Hiccups Remedies: தண்ணீர் குடித்தும் விக்கல் நிற்கலயா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க

  • SHARE
  • FOLLOW
Hiccups Remedies: தண்ணீர் குடித்தும் விக்கல் நிற்கலயா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க

இது தவிர, மது அருந்துவது, அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது சோடா போன்ற கார்பனேட்டடு பானங்களைக் குடிக்கும் போதும் விக்கல் உண்டாகலாம். இதில் சிலருக்கு அடிக்கடி விக்கல் பிரச்சனை ஏற்படலாம். இந்த சூழ்நிலையைச் சந்திக்கும் நபர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. எனினும், தண்ணீர் குடித்த பிறகும் விக்கல் பிரச்சனையைச் சந்திப்பவர்கள் இன்னும் சில வீட்டு முறையை அணுகலாம். இந்த வீட்டு வைத்தியங்களின் மூலம் அவர்கள் உடனடி நிவாரணம் பெற உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: Tea for Headache: தலைவலிக்கு மாத்திரை எல்லாம் வேணாம்! இந்த ஒரு டீ குடிங்க போதும்

விக்கலை நிறுத்த உதவும் வீட்டு வைத்தியம்

தண்ணீர் குடித்த பிறகு விக்கல் நிற்கவில்லையெனில், சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்.

தண்ணீர் அருந்துதல்

விக்கலை நிறுத்த உதவும் முறைகளில் முதலாவதாக இருப்பது தண்ணீர் குடிப்பதாகும். அதன் படி, ஒரு கிளாஸ் தண்ணீர் அருந்துவது விக்கலை நிறுத்த உதவுகிறது. ஆனால் வழக்கமான முறையில் இல்லாமல், கையால் மூக்கை மூடிக்கொண்டு தண்ணீரைக் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் விக்கல் உடனே குறையும்.

மூச்சுப்பயிற்சி

விக்கலின் போது தண்ணீர் குடித்த பிறகும் நிற்கவில்லையெனில் சிறிது நேரம் மூச்சை அடக்க முயற்சிக்க வேண்டும். இதைச் செய்வதற்கு கீழே உட்கார்ந்து, சில நொடிகள் மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் 10 முதல் 20 விநாடிகள் வரை பிடித்து மீண்டும் சுவாசிக்க வேண்டும். இவ்வாறு விட்டு விட்டு சுவாசிக்க சிறிது நேரத்தில் விக்கல் குறைய வேண்டும்.

எலுமிச்சையை உறிஞ்சுதல்

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலத்தின் வலுவான பண்புகள், பற்களைப் பாதுகாக்க உதவுகிறது. எனவே எலுமிச்சையைக் கொண்டு வாயைக் கழுவலாம். மேலும் எலுமிச்சையில் உள்ள புளிப்பு கூறுகள் விக்கலுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இதில் உள்ள அதிகளவிலான அமிலத்தன்மை உணவுக்குழாயில் இடையூறு ஏற்படுகிறது. இதன் விளைவாக சுருக்கங்கள் மீட்டமைக்கப்படுகிறது. சிலர் எலுமிச்சைத் துண்டின் மீது சிறிது உப்புச் சேர்ப்பதும் சுவையாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Blocked Nose Remedies: இரவில் மூக்கடைப்பால் அவதியா? உடனே நீங்க இத செய்யுங்க

ஐஸ் வாட்டர்

தொடர்ந்து விக்கல் எடுப்பது உதரவிதான பிடிப்பை ஏற்படுத்துவதனுடன் வயிற்று எரிச்சலை உண்டாக்கும். இதற்கு ஐஸ் வாட்டரைப் பருகுதல் வாய் கொப்பளிப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையைக் குறைக்க முடியும். மேலும் ஐஸ் வாட்டர் வயிறு மற்றும் தொண்டையை ஆற்றவும் குளிர்ச்சியடையவும் செய்கிறது. எனவே ஐஸ் குளிர்ந்த நீரை வாய் கொப்பளிப்பது அல்லது பருகுவதன் மூலம் வழக்கமான விக்கல்களில் இருந்து உடனடி நிவாரணம் பெற முடியும்.

சர்க்கரை

விக்கல்களுக்கு சிகிச்சையளிக்க சர்க்கரை உதவுகிறது. இதற்கு சில சர்க்கரைத் துகள்களை எடுத்துக் கொண்டு, அதை நாக்கில் சிறிய கரைய வைத்து விழுங்கலாம். உதரவிதான பிடிப்பை நிறுத்த ஒரு டீஸ்பூன் சர்க்கரை போதுமானதாகும். இது விக்கல்லில் இருந்து விடுபடுவதற்கான விரைவான மற்றும் சிறந்த வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. வெதுவெதுப்பான நீரில் சிறிது சர்க்கரையைக் கிளறி குடிக்கலாம். மேலும், இது நாவிற்கு இனிப்பு சுவையை வழங்குகிறது.

வேர்க்கடலை வெண்ணெய்

இது விக்கல்களில் இருந்து விடுபட மற்றொரு வீட்டு வைத்தியம் ஆகும். பொதுவாக விக்கல் செய்யும் போது, சுவாச முறைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இந்நிலையில் சர்க்கரை மற்றும் தேனைப் போலவே வேர்க்கடலை வெண்ணெய் உதரவிதான பிடிப்புகளைத் தடுக்க உதவுகிறது. மேலும், இது மெல்லும் மற்றும் ஒட்டும் தன்மை கொண்டுள்ளதால் விக்கல்களிலிருந்து சுவாசத்தை திசைதிருப்ப ஒரு நல்ல உணவுப்பொருளாக தேர்வு செய்யப்படுகிறது. வேர்க்கடலை வெண்ணெய் கிடைக்கவில்லையெனில், சிறிது சாக்லேட் சாப்பிடலாம். இது அற்புதமான சுவையுடன், விக்கல்களின் தீவிரத்தையும் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Dust Allergy Remedies: தூசி ஒவ்வாமையால் அவதியா? இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Gap Teeth Remedies: முன் பற்கள் இடைவெளியை சரி செய்ய சூப்பர் டிப்ஸ்.!

Disclaimer

குறிச்சொற்கள்