$
இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள், சர்க்கரை நோயை ஏற்படுத்துகிறது. ஒருமுறை ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அவர் வாழ்க்கை முழுவதம் அதனுடன் போராட வேண்டியதாக இருக்கும். குறிப்பாக எந்த உணவு சாப்பிட வேண்டும், எதனை தவிர்க்க வேண்டும் என்பதில் பல கேள்விகள் இருக்கும். ஏனெனில் உணவு மூலம் இரத்த சர்க்கரை அதிகரிக்கும்.
சர்க்கரை நோயை முற்றிலும் நீக்க முடியாது. ஆனால் இதனை கட்டுக்குள் வைக்க முடியும். சீரான உணவை சரியான உடற்பயிற்ச்சியுடன் கடைப்பிடித்தால், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். சர்க்கரை நோயாளிகள் எந்த உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை இங்கே காண்போம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் என்ன சாப்பிட வேண்டும்?
ராகி தோசை
அரிசி மாவு தோசையில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். அதனால் இதற்கு பதிலாக ராகி தோசையை ட்ரை செய்யவும். இது நார்ச்சத்து நிறைந்தது. இந்த சர்க்கரை நோயாளிக்க சிறந்த தேர்வாக இருக்கும்.
நெளிகோதுமை
பசையம் இல்லாத தானியமான நெளிகோதுமையில், வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது சர்க்கரை நோயாளிக்கு சிறந்த தேர்வாக திகழ்கிறது. இதனை நவராத்திரி விரதத்தின் போது வட மாநிலத்தவர்கள் உண்பது வழக்கம்.
வேகவைத்த முட்டை
முட்டையை வேகவைத்து சாப்பிடுவது நல்லது. இதில் புரதம், நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. ஆகையால் இதனை வேகவைத்து சாப்பிடுவது நல்லது. இதனை ஆம்லெட் போட்டு சாப்பிடால், இதில் எண்ணெய் சேர்க்க நேரிடும். இது உடலில் கொழுப்பை அதிகரிக்க வழிவகுக்கும். ஆகையால் சர்க்கரை நோயாளிகள் வேகவைத்த முட்டையை சாப்பிடவும்.

கற்றாழை சாறு
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கற்றாழை சாறு குடித்து வர, இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதில் வறுத்த சீரகம், புதினா மற்றும் தேவையான அளவு உப்பு போன்றவற்றை கலந்து உட்கொள்ளவும்.
கருப்பு கொண்டைக்கடலை
கருப்பு கொண்டைக்கடலையை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் சாப்பிடவும். இது சர்க்கரை நோயாளிக்க பல நன்மைகளை கொடுக்கிறது.
உங்களுக்கு ஏதேனும் உணவு ஒவ்வாமை இருந்தால், உணவுகளில் மாற்றம் செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik