Orange Juice Benefits: குளிர் காலத்தில் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது நல்லதா?

  • SHARE
  • FOLLOW
Orange Juice Benefits: குளிர் காலத்தில் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது நல்லதா?


ஆரோக்கியமான இதயம்

ஆரஞ்சு ஜூஸில் உள்ள ஹெர்ஸ்பெரிடின், இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவும். மேலும் இது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், நரம்புகளில் இருக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். மேலும் இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். 

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

ஆரஞ்சு ஜூஸில் உள்ள வைட்டமின் சி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது வெள்ளை அணுக்களை அதிகரிப்பதால், நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும். 

இதையும் படிங்க: Orange Seeds Benefits: ஆரஞ்சு விதைகளை தூக்கி எறியாதீர்கள்? இதனால் கூந்தலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்!

காயங்கள் குணமாகும்

ஆரஞ்சு ஜூஸில் உள்ள பிளவனாய்டுகள், உடலில் ஏற்படும் காயங்களை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது குடலில் ஏற்படும் பாதிப்பை தீர்க்கும்.

சிறுநீரக பிரச்சனை நீங்கும்

ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால், சிறுநீரக கற்கள் நீங்கும். மேலும் சீறுநீரகம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாது. இதனால் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது நல்லது. 

செரிமானத்தை மேம்படுத்தும்

தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால், குடல் இயக்கம் சீராகும். இதனால் செரிமானம் மேம்படும். இது மலச்சக்கிகல் போன்ற குடல் சார்ந்த பிரச்சனைகளை தடுக்கும். 

Image Source: Freepik

Read Next

Drinking hot water: சுடு தண்ணீர் குடித்தால் உடலில் உள்ள நச்சு வெளியேறுமா? உண்மை என்ன?

Disclaimer

குறிச்சொற்கள்