Expert

Winter Diet: குளிர்கால நோய்களில் இருந்து விடுபட இந்த மசாலா பொருளை சாப்பிடுங்க!

  • SHARE
  • FOLLOW
Winter Diet: குளிர்கால நோய்களில் இருந்து விடுபட இந்த மசாலா பொருளை சாப்பிடுங்க!

இலவங்கப்பட்டையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் எடையைக் எளிமையாக குறைப்பதுடன், செரிமான அமைப்பை ஆரோக்கியமாகவும் வைக்கிறது. இது நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதன் நுகர்வு குளிர்காலத்தில் வைரஸ் தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Cinnamon Water Benefits: பட்டை தண்ணீரில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

இதில், உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குளிர்காலத்தில் ஏற்படும் பருவகால நோய்களின் அபாயத்தைக் குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. இலவங்கப்பட்டையை உட்கொள்வதால் உடலை உட்புறமாக சூடாக வைத்திருக்கும். ஃபிட் கிளினிக்கின் டயட்டீஷியன் சுமன், குளிர்காலத்தில் இலவங்கப்பட்டையை உணவில் எப்படி சேர்த்துக் கொள்வது என்று விளக்கியுள்ளார். அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.

இலவங்கப்பட்டை டீ

குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் தயாரித்து குடிக்கலாம். இந்த தேநீர் தயாரிக்க, முதலில் 2 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் 1 இலவங்கப்பட்டை குச்சியை உடைத்து அதில் சேர்க்கவும். பாதி தண்ணீர் பாதியாக குறைந்ததும், ​​வடிகட்டி, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து இந்த டீயை குடிக்கவும். இந்த டீ குடிப்பதால் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் குளிர்ச்சியை தடுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Cinnamon For Weight Loss: உடல் எடை சீக்கிரம் குறையணுமா? இலவங்கப்பட்டையை இப்படி பயன்படுத்துங்க

சமையலில் பயன்படுத்துங்கள்

குளிர்காலத்தில் நீங்கள் அன்றாடம் சமைக்கும் உணவுகளான, பருப்பு வகைகள், காய்கறிகள் அல்லது அரிசியுடன் இலவங்கப்பட்டை சேர்த்து உட்கொள்ளுங்கள். அதன் தூள் அல்லது முழுவதுமாக சேர்த்து உட்கொள்ளலாம். குளிர்காலத்தில் இதை உட்கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் பருவகால நோய்களைத் தடுக்கிறது.

இலவங்கப்பட்டை ஸ்மூத்தி

குளிர்காலத்தில் உடலை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்க இலவங்கப்பட்டை ஸ்மூத்தியையும் செய்து குடிக்கலாம். ஸ்மூத்தி உருவாக்க, உங்களுக்குப் பிடித்த வாழைப்பழம் மற்றும் ஆப்பிளை 1 கப் பாலுடன் கலக்கவும். மேலும், 1/4 தேக்கரண்டி இலவங்கப்பட்டை சேர்த்து கலக்கவும். இப்போது, உங்கள் இலவங்கப்பட்டை ஸ்மூத்தி தயார்.

இந்த பதிவும் உதவலாம் : Cinnamon for hair : அடர்த்தியான கூந்தலை பெற இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!

இலவங்கப்பட்டை காஃபி

குளிர்காலத்தில் உடலை உட்புறமாக சூடாக வைத்திருக்க, இலவங்கப்பட்டையை டீ அல்லது காபி செய்து சாப்பிடலாம். இதைச் செய்ய, டீயைக் கொதிக்கவைத்து, காபி தயாரிக்கும் போது ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டையைச் சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரித்து, குளிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

Turmeric Water Benefits: குளிர் காலத்தில் மஞ்சள் நீர் குடிப்பது இவ்வளவு நல்லதா?

Disclaimer