உடல் எடை குறைக்கத் துடிக்கும் பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்களில் ஒன்று, அந்தக் குறைந்த எடையை நீண்டநாள் பராமரிக்க முடியாமல் போவது. எடை குறைத்து மீண்டும் அதிகரிக்கும் இந்த சுழற்சியே பெரும்பாலானவர்களை விரக்தியில் ஆழ்த்துகிறது. இதை முறியடிக்க வேண்டிய வழிகளை Fitness Coach ராஜ் கண்பத் தனது ஆலோசனைகளில் வெளிப்படுத்தியுள்ளார்.
எடை குறைப்பு vs எடை பராமரிப்பு
Fitness Coach ராஜ் கண்பத் கூறுகையில், “எடை குறைக்க அனைவருக்கும் தெரியும். ஆனால் அது முக்கிய பிரச்சனை அல்ல. உண்மையான சிக்கல், அந்த எடையை எப்படி பராமரிப்பது என்று தெரியாததே. அதனால் தான் மீண்டும் எடை அதிகரிக்கிறது. இந்த சுழற்சியை முறியடிக்க ஒரே வழி, எடை பராமரிப்பில் தேர்ச்சி பெறுவதுதான்.”
அவர் வலியுறுத்தியது, எடையை மெதுவாகக் குறைத்து, ஒவ்வொரு கட்டத்தையும் பராமரித்த பிறகே அடுத்த கட்ட எடை குறைப்பை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதே.
Fitness Coach பகிர்ந்த 5 ஆலோசனைகள்
1. எடை அதிகரிக்காமல் இருப்பது – எடை குறைப்புக்கு முன் முக்கியம்
சாதாரணமாக மக்கள் விரைவான முடிவுகளை விரும்புகிறார்கள். ஆனால் நிலையான எடை குறைப்பு, பராமரிப்பிலிருந்தே தொடங்குகிறது. புதிய எடையை எப்படிப் பிடித்துக் கொள்வது என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.
2. தூக்கம் – உடற்பயிற்சிக்கான அடித்தளம்
நன்றாகத் தூங்கவில்லை என்றால், உடற்பயிற்சியில் உங்களை நீங்களே தள்ள முடியாது. தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுத்தால் மட்டுமே, உடல் உழைப்பை ஏற்கும்.
3. Supplement-க்கு முன் Real Food
புரதம், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், பால் பொருட்கள் போன்ற இயற்கை உணவுகளை முதலில் அதிகப்படுத்துங்கள். அதற்குப் பின்தான் தேவையான இடத்தில் சப்ளிமெண்ட் பயன்படுத்தலாம்.
4. Warm Up – தினசரி அவசியம்
ஒரு மணி நேர உடற்பயிற்சிக்கு முன், குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் Warm up செய்ய வேண்டும். இதுவே காயங்களைத் தடுக்கவும், உடலைத் தயார் செய்யவும் உதவும்.
5. Consistency-க்கு பிறகே Intensity
“தொடர்ந்து வருகிறீர்களா?” என்பதே முக்கியம். வாரத்தில் ஒரு நாள், இரண்டு நாள் அல்லது ஐந்து நாட்கள் – எது இருந்தாலும் பரவாயில்லை. தொடர்ச்சியை நிலைநிறுத்திய பின் தான் கடுமையான இலக்குகளுக்கு நகர வேண்டும்.
View this post on Instagram
இறுதிச் சொல்..
உடற்பயிற்சியில் வெற்றியை விரைவாகக் காண முயல்வதற்குப் பதிலாக, சிறிய மாற்றங்களை மெதுவாகவும் தொடர்ந்து கடைப்பிடிப்பதே நீண்டநாள் ஆரோக்கியம் மற்றும் எடை பராமரிப்பிற்கான ரகசியம் என Fitness Coach ராஜ் கண்பத் வலியுறுத்தியுள்ளார்.
வாசகர்களுக்கான குறிப்பு: இந்த பதிவு, தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. உங்கள் உடல்நலம் தொடர்பான கேள்விகளுக்கு எப்போதும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version