Milagu Rasam Recipe in Tamil: நம்மில் பலருக்கு ரசம் சாதம் பிடிக்கும். என்னதான் மட்டன், சிக்கன் என எது சாப்பிட்டாலும் கடைசியில் கொஞ்சம் சாதத்தில் ரசம் ஊற்றி சாப்பிட்டால் தான் நம்மில் பலருக்கு சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். ரசம் சுவையிக்கு மட்டும் அல்ல; ஆரோக்கியத்திற்கும் நல்லது. நாம் பெரும்பாலும் தக்காளி ரசம், பருப்பு ரசம், சிக்கன் ரசம், மிளகு ரசம், கல்யாண ரசம், மைசூர் ரசம் என பல ரசம் வைத்துக் கொடுத்திருப்போம்.
ஆனால், எப்போதாவது கிராமத்து ஸ்டைலில் மிளகு ரசம் வைத்துளீர்களா? இந்த வாரம் உங்கள் குடும்பத்தினருக்கு மிளகு ரசம் செய்து கொடுங்க. வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டும் அல்ல மிளகு ரசம் செய்தால் உங்க தெருவே மணக்கும். இதன் செய்முறை பற்றி இங்கே பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Mango Burfi: மாம்பழத்தை பச்சையா சாப்பிட்டு சலித்துவிட்டதா? அப்போ பர்ஃபி செய்து சாப்பிடுங்க!
தேவையான பொருட்கள்
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பூண்டு - 5
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 2
பெருங்காயம் தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி - 2
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - சிறிது
கொத்தமல்லி இலை - கொஞ்சம்
மிளகு ரசம் செய்முறை:
முக்கிய கட்டுரைகள்
- புளியை வெந்நீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும். புளி நன்கு ஊறியதும் அதை நன்றாக பிழிந்து சாறு எடுக்கவும்.
- அம்மியில் அல்லது மிக்சர் ஜாரில் மிளகு, சீரகம் மற்றும் பூண்டுகளை கொரகொரப்பாக அரைக்கவும்.
- அரைத்ததும் அதை ஒரு பக்கமாக வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்/. எண்ணெய் நன்கு சூடானதும் கடுகு போடவும்.
- கடுகு தாளிக்கத் துவங்கியதும், காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்க்கவும்.
- காய்ந்த மிளகாய் நன்றாக வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளிகளை இதில் சேர்க்கவும். சிறிதளவு கறிவேப்பிலை போடவும்.
- தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- அதன்பிறகு, தயார் செய்த மிளகு கலவையை சேர்த்து நன்றாக கிளறவும்.
- புளி சாறை ஊற்றவும். தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
- 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். மிளகு ரசம் தயாராகிறது.
- கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
- சூடான மிளகு ரசம் தயார்! இதனை சூடான சாதத்துடன், உருளை கிழங்கு பொரியல் அல்லது அப்பளத்துடன் பரிமாறலாம்.
ரசம் சாப்பிடுவதன் ஆரோக்கிய நன்மைகள்
செரிமானம்: ரசத்தில் உள்ள பொருட்கள், கருப்பு மிளகு போன்றவை, செரிமானத்திற்கு உதவுவதற்கும், வாயு, வாய்வு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றைத் தடுக்கவும் வயிற்றில் அதிக அமிலத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி: ரசத்தில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் ஆன்டிபயாடிக் ஆக செயல்படுகிறது. ரசத்தில் உள்ள மசாலாப் பொருட்களில் அழற்சி எதிர்ப்பு மற்றும் காய்ச்சலைக் குறைக்கும் தன்மையும் உள்ளது.
நீரேற்றம்: ரசத்தின் திரவ நிலைத்தன்மை உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.
குடல் ஆரோக்கியம்: ரசம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடல் நுண்ணுயிரியை செயலில் வைக்கிறது.
சத்துக்கள்: ரசத்தில் தியாமின், ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் 1 கிளாஸ் லெமன் வாட்டர் குடிச்சி பாருங்க.. ஆச்சரியத்தை நீங்களே உணர்வீர்கள்..
மலச்சிக்கல்: ரசத்தில் உள்ள புளியில் நார்ச்சத்து மற்றும் மலச்சிக்கலுக்கு உதவும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
எடை இழப்பு: ரசத்தில் உள்ள கருப்பு மிளகு உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவும்.
Pic Courtesy: Freepik