Lemon Juice With Jaggery Drink For Weight Loss: உடல் எடையைக் குறைக்க டிடாக்ஸ் வாட்டர் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது. இவை உடலில் உள்ள நச்சுக்களை அகற்றி, உடலைச் சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் உடல் எடை குறையவும் டிடாக்ஸ் வாட்டர் உதவுகிறது. உடல் எடை குறைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே போல ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைப்பது முக்கியம் ஆகும். அந்த வகையில் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தரும் உணவுகளைப் பின்பற்ற வேண்டும். இதனைத் தொடர்ந்து, சரியான உணவு மற்றூம் உடற்பயிற்சியின் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். இதனுடன், டிடாக்ஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ள உடலின் எடை இழப்பு செயல்முறையை அதிகரிக்கிறது. உடல் எடை குறைய வெல்லம் கலந்த எலுமிச்சைச்சாறு எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்.
வெல்லம் எலுமிச்சை நீர்
வெல்லம் மற்றும் எலுமிச்சை என தனித்தனியே முறையே நிறைய பண்புகளைக் கொண்டுள்ளது. எலுமிச்சையில் அதிக அளவிலான வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை உடலுக்கு நீரேற்றத்தைத் தருவதுடன், செரிமானம் போன்ற உடல் நலப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. எலுமிச்சையில் உள்ள ஊட்டச்சத்துகள் உடலைச் சுத்தப்படுத்த உதவுகிறது.
வெல்லத்தில் புரதச் சத்துகள், நார்ச்சத்து போன்ற எடை இழப்புக்கு உதவும் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. எனவே, இந்த இரண்டு பொருள்களையும் சேர்ந்து தயாரிக்கும் பானத்தை எடுத்துக் கொள்ளும் போது உடலில் கொழுப்பு சேர்வது தடை செய்யப்பட்டு, உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளையும் நீக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips: ஆயுர்வேத முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி?
வெல்லம் கலந்த எலுமிச்சைச் சாறு தயாரிக்கும் முறை
உடல் எடை குறைய வெல்லம் கலந்த எலுமிச்சைச் சாற்றை எப்படி தயாரிக்கலாம் என்பதைக் காணலாம்.
- முதலில் சிறிதளவு வெல்லத்தைத் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின் தண்ணீரை வடிகட்டி ஆற விடவும்.
- இந்த வெதுவெதுப்பான வெல்லம் கலந்த நீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்த்து இரண்டையும் நன்றாகக் கலந்து குடிக்கவும்.
- இவற்றைத் தினமும் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும், இதனுடன் ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்ளுதல் மற்றும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை விரைவாகக் கட்டுப்படுத்த முடியும்.
வெல்லம் எலுமிச்சைச்சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்
எலுமிச்சைச் சாறு மற்றும் வெல்லம் கலந்த நீரைக் குடிப்பது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இந்த பானம் செரிமானம், பக்கவாதம் போன்ற அபாயம் ஏற்படுவதைக் குறைக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கும், எடை இழப்பிற்கும் வெல்லம் கலந்த எலுமிச்சைச் சாறு உதவுகிறது. மேலும், இவை உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கி சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Exercise For Women: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!
Image Source: Freepik