Doctor Verified

நீங்க சாப்பிடும் இந்த ஹெல்த்தியான உணவுகள் எடையை அதிகரிக்கலாம்! மருத்துவர் சொன்னது

Healthy foods that cause weight gain: அன்றாட உணவில் நாம் சேர்க்கக்கூடிய சில ஆரோக்கியமான உணவுகளும் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம். எனவே அவற்றை உடனே கைவிடுவது அவசியமாகும். இதில் நம் உடல் எடையை இரகசியமாக அதிகரிக்கக்கூடிய உணவுகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
நீங்க சாப்பிடும் இந்த ஹெல்த்தியான உணவுகள் எடையை அதிகரிக்கலாம்! மருத்துவர் சொன்னது


Which healthy food makes you gain weight: நம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான உணவு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகக் கருதப்படுகிறது. எனினும், இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக உடல் எடை அதிகரிப்பு அமைகிறது. உண்மையில் உடல் பருமனின் காரணமாக நீரிழிவு நோய், இதய நோய் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சனைகள் எழக்கூடும். இந்நிலையில், உடல் எடையைக் கட்டுப்படுத்த மக்கள் பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். எனினும், உடல் எடையைக் குறைப்பது பலருக்கும் சிரமமான ஒன்றாகவே அமைகிறது.

இதற்கு நீங்கள் என்ன காரணமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்? பொதுவாக, உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது உணவுமுறையே எனக் கூறப்படுகிறது. எடையைக் குறைப்பதற்காக பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய் நிறைந்த உணவுகள், குப்பை உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்தும், சில ஆரோக்கியமான உணவுமுறைகளைக் கையாள்கின்றனர். ஆனால், நாம் ஆரோக்கியமானவை என்று கருதும் சில உணவுகள் கூட நம் உடல் எடையை அதிகரிக்கும்.

இதில் நம் எடை அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கக்கூடிய 3 ஆரோக்கியமான உணவுகள் குறித்து மருத்துவர் அன்சூல் அன்ஷுல் குப்தா எம்.டி., IFMCP அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Baby Weight Gain Food: குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் உணவு முறைகள்..!

உடல் எடையை அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவுகள்

மருத்துவரின் கூற்றுப்படி, “ஆரோக்கியமாக சாப்பிட்டும், இன்னும் எடை அதிகரித்துக் கொண்டிருக்கிறீர்களா? அது ஏன் அப்படி? இன்று நான் பகிர்ந்து கொள்ளும் 3 ஆரோக்கியமான உணவுகள் உங்கள் எடை அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கலாம், அவை உங்களுக்கு ஆரோக்கியமானவை என்று நினைத்தாலும் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரவுன் ப்ரட் (Brown bread)

மருத்துவர் குறிப்பிட்டபடி, எடையை அதிகரிக்கும் ஆரோக்கியமான உணவுகளில் முதல் உணவாக, பழுப்பு ரொட்டி அமைகிறது. அதில் அவர் குறிப்பிட்டதாவது, “அனைத்து பழுப்பு ரொட்டிகளும் சமமாக உருவாக்கப்படவில்லை. மேலும், இவை அனைத்தும் 100% முழு கோதுமையிலிருந்து தயாரிக்கப்படவில்லை. மேலும் இதில் பெரும்பாலானவை சர்க்கரை, உப்பு சேர்க்கப்பட்டிருக்கும். அதே சமயம், இவை அனைத்திலும் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு சேர்க்கப்பட்டிருக்கும். எனவே பிரவுன் ரொட்டியிலிருந்து விலகி, 100% முழு கோதுமை ரொட்டியை மட்டுமே பயன்படுத்துங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

பழச்சாறுகள் (Juices)

இரண்டாவது ஆரோக்கியமான உணவாக பழச்சாறுகளைக் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர் கூறியதாவது, “பழச்சாறுகளாக இருந்தாலும் சரி, காய்கறி சாறுகளாக இருந்தாலும் சரி, இந்த சாறுகள் அனைத்திலும் அதிக அளவு சர்க்கரை காணப்படும். இவை உடலில் இன்சுலின் அளவை மிக விரைவாக அதிகரிக்கிறது. இதன் காரணமாக, மக்கள் எடை இழக்க முடியாது. எனவே எந்த சாறுகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். மாற்றாக, காய்கறிகளை சாப்பிடுவது, முழு பழங்களை சாப்பிடுவது போன்றவற்றை முயற்சிக்கலாம்” என கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Baby Weight Gain: குழந்த வெயிட்டு போடலனு வருத்தமா? இத கொடுங்க…

ஓட்ஸ் (Oats)

மருத்துவரின் கூற்றுப்படி, “எடை இழப்பு பயணத்தில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய மூன்றாவது ஆரோக்கியமான உணவு ஓட்ஸ் ஆகும். ஆம். ஓட்ஸை எடைக்கு மிகவும் நல்லது என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில், ஸ்டீல் கட் ஓட்ஸ் மட்டுமே உங்கள் எடையைக் குறைக்க உதவும். பெரும்பாலான மக்கள் உடனடி ஓட்ஸைப் பயன்படுத்துகின்றனர். இந்த உடனடி ஓட்ஸ் சர்க்கரையால் நிறைந்ததாகும் மற்றும் எளிய கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்டுள்ளது. இது மீண்டும் இன்சுலின் அளவை மிக விரைவாக உயர்த்துகிறது மற்றும் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துகிறது. உண்மையில், இவை உடல் எடையைக் குறைக்காமல் எடை அதிகரிக்கச் செய்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Anshul Gupta MD, IFMCP (@anshulguptamd)

மருத்துவரின் கூற்றுப்படி, ஆரோக்கியமான உணவுகளாகக் கருதக்கூடிய இந்த மூன்று உணவுகள் உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கிறது. எனவே இதிலிருந்து விலகி இருப்பது அவசியமாகக் கருதப்படுகிறது.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை அதிகரிக்கணுமா? இந்த உணவுகளைக் கட்டாயம் சேர்த்துக்கோங்க

Image Source: Freepik

Read Next

“Weight Loss-க்கு ட்ரை பண்றீங்களா.? அப்போ Weight Gain ஆகாம இருக்க கற்றுக்கொள்ளுங்கள்..” - Fitness Coach ஆலோசனை..

Disclaimer