Sat Sep 12, 2026 | 01:52 AM IST

Milk Benefits: இவற்றை பாலில் கலந்து குடித்தால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும்!!

How to Drink Milk for Better Health: தினமும் ஒரு கப் பால் குடித்தால் உடலில் உள்ள பாதி பிரச்சினைகள் சரி செய்யப்படும் என நம்பப்படுகிறது. எனவே, தான் மருத்துவர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்க பரிந்துரைக்கிறார்கள். ஏனென்றால், பால் ஒரு முழுமையான உணவாகக் கருதப்படுகிறது.

இது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதன் நுகர்வு எலும்புகளை பலப்படுத்துகிறது, தூக்கத்தை மேம்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பதிகரிப்பது என பல நன்மைகள் உள்ளன. பாலின் சுவை நம்மில் பலருக்கு பிடிக்காது. எனவே, அதில் தேன், பூஸ்ட் போன்ற பல பவுடர் பொருட்களை கலந்து குடிப்பார்கள். எந்தெந்த பொருட்களை பாலில் கலந்து குடித்தால் அதிக பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த பதிவும் உதவலாம் : Water After Milk: பால் குடித்த பிறகு எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்?

பாலில் எதைக் கலந்து குடித்தால் பலம் கிடைக்கும்?

பாலில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்ப்பது அதன் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இலவங்கப்பட்டை வீக்கத்திற்கு உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

ஒரு கிளாஸ் பாலில் அரை டீஸ்பூன் சியா விதைகளை சேர்த்து குடித்தால், அதன் ஊட்டச்சத்து மதிப்பு கணிசமாக அதிகரிக்கிறது. சியா விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல முக்கியமான தாதுக்கள் உள்ளன, அவை உங்களுக்கு கூடுதல் ஆற்றலைத் தருகின்றன. இது இதய ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Milk Protein Powder Benefits: பாலுடன் புரோட்டீன் பவுடர் கலந்து சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

பாலில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்தும் குடிக்கலாம். இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தொற்றுநோய் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது. அதே நேரத்தில், இது எலும்புகளை பலப்படுத்துகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், செரிமானம் செயல்படுவதை மேம்படுத்துகிறது.

ஒரு சிட்டிகை மஞ்சள் பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில், உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கிறது. இது காய்ச்சல் மற்றும் சளிக்கு எதிராக போராடவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

பாலில் இரண்டு முதல் நான்கு பாதாம் பருப்புகளைச் சேர்த்துக் குடிப்பதால் அதன் ஊட்டச்சத்து மதிப்பும் அதிகரிக்கிறது. இதில், வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் மன ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Healthy Breakfast: ஸ்மூத்தி Vs ஜூஸ்: காலை உணவுக்கு எது சிறந்தது?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content