Sat Sep 12, 2026 | 12:47 AM IST

Weight Loss Tips : இதை ஃபாலோ பண்ணுனா போதும் வெறும் 30 நாளில் உடல் எடையை குறைக்கலாம்!

“ஒரு மாதத்தில் 10 கிலோ வரை எடையை குறைத்தால்” எவ்வளவு நன்றாக இருக்கும். எடையை குறைக்க நினைக்கும் அனைவரும் இது போன்ற ஆசைகளை வளர்ப்பது சாதாரணம். வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பெரும்பாலானோர், தவறான குறிப்புகளை பின்பற்ற துவங்குகிறார்கள். எடையை குறைக்க அவசரம் தேவையில்லை, ஆனால், சரியான வழியை பின்பற்ற வேண்டியது அவசியம். அதே போல குறிப்பிட்ட நாட்களில், அதிக எடையை குறைப்பதும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க நேரம் எடுக்கும், இந்த நேரத்தில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நிபுணர்களின் கூற்றுப்படி, எடை குறைக்கும் பணியில் பொறுமையுடன் தொடர்ந்து உழைத்தால், எடை கண்டிப்பாக குறையும். நீங்கள் செய்யும் அவசரம் உங்களை சிக்கலில் விடும். சரியான முறையை தொடர்ந்து 30 நாட்கள் செய்து வந்தால், உடல் எடையில் வித்தியாசத்தை உணர்வீர்கள். சரியான முறையில் வெறும் 30 நாட்களில் எப்படி எடையை குறைப்பது என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : உடல் எடையை குறைக்க கேரட் ஜூஸ் எப்படி குடிக்கணும்? எவ்வளவு குடிக்கணும்?

வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு

நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் எடையை குறைக்க வீட்டில் சமைத்த உணவு சிறந்தது. ஹோட்டல் உணவு, ஜங்க் ஃபுட், சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தொடர்ந்து 30 நாட்களுக்கு பருப்பு வகைகள், காய்கறிகள், ரொட்டி மற்றும் சமபந்தி சாப்பாடு எடுத்துக் கொள்ளலாம். உங்கள் சாப்பாட்டில், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் சமநிலையை பராமரிப்பதை உறுதிப்படுத்தவும்.

போதுமான தூக்கம் அவசியம்

உடல் எடையை குறைக்க போதுமான தூக்கம் மிகவும் அவசியம். தூக்கமின்மை உடலில் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். மேலும், செரிமானத்தையும் பாதிக்கிறது. எனவேதான், ஒவ்வொருவருக்கும் முழுமையான தூக்கம் அவசியம். உங்களுக்கு என ஒரு தூக்க நேரத்தை அமைப்பது மிகவும் நல்லது.

இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Tips: ஆயுர்வேத முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி?

உடலில் உள்ள நஞ்சை நீக்க வேண்டியது அவசியம்?

உடல் எடையை குறைக்க, உடலை டீடாக்ஸ் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். உடலில் இருந்து நச்சுகள் வெளியேறி, உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம். எனவே, பெருஞ்சீரகம், வெள்ளரி, இஞ்சி, இலவங்கப்பட்டை ஆகியவற்றை நீரில் இட்டு அதை குடித்து வரவும். இதன் சுவை பிடிக்கவில்லை என்றால், அதிகமாக தண்ணீர் குடிப்பது நல்ல பயன் தரும்.

பழங்களை உட்கொள்ளவும்

பழங்களில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை உடலுக்குத் தேவையான வைட்டமின்களை வழங்குகின்றன. பருவகால பழங்களை காலை உணவின் போது அல்லது மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடலாம். ஆப்பிளுடன் வேர்க்கடலை வெண்ணெய் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். உங்களுக்கு விருப்பமான பழங்களை சாப்பிடுங்கள் ஆனால் கண்டிப்பாக தினமும் ஒரு பழத்தை உங்கள் உணவு பழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Weightloss Without Exercise: உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்!

சீக்கிரமே இரவு உணவு உண்ணவும்

உடல் எடையை குறைக்க சரியான நேரத்தில் இரவு உணவு அவசியம். இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால், தூங்கும் நேரத்திற்கும் இரவு உணவுக்கும் அதிக வித்தியாசம் இருக்காது. அப்போது உணவு சரியாக ஜீரணமாகாமல், உடல் பருமனை அதிகரிக்கிறது. எனவே சரியான நேரத்தில் இரவு உணவு சாப்பிடுங்கள். மேலும், இரவு உணவு முடிந்த உடனேயே படுக்க வேண்டாம். இரவு உணவுக்குப் பிறகு சில நிமிடங்கள் நடப்பது நல்லது.

உடற்பயிற்சி

எடை இழப்புக்கு உடற்பயிற்சி அவசியம். நீங்கள் வொர்க்அவுட்டைப் பின்பற்ற விரும்பவில்லை என்றால், லேசான உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யுங்கள். வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கும் எடை இழப்புக்கும் உடல் செயல்பாடு மிகவும் முக்கியமானது.

Image Credit: freepik

Read Next

Weight Loss Tips : இதை செய்தால் போதும் வெறும் 21 நாளில் உடல் எடையை ஈஸியா குறைக்கலாம்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content