Thu Oct 29, 2026 | 12:52 PM IST

Raisins Benefits: உலர் திராட்சையில் எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா?

Raisins Benefits: உலர் திராட்சையில் எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா?Raisins Benefits: உலர் திராட்சையில் எவ்வளவு நன்மை இருக்கு தெரியுமா?

Benefits Of Eating Raisins In Winter: குளிர்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உலர் பழங்களை சாப்பிடுவது முக்கியம். இது உடலை சூடாக வைத்திருப்பதோடு, பருவகால நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. குளிர்காலத்தில் உலர் திராட்சையை எப்படி சாப்பிடுவது, அதன் மூலம் முழுப் பலன்களைப் பெறுவது எப்படி என்று இங்கே காண்போம். 

குளிர்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க திராட்சையை கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். சோடியம், பொட்டாசியம், இரும்பு, நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை ஊட்டச்சத்து நிறைந்த திராட்சைகளில் காணப்படுகின்றன. இதனை உட்கொள்வதால் உடல் பலவீனம் நீங்குவது மட்டுமின்றி ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கிறது. 

திராட்சையை உட்கொள்வதன் மூலம் செரிமான அமைப்பு தொடர்பான பிரச்சனைகளும் எளிதில் குணமாகும். உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, பருவகால நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது. திராட்சையை குளிர்காலத்தில் பல வழிகளில் சாப்பிடலாம். அதனை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். 

இதையும் படிங்க: Orange Juice Benefits: குளிர் காலத்தில் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது நல்லதா?

ஊறவைத்த திராட்சை

குளிர்காலத்தில் உடலை நோய்களில் இருந்து பாதுகாக்க ஊறவைத்த திராட்சையை உட்கொள்ளலாம். 5 முதல் 6 திராட்சையை அரை கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த திராட்சையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் உள்ள பலவீனம் நீங்குவதுடன் இரத்த சோகையும் நீங்கும். ஊறவைத்த திராட்சையை உட்கொள்வதால் செரிமானம் எளிதாகும்.

பாலில் வேகவைத்த திராட்சை

குளிர்காலத்தில் பல சமயங்களில் உடல் வலி பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் திராட்சையை பாலில் கொதிக்க வைத்து உட்கொள்ளலாம். இதற்கு 1 கிளாஸ் பாலில் 5 முதல் 6 திராட்சையை நன்கு கொதிக்க வைக்கவும். இப்போது இந்த பாலை சிறிது ஆறியதும் குடித்துவிட்டு திராட்சையை சாப்பிடுங்கள். கால்சியம் பாலில் அதிக அளவில் உள்ளது. இது உடலின் எலும்புகளை பலப்படுத்துகிறது.

திராட்சை மற்றும் தேன்

திராட்சை மற்றும் தேனையும் சேர்த்து சாப்பிட்டு வர மூட்டுவலி பிரச்னையில் இருந்து நிவாரணம் பெறலாம். திராட்சை மற்றும் தேனை உட்கொள்வதால் உடல் பலவீனம் நீங்குவது மட்டுமின்றி ஹீமோகுளோபின் அளவும் அதிகரிக்கும். இதனை உட்கொள்ள, 4 முதல் 5 திராட்சைப்பழத்தில் தேன் கலந்து சாப்பிடவும்.

குளிர்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க திராட்சையை இந்த வழிகளில் உட்கொள்ளலாம். இருப்பினும், உங்களுக்கு ஏதேனும் நோய் அல்லது ஒவ்வாமை இருந்தால், உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்த பின்னரே திராட்சையை உட்கொள்ளுங்கள்.

Image Source: Freepik

Read Next

→ Soup Benefits: சூப் குடிப்பது உண்மையிலேயே ஆரோக்கியமானதா? - மருத்துவர் சொல்வது என்ன?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.