உடல் எடையை குறைக்க சரியான உணவு மற்றும் உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது. அன்றாட வாழ்வில் மக்கள் விரும்பி உண்ணும் பல உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தற்போது அனைவரிடத்திலும் உள்ளது. இதற்காக உடற்பயிற்சி, யோகா, டயட் என பல்வேறு விஷயங்களை செய்ய ஆரம்பிக்கின்றனர். ஆனால் என்ன தான் டயட் இருந்து சாலட் சாப்பிட்டாலும், வெயிட் குறையவே மாட்டேங்குது என ஏங்குபவர்களும் பலர் உண்டு. அதற்கு பின்னால் இருப்பது அதிக சர்க்கரை மற்றும் கொழுப்புள்ள உணவுகளை உண்பது தான் ஆகும்.

நீங்கள் உண்ணும் உணவில் உள்ள ஆற்றலுக்காக பயன்படுத்தப்படாத வெற்று கலோரிகள் உங்கள் உடலில் கொழுப்பாக சேமிக்கப்படுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய சில உணவுகள் பற்றி பார்ப்போம்.
பிரெஞ்சு ப்ரைஸ்:
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக பிரெஞ்ச் ப்ரைஸ் உள்ளது. ஆனால் இது உடல் நலத்திற்கு துளிகூட நல்லதல்ல என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. இது மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவாகும், இதில் கிட்டத்தட்ட நார்ச்சத்து இல்லை.
இதில் உள்ள மற்றொரு பிரச்சனை அதிகப்படியான எண்ணெய் மற்றும் உப்பு. இது தேவையில்லாத கொழுப்பை அதிகரிக்கிறதோ தவிர, வேறு எந்த வகையிலும் நன்மை தருவதில்லை.
மிட்டாய், சாக்லெட்:

கடைகளில் விற்கப்படும் கலர், கலரான மிட்டாய், சாக்லெட், குக்கீஸ், டோனட்ஸ், கேக்குகள் ஆகியவை நாவிற்கும், கண்களுக்கும் வேண்டுமானால் சுவையான விருந்தாக இருக்கலாம். ஆனால் உடலுக்கு முற்றிலும் தீங்கிளைக்கக்கூடியது. ஏனெனில் அதிலுள்ள அதிக சர்க்கரை, மைதா, ஆயில் ஆகியவை நிறைவுற்ற கொழுப்பு ஆகும். இதனை உட்கொள்வதால் உடலில் கொழுப்பு கூடி எடை அதிகரிக்கிறது.
கூல்ட்ரிங்ஸ்:
சுவையூட்டப்பட்ட மற்றும் புத்துணர்ச்சியூட்டும் குளிர்பானங்கள், ஆற்றல் பானங்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் பானங்கள் அதிக சர்க்கரை கொண்டவை. இதில் சத்துக்கள் இல்லை என்பது இன்னொரு உண்மை.
இந்த பானங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். இதனால் உடல் நலம் கெடும். மேலும், இந்த உயர் கலோரி திரவங்கள் உணவைப் போல உங்கள் பசியைப் பூர்த்தி செய்யாது, இது நீங்கள் எப்போதும் அதிகமாக சாப்பிடுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
மது:
ஆல்கஹால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். நீங்கள் அதிக எடையைக் குறைக்க விரும்பினால் மதுவைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். ஆல்கஹால் அதிக கலோரிகளைக் கொண்டுள்ளது மற்றும் பசியின் பசியை துரிதப்படுத்துகிறது.
ஆல்கஹால் ஒரு கிராமுக்கு ஏழு கலோரிகளைக் கொண்டுள்ளது, கிட்டத்தட்ட தூய கொழுப்பைப் போன்றது. இதில் ஊட்டச்சத்து மதிப்பு எதுவும் இல்லை. இது ஆல்கஹால் நச்சுத்தன்மையை நீக்க உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கிறது. பல மது பானங்கள், குறிப்பாக காக்டெய்ல், சர்க்கரை அதிகம்.