Benefits of Milk: இந்த நேரத்தில் பால் குடிப்பதால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும்!

  • SHARE
  • FOLLOW
Benefits of Milk: இந்த நேரத்தில் பால் குடிப்பதால் இரண்டு மடங்கு பலன் கிடைக்கும்!


Best Time To Drink Milk to get maximum benefits: பால் குடிப்பது சிறியவர்கள் முத்த பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது நாம் அனைவருக்கும் தெரியும். பால் குடித்தால் கிடைக்கும் பலனை முழுமையாக பலனை பெற சரியான நேரத்தில் குடிக்க வேண்டியது அவசியம். நம்மில் சிலர் இரவில் பால் குடிப்பது நல்லது என நினைப்போம். இன்னும் சிலர் காலையில் பால் குடிப்பது நல்லது என நினைப்பார்கள். ஆனால், பால் குடிக்க எது சிறந்த நேரம் என்று எப்போதாவது யோசித்தது உண்டா?

ஒரு ஆய்வு அறிக்கையில், பசும்பாலில் உள்ள சத்துக்கள் நமக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. பசும் பாலில் சுமார் 87 சதவிகிதம் தண்ணீர் இருப்பதாகவும், மீதமுள்ள 37 சதவிகிதத்தில் புரதங்கள், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒவ்வொரு இளைஞரும் தினமும் 226 கிராம் பால் குடிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Benefits of Raw Milk : பாலை காய்ச்சாமல் குடிப்பது நல்லதா? கெட்டதா?

இயற்கையாகவே, பால் ஊட்டச்சத்துக்களின் சுரங்கமாக கருதப்படுகிறது. எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்குக் காரணம் இதில் உள்ள கால்சியம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

பால் குடிக்க சரியான நேரம் எது?

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு மனிதனின் உடல் அமைப்பும் உணவு வழக்கமும் வேறுபட்டது. எனவே, ஒவ்வொருவரும் தங்களுக்கு தகுந்த நேரத்தில் பால் அருந்துவார்கள். ஜிம்மிற்கு செல்பவர்கள், காலையில் பால் குடிப்பார்கள். ஏனென்றால் அது தசை வளர்ச்சிக்கு உதவுகிறது என நினைக்கிறார்கள். இன்னும் சிலர் இரவில் தூங்கும் முன் பால் குடிப்பது நல்லது என்று கருதுகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம் : Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

எந்த நேரத்திலும் பால் குடித்தாலும் அது ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், இரவில் பால் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், இரவில் தூங்கும் முன் பால் குடிப்பதால், மெலடோனின் ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து, ஆழ்ந்த மற்றும் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

உடல் எடை குறைய பால் எப்போது குடிக்கணும்?

உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் விரும்பினால், பகலில் பால் குடிப்பது நல்லது. ஏனெனில், இது நாள் முழுவதும் உங்கள் பசியை குறைக்கிறது. இதன் காரணமாக நீங்கள் குறைவான உணவை உண்கிறீர்கள். இது நேரடியாக உடல் எடையை குறைக்க உதவும்.

இந்த பதிவும் உதவலாம் : Almond milk Benefits: சர்க்கரை நோயாளிகள் பாதாம் பால் குடிக்கலாமா?

இருப்பினும், சிலருக்கு பகலில் பால் குடிப்பதால் பிரச்சினை ஏற்படலாம். ஏனென்றால், ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது. பகலில் பால் குடிப்பதால் சிலருக்கு வயிற்று உப்புசம் மற்றும் வாயு பிரச்சனைகள் ஏற்படுவதை அவதானிக்க முடிகிறது. இப்படி ஒருமுறை அல்லது இருமுறை வந்தால், பகலில் பால் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

Pic Courtesy: Freepik

Read Next

Raisins Benefits: உலர் திராட்சையில் எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா?

Disclaimer