Doctor Verified

Soup Benefits: சூப் குடிப்பது உண்மையிலேயே ஆரோக்கியமானதா? - மருத்துவர் சொல்வது என்ன?

  • SHARE
  • FOLLOW
Soup Benefits: சூப் குடிப்பது உண்மையிலேயே ஆரோக்கியமானதா? - மருத்துவர் சொல்வது என்ன?


ஏனென்றால் சூப் சாப்பிடுவது பசியைத் தூண்டும், செரிமானத்தை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் அதிக கொதிநிலையில் காய்கறிகள், மாமிசம், கீரைகள் ஆகியவற்றை போட்டு தயாரிக்கும் போது, சூப்பில் அனைத்து சத்துக்களும் அப்படியே இருக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது.

இதுகுறித்து பிரபல மருத்துவரான அருண் குமார் தனது சோசியல் மீடியாவில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.

சூப்பை கொதிக்க வைக்கும் போது என்னவாகும்?

சூப் என்பது காய்கறிகள், மாமிசம், கீரைகள் ஆகியவற்றுடன் வாசனைக்காக சில மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து தண்ணீர் அல்லது சிக்கன் ஸ்டாக் போன்றவற்றுடன் கொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு உணவுப்பொருட்களை அதிக வெப்பநிலையில் கொதிக்க வைக்கும் போது சில வைட்டமின்கள் ஆவியாகிவிடக்கூடும் என மருத்துவர் அருண் குமார் எச்சரித்துள்ளார்.

“உணவை கொதிக்க வைக்கும் போது வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்சில் உள்ள தையமின் மற்றும் போலிக் ஆசிட் ஆகியவை 50 சதவீதம் அளவிற்கு ஆவியாகிவிடும்” என்கிறார்.

இதையும் படிங்க: Benefits of Banana: தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?

ஆனால் இதற்காக அச்சப்படத்தேவையில்லை, சமைத்து முடித்ததும் சூப்பிற்கு மேல் கொத்தமல்லி, பொதினா போன்ற தழைகளை சேர்ப்பது, எலுமிச்சை சாற்றை கலப்பதன் மூலமாக இழந்த சத்துக்களை சமன் செய்து கொள்ளலாம்.

சூப்பில் என்னென்ன சத்துக்கள் கலக்கின்றன?

சூப்பை கொதிக்க வைக்கும் போது சில சத்துக்கள் ஆவியானாலும், பெரும்பாலான தாதுக்கள் தண்ணீருடன் கலந்து விடும். உதாரணத்திற்கு சூப்பை கொதிக்க வைக்கும் போது, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், பொட்டாசியம்,மெக்னீசியம் போன்றவை தண்ணீருடன் கலந்துவிடும். இதனால் தான் சோர்வாகவோ அல்லது உடல்நலக்குறைவுடனோ இருப்பவர்கள் சூப் குடித்த பிறகு சுறுசுறுப்பாக உணர்கிறார்கள்.

ஆனால் காய்கறி சூப்பில் பைபர் மற்றும் இரும்பு சத்துக்கள் முழுவதுமாக கிடைப்பது கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

சிக்கன், மட்டன் சூப் குடிப்பது நல்லதா?

காய்கறிகள் மற்றும் கீரைகளின் சத்துக்கள் மட்டுமே சூப்பில் கரையும் என்றும், மீட் சம்பந்தமான சூப்புகளில் சத்துக்கள் தண்ணீரில் கரைவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

“சிக்கன் அல்லது மட்டனை கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் சூப்பில், அதிலுள்ள கொழுப்பு அல்லது புரதச்சத்து கலப்பதில்லை. இதுவே எலும்பை கொண்டு சூப் தயாரிக்கும் போது சிறிதளவு கொழுப்புச்சத்து கலக்கலாம். ஆனால் மாமிசத்தில் உள்ள முழு சத்துக்களும் கிடைப்பது கிடையாது. குறிப்பாக புரதச்சத்து கிடைக்காது”

சூப்பை எப்படி குடித்தால் நல்லது?

சூப் குடிப்பதால் முழு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்க வேண்டும் என விரும்பினால் வெறும் கிளியர் சூப்பை மட்டும் குடிக்கக்கூடாது என எச்சரிக்கிறார்.

ஏனெனில் காய்கறி, சிக்கன்,மட்டன், கீரை என எதைக் கொண்டு தயாரிக்கக்கூடிய சூப்பாக இருந்தாலும், வெறும் தண்ணீரை மட்டும் குடிக்காமல், அனைத்து உணவுப்பொருட்களையும் சேர்த்து குடிக்க வேண்டும். அப்போது தான் உணவுப்பொருட்களில் உள்ள சத்துக்கள் மற்றும் தண்ணீரில் கலந்த சத்துக்கள் என இரண்டும் சேர்த்து உடலுக்குத் தேவையான நன்மைகளை கொடுக்கும்.

இதையும் படிங்க: Dinner Mistakes: எச்சரிக்கை… இரவு உணவில் மறந்தும் இந்த 3 தவறுகளை செய்யாதீங்க!

அதேபோல் சூப் தயாரிக்கும் போது எக்ஸ்ட்ரா சுவையூட்டுவதற்காக கடைகளில் கிடைக்கக்கூடிய சூப் பவுடர் அல்லது சூப் மசாலாக்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இதிலுள்ள ரசாயனங்கள் சூப்பில் உள்ள சத்துக்களை பாதிக்கக்கூடும் என்பதால், இயற்கையான ஆரோக்கிய நன்மைகளை விரும்புவோர் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சூப்களை பருகுவது நல்லது.

Image Source: Freepik

Read Next

Dinner Mistakes: எச்சரிக்கை… இரவு உணவில் மறந்தும் இந்த 3 தவறுகளை செய்யாதீங்க!

Disclaimer

குறிச்சொற்கள்