Health Benefits of Red Banana: பொதுவாக வாழைப்பழம் சாப்பிடுவது நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை கொடுக்கிறது. குறிப்பாக செவ்வாழை பழம் (Red Banana) நமக்கு பல நன்மைகளை வழங்குகிறது. இதில் அதிக ஊட்டச்சத்துக்கள், பீட்டா கரோட்டின் போன்றவை நிறைந்துள்ளன. தினமும் இந்த செவ்வாழை பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

செவ்வாழை பழத்தில் வைட்டமின் சி மற்றும் B6 போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது. இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும். இதனால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது உங்களை வைரஸ் மட்டும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து காக்க உதவும்.
இரத்த அழுத்தம் குறையும்
உங்களுக்கு இரத்த அழுத்தம் (BP) அதிகமாக இருந்தால், தினமும் ஒரு செவ்வாழை பழத்தை உட்கொள்ளவும். இது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி குறைக்கிறது.
இதையும் படிங்க: Fertility Foods: விந்தணு அதிகரிக்க இந்த உணவுகள் போதும்!
சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்
செவ்வாழை பழத்தில் (Red Banana) பொட்டாசியம் நிறைந்துள்ளது. இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கலாம்.
கருவுறுதல் பிரச்சனை தீரும்
இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் கருவுறுதல் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் செவ்வாழை பழம் சாப்பிடுவது இனப்பெருக்க அமைப்பை ஆரோக்கியமாக்குகிறது. இது கருவுறுதலை அதிகரிக்கிறது.
சருமம் ஜொலிக்கும்

தோல் அழற்சி உள்ள நபர்கள் தினமும் செவ்வாழை பழம் (Red Banana) சாப்பிடுவது மிக நல்லது. இது சருமத்தில் ஏற்படும் வறட்சி, சொறி போன்றவற்றை நீக்க உதவுகிறது. இது சருமத்தை உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது.
பார்வை மேம்படும்
இன்றைய நவீன உலகில், சிறு வயதினரும் அதிகமாக பார்வை திறன் குறைவால் பாதிக்கப்படுகின்றன. இந்த நிலை மாற தினமும் செவ்வாழை பழம் சாப்பிடலாம். இது பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.
உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், நீங்கள் செவ்வாழை பழம் (Red Banana) எடுத்துக்கொள்ளும் முன், உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: Freepik