How To Use Protein For Weight Loss: உடல் எடையைக் குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அந்த வகையில் உடல் எடையைக் குறைப்பதில் புரோட்டீன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக உடல் எடையை இழக்க விரும்புவர்கள் புரதங்களை எடுத்துக் கொள்வர். அதிலும் குறிப்பாக உடற்பயிற்சி செய்பவர்கள், ஜிம் பிரியர்கள், பாடி பில்டர்கள் போன்றோர் மட்டுமல்லாமல் எடை இழக்கும் ஒவ்வொருவரும் இந்த புரதங்களை எடுத்துக் கொள்ளலாம். இந்த எடை இழப்புக்கு புரதங்கள் உதவும் அருமையான சில வழிகளைக் காணலாம்.
உடல் எடை இழப்புக்கு புரதம் உதவும் வழிகள்
பசியைக் கட்டுப்படுத்த
எவ்வளவு உணவு எடுத்துக் கொண்டாலும் சிலருக்கு வயிறு நிரம்பியது போல இருக்காது. எனவே, அவர்கள் அளவுக்கு அதிகமான உணவை எடுத்துக் கொள்வர். இந்த அதிக புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நீண்ட நேரம் முழுமையாக இருப்பதை உணரலாம். இவை பசி வேதனைகளைத் தடுக்கின்றன. மேலும் இவை அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது.
முக்கிய கட்டுரைகள்

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips: ஆயுர்வேத முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி?
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க
வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கான சிறந்த வழி புரதங்களை எடுத்துக் கொள்வதாகும். இவை உடல் ஊட்டச்சத்துக்களை உடைத்து உறிஞ்சுவதற்கு கடினமாக உழைக்கிறது. இது உணவின் வெப்ப விளைவு எனப்படுகிறது. இவை உடலின் கலோரிகளை எரித்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
கொழுப்பு எரிக்கும் தன்மையை அதிகரிகிறது
புரோட்டீன்களை எடுத்துக் கொள்வது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. இவை உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பை உடைக்கும் என்சைம்களை செயல்படுத்துகிறது. மேலும் உடற்பயிற்சியின் போது கொழுப்பை ஆற்றல் மூலமாக பயன்படுத்த உடலை ஊக்குவிக்க புரோட்டீன்கள் உதவுகின்றன. எனவே, கொழுப்புகளை எரிக்கும் தன்மையை அதிகரிக்க, புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும், இதனுடன் விறுவிறுப்பான நடைபயிற்சிக்குச் செய்வதன் மூலம் உடல் கொழுப்பைக் கரைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Weightloss Without Exercise: உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்!
இரவு நேர உணவைக் கட்டுப்படுத்துதல்
உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பது இரவு நேர சிற்றுண்டி ஆகும். புரதம் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் இரவு நேர பசியைக் கட்டுப்படுத்தலாம்.
இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துதல்
இது போன்ற ஏராளமான வழிகளில் புரோட்டீன்கள் உடல் எடை குறைப்பதில் உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Exercise For Women: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!
Image Source: Freepik