ஆட்டுக்கால் சூப் (Mutton Leg Soup) என்பது அசைவ பிரியர்களின் மிக விருப்பமான உணவுகளில் ஒன்றாகும். ஆனால், இதை குடிப்பதால் உண்மையிலேயே மூட்டு வலி (Joint Pain) குறைகிறதா? அல்லது இது வெறும் நம்பிக்கையா? என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கான பதிலை, குழந்தை மருத்துவர் மற்றும் உணவு ஆலோசகர் டாக்டர் அருண்குமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆட்டுக்கால் சூப்பின் சிறப்பு என்ன?
பொதுவாக நாம சாப்பிடும் கறிகளில் புரதம் (Protein) அதிகம் இருக்கும். ஆனால் ஆட்டுக்கால் சூப்பில், கால் எலும்பை கொதிக்க வைக்கும் போது அதிலிருந்து Collagen, Gelatin, Glycosaminoglycans, Chondroitin, Amino acids போன்ற முக்கிய ஆரோக்கியச் சத்துகள் வெளிவருகின்றன.
இவை அனைத்தும் எலும்பு-மூட்டு ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக கொலாஜன் (Collagen) என்பது நம் தோல், எலும்பு, மூட்டு ஆகியவற்றை வலுப்படுத்தும் இயற்கை புரதமாகும்.
ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன?
2016-ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சிலருக்கு ஆட்டுக்கால் சூப் கொடுக்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது. அதில், அவர்களது மூட்டு வலி அறிகுறிகள் குறைந்தன என்பது தெரியவந்துள்ளது. மேலும், சூப்பில் உள்ள Glycine என்ற சத்து வயிற்று ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
மருத்துவர் பரிந்துரை..
சாதாரணமாக வீட்டில் வைக்கும் ஆட்டுக்கால் சூப்பை விட, Bone Broth (எலும்புக் கஷாயம்) தான் சத்துக்கள் நிறைந்தது. எலும்புகளை மெதுவான சூட்டில் (Slow Heat) 10–12 மணி நேரம் வரை கொதிக்கவைத்து, அந்த நீரை குடிப்பதன் மூலமே கொலாஜன் மற்றும் ஜெலட்டின் சத்துகள் முழுமையாக கிடைக்கும். எலும்பு கஷாயத்தை (Bone Broth) குடிப்பது மூட்டு வலி குறையவும், மூட்டு வலுப்பெறவும் உதவுகிறது என்று மருத்துவர் விளக்கினார்.
முக்கிய நன்மைகள்
* ஆட்டுக்கால் சூப்பில் Collagen, Gelatin, Amino acids போன்றவை நிறைந்துள்ளன.
* மூட்டு cartilage-ஐ வலுப்படுத்த உதவும்.
* Joint pain & Joint inflammation-ஐ குறைக்க உதவும்.
* Glycine சத்து வயிற்று ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
* Bone Broth-ஐ slow cooking செய்து குடிப்பதே உண்மையான பலனை தரும்.
View this post on Instagram
இறுதியாக..
ஆட்டுக்கால் சூப் சுவையாக இருக்கும், ஆனால் அதிலுள்ள சத்துக்கள் சரியாகக் கிடைக்க Bone Broth தான் சிறந்த வழி. கொலாஜன், ஜெலட்டின், அமினோ அமிலங்கள் மூட்டு வலியை குறைக்கவும், மூட்டுகளை வலுப்படுத்தவும் உதவும் என்பதில் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. எனவே, சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் இடையே சமநிலை வைத்து, மருத்துவர் ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொள்வது நல்லது.