Is it good to eat chicken soup everyday: அசைவ உணவு என்றால் யாருக்குத் தான் பிடிக்காது. இன்று பெரும்பாலானோர் உணவில் தினமும் அசைவ உணவு இல்லாமல் பார்க்க முடியாது. இதில் மட்டன், சிக்கன் மற்றும் மீன் போன்றவற்றின் மீதான விருப்பமே அதிகரித்து வருகிறது. இதில் மட்டன், சிக்கனிலிருந்து பல்வேறு வகையான ரெசிபிகளைத் தயார் செய்யலாம். ஆம், அவ்வாறே ஆட்டுக்காலில் இருந்து சூப் தயாரிப்பது போல, கோழிக்கால் சூப்பையும் செய்யலாம். ஆனால் பெரும்பாலானோர் ஆட்டுக்கால் சூப்பையே அதிகம் விரும்பி குடிப்பர்.
உண்மையில், ஆட்டுக்கால் சூப்பைப் போலவே கோழிக்கால் சூப் உடலுக்கு மிகுந்த நன்மைகளை வழங்குகிறது. இது சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் கோழிக் கால்களை சாப்பிடுவதால் தீரும் வியாதிகள் என்னென்ன? எப்படி சாப்பிட வேண்டும்? சரும ஆரோக்கியத்துக்கு கோழியின் கால்கள் தரும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்த தகவல்களைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Chicken Rasam: சளி, இருமலை குணமாக்கும் கோழி ரசம்.. எப்படி செய்வது?
கோழிக்கால்களின் ஊட்டச்சத்துக்கள்
கோழிக்கால்களில் வைட்டமின்கள் ஏ, பி, டி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. மேலும் இதில் காணப்படும் அமினோ அமிலங்கள் மற்றும் கால்சியம் சத்துக்கள் போன்றவை எலும்புகள், பற்களுக்கு வலுவைத் தருகிறது. மேலும், இதில் உள்ள மக்னீசியம் மற்றும் புரோட்டீன்கள் போன்றவை பெண்களுக்குத் தேவையான சத்துக்கள் ஆகும்.
கோழிக்கால் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
மூட்டு ஆரோக்கியத்தை ஆதரிக்க
ஆட்டுக்கால் சூப்பைப் போலவே, கோழிக்கால் சூப் குடிப்பதன் மூலம் மூட்டு ஆரோக்கியத்தை ஆதரிக்கலாம். இதற்கு இதில் உள்ள அதிகளவிலான ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கமே காரணமாகும். இது உடலில் வீக்கத்தைக் குறைக்கவும், மூட்டு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது.
எலும்புகளை வலுப்படுத்துவதற்கு
கோழி கால்களில் நிறைந்திருக்கும் தாதுக்கள் எலும்பு அடர்த்திக்கு பங்களிக்கிறது. இதன் மூலம் எலும்பு தொடர்பான பல்வேறு நோய்களிலிருந்து விடுபடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கோழிக்கால் சூப், உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் இது சளி மற்றும் காய்ச்சல் நேரங்களில் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சளி, காய்ச்சலைத் தடுக்க உதவுகிறது.
குடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்க
இதில் காணப்படும் ஜெலட்டின் ஆனது குடல் புறணியை ஆற்ற உதவுவதுடன், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Soup Benefits: சூப் குடிப்பது உண்மையிலேயே ஆரோக்கியமானதா? - மருத்துவர் சொல்வது என்ன?
சரும ஆரோக்கியத்திற்கு
கோழிக் கால்களில் இரும்புச்சத்துக்கள் மற்றும் கொலாஜன் சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த கொலாஜன் உடலில் சுருக்கத்தை தள்ளி போடக்கூடிய சக்தியையும், கெட்ட கொழுப்பை வெளியேற்றக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளது. எனவே தான், சிக்கன் சமைத்து சாப்பிடும் போது கூட கோழி கால்களையும் சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும் என்கின்றனர். இதன் மூலம், தோல் தொடர்பான வியாதிகள் நீங்குவதுடன், ரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கவும் செய்யலாம்.
குறிப்பு
கோழிக்கால் சூப் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாக இருப்பினும், அதை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இது உடல் பருமனுக்கு வழிவகுக்கலாம். அது மட்டுமல்லாமல், கால்களில் பல்வேறு ஹார்மோன்கள் உள்ளது. இந்த ஹார்மோன்களை அதிகம் எடுப்பதால், அது உடலின் ஆரோக்கியத்தை அழித்து, பல ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் அபாயத்தை உண்டாக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Chicken Breast Vs Chicken Legs: கோழியின் எந்த பாகம் மிகவும் ஆரோக்கியமானது?
Image Source: Freepik