற்றை உட்கொள்ளக் கூடாது.

ஹெபடைடிஸ் நோயாளிகள், ஆயுர்வேத நிபுணரின் ஆலோசனையின் பேரில் உணவுத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்வதன் மூலம் ஹெபடைடிஸிலிருந்து விடுபடலாம். இந்த ஆயுர்வேத உணவு முறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளின் உதவியுடன் வாழ்க்கையில் நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Time To Drink Milk: எந்த நேரத்தில் பால் குடிப்பது உடலுக்கு நல்லது? ஆயுர்வேதம் சொல்லும் இரகசியம்

Image Source: Freepik

Read Next

இன்ஹேலருக்குப் பதிலாக இந்த ஆயுர்வேத விருப்பங்களை முயற்சிக்கவும்

Disclaimer