Chicken Breast Vs Chicken Legs: அசைவப் பிரியர்களும் சிக்கனும் பிரிக்கவே முடியாத விஷயமாகும். கோழிக்கறியும் பலரும் பலவகையில் சமைத்து சாப்பிடுகிறார்கள். கோழிக்கறியை விரும்பாதவர்கள் மிகவும் சொர்ப்பம். கோழிக்கறியை பொறுத்தவரை மிகவும் பிரபலமானது லெக் பீஸ் தான். கோழிக்கறியில் எது மிகவும் ஆரோக்கியமானது என்பதை முழுமையாக படித்துத் தெரிந்துக் கொள்வோம்.
கோழிக்கறி என்று பார்க்கையில் இதன் இரண்டு பகுதிகள் மைய நிலையை எடுக்கும். ஒன்று கால் பகுதி மற்றொன்று லெக் பீஸ். இரண்டும் தனித்தனியான சுவைகளையும் பலன்களையும் கொண்டுள்ளன. இதுகுறித்து நமது குழுவிடம் பீகாரில் உள்ள IEXPLODE இன் ஊட்டச்சத்து நிபுணர் விபுல் ஷர்மா கூறிய தகவலை பார்க்கலாம்.
இதையும் படிங்க: குயினோவா ஏன் சாப்பிட வேண்டும்?
சிக்கன் லெக் பீஸ் நன்மைகள்

கோழியின் லெக் பீஸ் மிகவும் காஸ்ட்லியான இறைச்சியாக கருதப்படுகிறது. இதை மார்பகத் துண்டுடன் ஒப்பிடும்போது சுவையில் மட்டுமல்ல, கொழுப்பிலும் சற்று அதிகமாகும். லெக் பீஸின் குறிப்பிட்ட பண்புகள் இதோ.
சுவை: கால் இறைச்சியானது அதிக கொழுப்பு மற்றும் இணைப்பு திசுக்களைக் கொண்டிருப்பதால் சுவையான இறைச்சியாக கருதப்படுகிறது.
டார்க் மீட்: லெக் பீஸில் டார்க் மீட் உள்ளது, இது தசைகளில் ஆக்ஸிஜனை சேமிக்கும் புரதமான மயோகுளோபின் நிறைந்துள்ளது. இது பிற பகுதி இறைச்சியை விட சற்று வித்தியாசமான சுவையை தருகிறது.
ஊட்டச்சத்து: கால் இறைச்சி இரும்பு, துத்தநாகம் மற்றும் பி வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நல்ல மூலமாகும். இருப்பினும், கொழுப்பு உள்ளடக்கம் காரணமாக இது கலோரிகளிலும் அதிகமாக உள்ளது.
தோல் அல்லது எலும்பு இல்லாமல் ஒரு கோழி லெக் பீஸ் (44 கிராம்) 12.4 கிராம் புரதம் உள்ளது. இதன் 100 கிராமில் 28.3 கிராம் புரதம் இருக்கிறது.
கோழி இறைச்சியின் மார்பகத் துண்டு

லெக் பீஸுடன் ஒப்பிடும்போது இது கொழுப்பு குறைவாக உள்ளது மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது.
புரதச் சத்து: சிக்கன் மார்பகம் லீன் புரதத்தின் சிறந்த மூலமாகும், இது உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் எடையைக் கட்டுப்படுத்த விரும்புவோர்களின் சாதகமான உணவாக இருக்கிறது.
குறைந்த அளவிலான கொழுப்பு: லெக் பீஸுடன் ஒப்பிடும்போது கோழி மார்பகத்தில் கொழுப்பின் அளவு கணிசமாக குறைந்தே இருக்கிறது. கொழுப்பு குறைவாக இருப்பதால் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பவர்களின் தேர்வாகவும் இருக்கிறது.
அதிக புரதம்: இந்த பகுதியில் புரதம் நிறைந்துள்ளது. இது தசை பராமரிப்பு, பழுது மற்றும் ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளுக்கு அவசியம்.
குறைந்த கலோரிகள்: கோழி மார்பகத்தில் பொதுவாக லெக் பீஸுடன் ஒப்பிடும்போது குறைந்த அளவிலான கொழுப்பே இருக்கிறது.
ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, சமைத்த தோல் இல்லாத கோழி மார்பகத்தில் (172 கிராம்) 54 கிராம் புரதம் உள்ளது. இதன் 100 கிராம் 31 கிராம் புரதத்திற்து சமம்.
Chicken Breast Vs Chicken Legs எது ஆரோக்கியமானது?

லெக் பீஸ் அல்லது பிரெஸ்ட் பீஸ் எது ஆரோக்கியமானது என்ற கேள்விக்கான பதில், மக்களின் உணவு விருப்பங்கள் மற்றும் ஆரோக்கிய இலக்குகளைப் பொறுத்தது.
எடை குறைத்தல்: நீங்கள் எடையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலோ அல்லது ஆரோக்கியமான எடையைப் பராமரிக்க விரும்பினாலோ கோழி மார்பகம் பெஸ்ட். அதன் குறைந்த கலோரி மற்றும் கொழுப்பு உள்ளடக்கம் காரணமாக இது சிறந்த வழி.
உடற்பயிற்சி: தசையை கட்டியெழுப்புதல் மற்றும் புரத உட்கொள்ளல் ஆகியவற்றில் கவனம் செலுத்துபவர்களுக்கும் கோழி மார்பகம் தான் பெஸ்ட். காரணம் இதில் புரதம் நிரம்பியுள்ளது.
சுவை மற்றும் வெரைட்டி: நீங்கள் சுவை மற்றும் வெரைட்டிக்கு முக்கியத் துவம் கொடுப்பவராக இருந்தால் லெக் பீஸ் தான் சிறந்த வழி.
இதையும் படிங்க: தினையின் வகை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம்?
லெக் பீஸ் வெர்சஸ் பிரஸ்ட் பீஸ் விவாதத்தில் எது ஆரோக்கியமானது என்பதற்கு உறுதியான பதில் இல்லை. இரண்டும் தனித்துவமான குணாதிசயங்களை கொண்டுள்ளன. உங்கள் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து கோழி இறைச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் உங்கள் உடலில் ஏதேனும் தீவிரத்தையோ அசௌகரியத்தையோ உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik